ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த திட்டம்! - வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை! - கோடீஸ்வரராக தடுக்கும் 6 விஷயங்கள்!

நிர்வாகிகளுடன் ஆலோசனை: ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த திட்டம்! வடமாநில தொழிலாளர்கள் வருகை... ப.சி. குற்றச்சாட்டு உண்மைதானா? திவாலான பாகிஸ்தான்!, ஓரங்கட்டப்படுகிறாரா அஷ்வின்?, நீங்கள் கோடீஸ்வரர் ஆவதைத் தடுக்கும் 6 விஷயங்கள்!, இள வயது மூட்டுவலி... ஏன்?, 'ஜெயிலர்': Exclusive தகவல்கள்

நிர்வாகிகளுடன் ஆலோசனை: ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த திட்டம்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தனது சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர் செல்வம், இரட்டை இலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்காக பன்னீர் தரப்பு சமர்பித்த நட்சத்திர பேச்சாளர் பட்டியலை நிராகரித்து ஷாக் கொடுத்தது தேர்தல் ஆணையம்.
இதனால், கடந்த இரண்டு வார காலமாக அரசியல் முடக்கத்தை சந்தித்தது பன்னீர் தரப்பு.
இந்த நிலையில், சென்னையில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தி உள்ளார் பன்னீர் செல்வம்.
பன்னீரின் அடுத்த திட்டம்தான் என்ன..?
அவரது ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்..?

வடமாநில தொழிலாளர்கள் வருகை... ப.சிதம்பரம் குற்றச்சாட்டு உண்மைதானா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது, "பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், அந்த மாநில மக்களுக்கு பிழைக்க வழியில்லை. எனவே, தமிழ்நாட்டில் வேலை கிடைக்கிறது என்பதால், அவர்கள் இங்கே வருகிறார்கள்" என்று ப.சிதம்பரம் கூறினார்.
இது உண்மைதானா..?
பாஜக தரப்பில் இதற்கு அளிக்கப்படும் விளக்கம் என்ன..?

திவாலான பாகிஸ்தான்... கை கொடுக்குமா சீனா?!
"பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது, திவாலான ஒரு நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அரசு நிர்வாகத்தினரும் அரசியல்வாதிகளின் நீண்ட தவறுகளே இதற்கு முக்கிய காரணம்" என பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரான கவாஜா அசீப்.
இது உண்மைதானா..?
பாகிஸ்தானின் தற்போதைய நிலை என்ன..?

எல்லாம் இருந்தும் ஓரங்கட்டப்படுகிறாரா அஷ்வின்?
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி பெரும் உத்வேகத்தோடு ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியால் இம்மியளவு கூட ஆதிக்கத்தை வெளிக்காட்ட முடியவில்லை. ஆனால், நடைபெறும் நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாக இந்திய அணியை நோக்கியே கேள்விகளை வீச வைத்திருக்கின்றன.
இந்திய அணிக்கு துணை கேப்டனை ஏன் அறிவிக்கவில்லை என்பதை முக்கியமாக கேட்க வேண்டியிருக்கிறது. ராகுலைத் தவிர்த்து அணியில் வேறு யாருக்குமே அந்தத் துணை கேப்டன் பதவியை ஏற்கத் தகுதியே இல்லையா?
அஷ்வின் அவர் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை எட்டியிருக்கிறாரா எனில், இல்லவே இல்லை என்பதுதான் பதில்.
நீங்கள் கோடீஸ்வரர் ஆவதைத் தடுக்கும் 6 விஷயங்கள்!
நம்மில் பலரும் கோடீஸ்வரர் ஆக ஆசைப்படுவோம். ஆனால், பலரையும் கோடீஸ்வரர் ஆக விடாமல் தடுப்பதில், நிதி மேலாண்மை தொடர்பான அவர்களின் பழக்கங்களுக்கு முக்கியப் பங்குண்டு.
அந்த பழக்கங்கள் என்னென்ன..?
நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன் (Aismoney.com) சொல்லும்

எலும்பு பிரச்னைகள்: இள வயது முதுகுவலி, மூட்டுவலி... ஏன்?
மன உறுதி இல்லாதவர்களை முதுகெலும்பு இல்லாதவர் என உதாரணப்படுத்துவது வழக்கம். முதுகெலும்பு மட்டுமல்ல... நம் உடலின் ஒட்டுமொத்த எலும்பியல் மண்டலமுமே அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுதான். எலும்பில்லாமல் உருவமே சாத்தியமில்லை.
இந்த எலும்புகளை பாதிக்கும் பிரச்னைகள், தீர்வுகள்,
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள்,
எந்தெந்தப் பிரச்னைகளக்கு எலும்பியல் மருத்துவரை அணுக வேண்டும்..?
இள வயது முதுகுவலி, மூட்டுவலி... ஏன்?
போன்றவை குறித்து சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் தரும் விளக்கங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

'ஜெயிலர்': Exclusive தகவல்கள்!
ரஜினியின் 'ஜெயிலர்' (Jailer) படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. `அண்ணாத்த' படத்துக்குப் பின் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் நடித்துவருகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து பாண்டிச்சேரி, கடலூர் எனப் பரந்து விரிந்து நேபாளம் வரை சென்றது.
`ஜெயிலர்' ரிலீஸ் நிலவரம், இசை வெளியீடு உள்ளிட்ட அப்டேட்டுகள் குறித்த விசாரித்ததில் கிடைத்த