கழுகார்: அண்ணாமலையை எச்சரித்த டெல்லி! - ஈரோடு: வெற்றி வாய்ப்பு யாருக்கு? -Tax Filing: மாற்றங்கள்...

மிஸ்டர் கழுகு: எடப்பாடி... அண்ணாமலையை எச்சரித்த டெல்லி!, சசிகலா, தினகரன், ஓபிஎஸ்... ஓரணியில் இணைய வாய்ப்பு உண்டா?!, இடைத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?, சுஜாதா நினைவலைகள்!, டாக்ஸ் ஃபைலிங்...என்ன மாற்றங்கள்?, விவாகரத்துக்கு காரணமாகிறதா செக்ஸ்?, அஜித்தின் 'ஏகே 62' தகவல்கள்!

மிஸ்டர் கழுகு: எடப்பாடி... அண்ணாமலையை எச்சரித்த டெல்லி!
எடப்பாடி பழனிசாமிக்கு சாதமாக அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வந்த பிறகு திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிய அன்புமணி போன்ற பலர் எடப்பாடிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டார்கள்.
ஆனால், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை வாழ்த்துச் சொல்லவில்லை.
இதற்கான பின்னணி காரணம் என்ன..? கழுகார் தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள்...
அத்துடன்,
சபாநாயகர்மீது வழக்கு?- எடப்பாடியின் அடுத்தகட்ட நகர்வு!
தேர்தல் பட்டுவாடா ஆலோசனை... தி.மு.க அமைச்சர்கள் மோதல்!
கோயில் பிரச்னையில் பல்டி... அப்செட்டில் உள்ளூர் அமைச்சர்!
பேனர் வைத்து அமைச்சர் அட்டூழியம்... ஆளுநர் மாளிகைக்குப் பறந்த புகார்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்... ஓரணியில் இணைய வாய்ப்பு உண்டா?!
அதிமுக இனி எடப்பாடி வசம் என்றாகிவிட்ட நிலையில் சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஓரணியில் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வியும் எழத் தொடங்கியுள்ளது.

இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எத்தனை சதவீதம்? -யாருக்கு வெற்றிவாய்ப்பு?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில், ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக, இந்த தொகுதியின் மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா-வின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வான கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் நின்றனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு எத்தனை சதவீதம்..?
தங்களது வெற்றி வாய்ப்பு குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தென்னரசு கூறியதன் தொகுப்பு கீழே...
படிக்க தலைப்பில் க்ளிக் செய்க...
"எதிரணியினர் இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திப்பார்கள்!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
"25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்!" - அதிமுக வேட்பாளர் தென்னரசு
"யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும்!" - பாஜக எம்எல்ஏ சரஸ்வதி

ஊழல் வழக்கில் 'உள்ளே' சென்ற டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா!
`சி.பி.ஐ, என்னை விரைவில் கைதுசெய்யும்' என்று தொடர்ந்து சொல்லிவந்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, நேற்று சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை வழக்கில், அவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி.
மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு என்ன..?
கைது ஏன் என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

தமிழை அறிவியல் கலந்து பரிமாறியவர் - எழுத்தாளர் சுஜாதா நினைவலைகள்!
இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100 நாவல்கள், அறிவியல் கட்டுரைகள், மேடை நாடகங்கள் எனப் பல்வேறு படைப்புகளைக் கொடுத்தவர்.
தன் எழுத்தைப் போலவே சுவாரஸ்யமான வாழ்க்கை வாழ்ந்துவிட்டுச் சென்றவர்.

டாக்ஸ் ஃபைலிங்... புதிய படிவங்களில் என்ன மாற்றங்கள்?
மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT), மதிப்பீட்டு ஆண்டு 2023-24-க்கான வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு (Income Tax Return- ITR) வழக்கம் போல, தனித்தனி புதிய படிவங்களை வெளியிட்டுள்ளது.
இனி யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து Abhishek Murali CA ஆடிட்ட ர் அபிஷேக் முரளி சொல்லும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

விவாகரத்துக்கு காரணமாகிறதா செக்ஸ்? |காமத்துக்கு மரியாதை
"சமீப காலமாக விவாகரத்துகள் பெருகி விட்டன. அதற்கு காரணம் செக்ஸ் பிர்ச்னைகள்தான் என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கருத்தில் உண்மை எந்தளவுக்கு இருக்கிறது தெரியுமா'' எனக் கேட்கும், மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி, உண்மை நிலை என்ன என்பதை விளக்குகிறார்.
நாராயண ரெட்டி சொல்லும் விளக்கத்தை படிக்க இங்கே க்ளிக் செய்க...

கோலிவுட் ஸ்பைடர்: அஜித்தின் 'ஏகே 62' - லேட்டஸ்ட் தகவல்கள்!
ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் இவர்கள் வரிசையில் ஆண்ட்ரியாவும் இணைந்துவிட்டார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுத்து வரும் அவர், 'பிசாசு 2', 'மாளிகை', 'கா' என மூன்று படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். அடுத்து அவர் தினேஷ் செல்வராஜ், பாபி ஆண்டனியின் இயக்கத்தில் படங்கள் நடிக்கிறார். அந்தப் படங்களும் ஹீரோயின் சென்ட்ரிக்தானாம்.
கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் சூடான சினிமா செய்திகள்...
அஜித்தின் 'ஏகே 62'... அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது..?
'ஏகே 62'-ல் அருண்விஜய்?
கார்த்தியின் அடுத்த படம்!