Published:Updated:

நிலைகுலைந்து நிற்கும் பன்னீர்! - போலீஸ் ஆடியோ சர்ச்சை - தவறான உணவு காம்பினேஷன்! - துருக்கி துயரம்!

Vikatan Highlights February 7
Listicle
Vikatan Highlights February 7

உற்சாக எடப்பாடி... நிலைகுலைந்த பன்னீர்... அடுத்து என்ன?, "இபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளதா..?" , " திருடச் சொல்றாங்க..!" - போலீஸ்காரரின் ஆடியோ சர்ச்சை, துருக்கியின் பதறவைக்கும் நிலநடுக்கக் காட்சிகள்! , நிதித் தேவை சமாளிக்க 10 அம்சங்கள்!, தவறான உணவு காம்பினேஷன்!


1
ஓ. பன்னீர்செல்வம்

உற்சாக எடப்பாடி... நிலைகுலைந்த பன்னீர்... அடுத்து என்ன? 

ற்றைத் தலைமை விவகாரத்தால் தனித்து செயல்படும் பன்னீர், இடைத் தேர்தலை மையமாக வைத்து இணைப்புக்கான முயற்சிகளை செய்து வந்தார்.

ஆனால், தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்புக்கு வழங்கிய அங்கீகாரத்தால் ஏற்கனவே வேட்பாளரை களமிறக்கிய பன்னீர் தரப்பு, வேறு வழியில்லாமல் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறது.

இதனால் எடப்பாடி உற்சாகமாக உள்ளார். ஆனால், பன்னீர் நிலைகுலைந்து போய் உள்ளார்.

இத்தகைய சூழலில் பன்னீர் தரப்பினர் அடுத்து மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் என்ன..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

இந்த நிலையில்,

எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதா..?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்த அளித்த பதிலை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


2
உயிரிழந்த காவலர்

"டீசலைத் திருடச் சொன்னார் இன்ஸ்பெக்டர்!"- உயிரிழந்த போலீஸ்காரரின் ஆடியோ சர்ச்சை

சென்னை, ராயபுரம், தம்புலைன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் காவலர் லோகேஷ் (39). கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவறைக்குச் சென்ற லோகேஷ், மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்தார்.

இந்த நிலையில் காவலர் லோகேஷ், தன்னுடைய உயரதிகாரி ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்திருக்கிறார்.

தனது மேலதிகாரிகளான இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி கமிஷனர் மீது குற்றம் சாட்டியுள்ள அந்த ஆடியோ, சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஆடியோவில் காவலர் லோகேஷ் பேசிய உரையாடலை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க...


3
தமிழ் ஸ்டூடியோ அருண்

மோடி ஆவணப்படம்: மொழிபெயர்த்த அனுபவம் பகிரும் தமிழ் ஸ்டூடியோ அருண்! 

குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்பதை மையப்படுத்திய பி.பி.சி-யின் `இந்தியா: மோடிக்கான கேள்விகள்' ஆவணப்படத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், சென்னை அம்பேத்கர் திடலில் திரையிட்டது வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

சுமார் இரண்டு மணிநேரம், இரண்டு பாகங்கள் கொண்ட 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' ஆவணப்படத்தை மிக நேர்த்தியாக அனைவருக்கும் புரியும்படி தமிழில் மொழிபெயர்ப்பும் டப்பிங்கும் செய்துள்ளனர் 'தமிழ் ஸ்டூடியோ' அருண் மற்றும் குழுவினர்.

இது குறித்து 'தமிழ் ஸ்டூடியோ' அருணின் பகிர்தலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
துருக்கி - நிலநடுக்கம்

சரிந்த கட்டடங்கள், திணறும் மீட்பு படை: துருக்கியின் பதறவைக்கும் நிலநடுக்கக் காட்சிகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் துருக்கியின் உள்கட்டமைப்புக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கின்றனர்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

சரிந்த கட்டடங்கள், திணறும் மீட்பு படை: துருக்கியின் பதறவைக்கும் நிலநடுக்கக் காட்சிகள்! #VisualStory

பார்க்க இங்கே க்ளிக் செய்க...


5
சேமிப்பு

நிதித் தேவைகளை சமாளிக்க 10 முக்கியமான அம்சங்கள்..!

ரு நல்ல நிதித் திட்டம் (Financial Plan) என்பது ஒருவரின் நிதிச் சார்ந்த இலக்குகளை நிறைவேற்றத் தேவையான தொகையை சரியான நேரத்தில் கிடைக்கச் செய்வதுதான்.

ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு நிதி தேவைகளுக்கான இலக்குகள் இருக்கும். திருமணமாகி பிள்ளைகள் இருப்பவர்களின் நிதித் திட்டம் என்பது கீழ்க்கண்ட 10 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நிதி ஆலோசகர் (Aismoney.com)சிவகாசி மணிகண்டன் சொல்லும் அந்த 10 அம்சங்கள் என்னென்ன என்பதை

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

தவறான உணவு காம்பினேஷன்... எச்சரிக்கும் மருத்துவர்! 

"உணவு என்பது சுவைக்கானது மட்டுமல்ல மக்களே... அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. செரிமானம் சம்பந்தப்பட்டது. அதனால் தவறான காம்பினேஷனில் சாப்பிடுவதை இனியாவது தவிர்த்து விடுங்கள்" என எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

உணவு விஷயத்தில் நம்மில் பலரும் காலங்காலமாகப் பின்பற்றிவரும் தவறான காம்பினேஷன் குறித்தும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் விளக்குகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

அவற்றை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
யோகிபாபு

கோலிவுட் ஸ்பைடர்: யோகிபாபுவின் மாற்றம்! 

முன்பெல்லாம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படம் என பட விளம்பரங்கள் வெளியானால், "அதில் நான் ஹீரோ இல்லப்பா..." எனச் சொல்லிவந்தார் அவர். ஆனால், 'மண்டேலா', 'பொம்மை நாயகி' போன்ற கதைகள் கொடுத்த நம்பிக்கையில் காமெடிக்கு இடையே கதை நாயகனாகவும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.

மேலும்...

கடப்பாவில் கமல்... நேபாளத்தில் ரஜினி!

சமந்தாவின் புதிய வெப் சீரீஸ்

கஸ்தூரி ராஜாவின் நடிகர் அவதாரம்!

கோலிவுட் ஸ்பைடர் தரும் சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...