Published:Updated:

ஆளுநர்: திமுக 'டீல்' செய்தது சரியா? - அதானி: குற்றச்சாட்டு என்ன? - சிந்து பைரவி - 80s சினிமா!

Vikatan Highlights January 27
Listicle
Vikatan Highlights January 27

ஆளுநரின் தேநீர் விருந்து... திமுக 'டீல்' செய்தது சரியா?!, எடப்பாடி கையொப்பம் நிராகரிப்பு, பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை: நடப்பது என்ன?, ஆட்டம் கண்ட பங்குச் சந்தை... அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன..?, மாமனாரை திருமணம் செய்துகொண்ட மருமகள்!, சிந்து பைரவி: - 80s, 90s தமிழ் சினிமா!


1
குடியரசு தின விழாவில்...

ஆளுநரின் தேநீர் விருந்து... திமுக 'டீல்' செய்தது சரியா?!

டந்த ஒரு மாதமாகவே ஆளுங்கட்சியான திமுக-வுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்குமான அரசியல், நிர்வாக மோதல்கள் உச்சம் அடைந்தன. காசி தமிழ்ச் சங்கம் விழாவுக்கு சென்று வந்தவர்களை பாராட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, "தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே பொருத்தமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல கட்சி சாராத பல்வேறு எழுத்தாளர்கள், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு குடியரசு தின தேநீர் விருந்துக்கு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஒன்றான விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

அதனை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதே சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் இதில் பங்கேற்றது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தை திமுக 'டீல்' செய்த விதம் சரியானதுதானா..? இது குறித்து திமுக தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன..? விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் இது குறித்து சொல்வது என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
ரணகள அ.தி.மு.க

எடப்பாடி கையொப்பம் நிராகரிப்பு: இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல்?

ரோடு கிழக்குத் தொகுதிக்கு, பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி, இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க நேரடியாகக் களமிறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாங்கள் போட்டியிட இருப்பதாகவும், பா.ஜ.க போட்டியிட்டால் தாங்கள் விட்டுத்தருவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். இதனால், சின்னம் கிடைப்பதில் அதிமுக-வுக்கு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'இடைக்கால பொதுச் செயலாளர் என்ற என் கையொப்பமிட்டப் படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது' என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
குஜராத் கலவரம்

குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை;   நடப்பது என்ன?

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் சென்ற வாரம் வெளியானது.

இது வெற்றுப் பிரசாரத்தைப் பரப்புவதாகவும் இந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் அது தொடர்பான அனைத்து இணைப்புகளுக்கு மத்திய ஒளிப்பரப்பு அமைச்சகம் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி தடை விதித்தது.

இந்தத் தடைக்கு எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதன் விளைவாக, பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்திய முழுவதிலும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்து வருகிறது.

அதன் பின்னணி என்ன? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கௌதம் அதானி

ஆட்டம் கண்ட பங்குச் சந்தை... அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன..?

தானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு (Follow on Public offer - FPO) மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டுகிறது. அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஜனவரி 27ஆம் தேதி அன்று ஆரம்பித்து ஜனவரி 31 அன்று முடிவடைகிறது. அந்த நிறுவனத்தின் பங்கிற்கான குறைந்தபட்ச விலை ரூ. 3,112 எனவும் அதிகபட்ச விலையாக ₹ 3,276 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி, புதன் கிழமையன்று அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது.

அதானி மீதான குற்றச்சாட்டுகள்தான் என்ன..? எத்தகைய மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது..? உள்ளிட்ட விவரங்களை

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
மாமனாரைத் திருமணம் செய்துகொண்ட மருமகள்

70 வயது மாமனாரை திருமணம் செய்துகொண்ட மருமகள்!

த்தரப்பிரதேசத்தில் தன்னுடைய கணவர் இறந்துவிட்டதால், 28 வயது பெண் தன்னுடைய 70 வயதான மாமனாரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகிலுள்ள சபியா உம்ராவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ். இவரின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
ஆரோக்கியம் ஒரு பிளேட்

நம் வீட்டிலேயே இருக்கிறது ப்ரோபயாட்டிக் உணவுகள்!

மீபகாலங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது ப்ரோபயாட்டிக் (Probiotics). இது உடம்புக்கு நல்லது என்று கருதி உலகின் பல்வேறு வகையான உணவுகள் மற்றும் பானங்களைத் தேடித்தேடிச் சாப்பிடுகிறார்கள்.

பல்வேறு சுவைகளில் கிடைக்கும் யோகர்ட் தொடங்கி கெபிர், கொம்புச்சா, டெம்பே, கிம்சி என்றெல்லாம் நாம் இதுவரை கேள்விப்படாத பல்வேறு பெயர்களில் இந்த ப்ரோபயாட்டிக் உணவுகள் கிடைக்கின்றன.

விலை கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் இளைய தலைமுறையை இது வசீகரித்திருக்கிறது. ஆன்டிபயாட்டிக் தெரியும், அது என்ன ப்ரோபயாட்டிக்?

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
சிந்து பைரவி

சிந்து பைரவி: பாலசந்தரின் மாஸ்டர்பீஸ்! - 80s, 90s தமிழ் சினிமா!

மிழில் பாலசந்தர் ஒரு முக்கியமான இயக்குநர் என்பதும், சிறந்த திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும். அந்த வரிசையில் 'சிந்து பைரவி' ஓர் உன்னதமான திரைப்படம்.

தமிழில் எத்தனையோ திரைப்படங்கள் இதுவரை வெளியாகியிருந்தாலும், ஒரு சில படங்களைத்தான் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் மூலம் சட்டென்று நினைவுகூர்கிறோம். உதாரணத்திற்கு 'வேலு நாயக்கர்' என்றவுடன் மணிரத்னத்தின் 'நாயகன் கமல்' கண் முன்னால் உடனே வந்து விடுகிறார். அது போலச் சட்டென்று நினைவைத் தூண்டி விடும் ஒரு பாத்திரம்தான் 'ஜே.கே.பி'. ஆம், 'ஜே.கே.பாலகணபதி' என்கிற 'சிந்து பைரவி' திரைப்படத்தின் பாத்திரம்தான் அது.

இந்த படத்தில் ஜே.கே.பி பாத்திரம், சிவகுமாரின் லைஃப்டைம் கேரக்ட்டர் எனச் சொல்லலாம். ஜே.கே.பி மட்டுமல்ல, சிந்தாமணி என்கிற சிந்து, பைரவி, மிருதங்கம் குருமூர்த்தி, தம்புரா கஜபதி என்று இந்தப் படத்தின் பல பாத்திரங்கள் கூடவே நினைவிற்கு வரும்.

படம் குறித்த மேலும் சுவாரஸ்ய தகவல்களுடன் கூடிய விரிவான கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க..