Mr. கழுகு: எடப்பாடி சொன்ன 'டெபாசிட்' சீக்ரெட்! - ஸ்டாலின் ஆவேசம் - கடன் தவணை: RBI மகிழ்ச்சி செய்தி!

Mr. கழுகு: எடப்பாடி சொன்ன 'டெபாசிட் தப்பிய' சீக்ரெட்!, வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: ஸ்டாலின் ஆவேசம்!, சிபிஐ, பழிவாங்கலுக்குப் பயன்படுத்துகிறதா பாஜக?,கடன் தவணை... RBI-யின் சந்தோஷமான செய்தி!, கழுத்து வலி... அலட்சியம் வேண்டாம்!, சினிமா விமர்சனம்: அயோத்தி, மிஸ்டர் மியாவ்

Mr. கழுகு: எடப்பாடி சொன்ன 'டெபாசிட் தப்பிய' சீக்ரெட்!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீட் வாங்கி போட்டியிட்ட தமாகாவுக்கு கிடைத்த வாக்குகளைவிட இந்த முறை அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுங்கட்சிக்கு ஈடாக 'ஓர் இடைத்தேர்தலில் அதிகம் செலவிட்ட எதிர்க்கட்சி என்ற புதிய சாதனையை அ.தி.மு.க-வினர் படைத்துவிட்டார்கள்' எனச் சொல்லத்தக்க அளவுக்கு கரன்சிகள் வாரி இறைக்கப்பட்டாலும்,
அதிமுக-வுக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு என்ன காரணம்..?
வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு கட்டத்தில் அதிமுக-வின் டெபாசிட்டே காலியாகி விடுமோ என திமுகவினர் எதிர்பார்க்கும் அளவுக்கு நிலைமை மோசமான நிலையில்,
டெபாசிட் தப்பியதற்கான காரணமாக எடப்பாடி பெருமைப்பட்டுக்கொண்ட விஷயம்...
தி.மு.க-வுக்கு எதிரான திருமாவளவனின் சீற்றம்... காம்ரேடுகளின் அதிருப்திக்கு காரணம்...
இன்று வெளியான ஜூனியர் விகடனில் மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: ஸ்டாலின் ஆவேசம்!
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகச் சிலர் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வீடியோக்களை சமூக வலைதளங்களால் வெளியிட்டனர். இந்த விவகாரம் வடமாநில செய்தி ஊடகங்களில் பேசுபொருளானது. பீகார் சட்டசபையிலும் பேசப்பட்டது.
இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் கணேசன் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"இல்லாத ஒரு பிரச்னையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாகச் சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது" என அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

வடமாநிலத் தொழிலாளர் விவகாரம்: "முதல்வர் தனது பேச்சை நிரூபிக்க வேண்டிய தருணம் இது"

சிபிஐ, அமலாக்கத்துறை... பழிவாங்கலுக்குப் பயன்படுத்துகிறதா பாஜக? - முழு அலசல்
பிபிசி அலுவலகத்தில் வருமான வரிச்சோதனை, மணீஷ் சிசோடியா கைது உட்பட கடந்த சில வாரங்களில் நடந்திருக்கும் பல சம்பவங்களால், மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடிவருகின்றன.
புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தனது பழிவாங்கலுக்குப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனம் உண்மைதானா..?

கடன் தவணை... RBI-யின் மகிழ்ச்சியான செய்தி!
நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என ஏதாவது ஒரு கடனை வாங்கியிருக்கிறோம்.
இந்தக் கடன்களுக்கான தவணையைத் தொடர்ந்து கட்டி வந்தாலும், நிதிச் சிக்கல் காரணமாக ஏதாவது ஒரு தவணை கட்டுவது தவறி விடுகிறது. அப்போது கடன் வழங்கிய நிறுவனம், அபராத வட்டி (Penal Interest) விதிக்கிறது.
இதில்தான் வங்கிகள் ஒரு மாற்றத்தை செய்ய உத்தரவிட்டு,
வங்கி கடன் தவணைக் கட்டி வருபவர்களுக்காக மகிழ்ச்சியான செய்தியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கணினி + செல்போன் = கழுத்து வலி... அலட்சியம் வேண்டாம்!
அதிகமான கணினிப் பயன்பாட்டால் ஐ.டி ஊழியர்களை அதிகம் பாதித்து வந்த டெக்நெக் எனும் கழுத்து வலி, இப்போது குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது என எலும்பியல் மருத்துவர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
ஆறாம் விரல் போல செல்போனை வைத்திருக்கும் வளர் இளம் பருவத்தினரில் 75% பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாக அபாய மணி அடிக்கிறார்கள்.
கழுத்து வலியை தொடக்க நிலையிலேயே கவனிக்காவிட்டால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
கழுத்து வலியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் பகிர்ந்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

சினிமா விமர்சனம்: அயோத்தி
'அயோத்தி' என்று டைட்டில் இருந்தாலும், மதவாதம் உள்ளிட்ட பிரச்னைகளை ஆழமாகப் பேசுவதற்கான இடமிருந்தும், அந்தப் பக்கம் பெரிதாகச் செல்லாமல், மனிதம் பற்றிய ஒரு எமோஷனல் கதையாக மட்டுமே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யும் நடிகனாகத் தன்னை முன்னிறுத்தியிருக்கிறார் சசிகுமார். கதையின் நாயகியாக வரும் பிரீத்தி அஸ்ரானி தன் நடிப்பால் அசரடிக்கிறார்.
விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
சினிமா விமர்சனம்: பஹீரா

மிஸ்டர் மியாவ்: பரவசப்படுத்தும் பொல்லாத நடிகர்!
சக்கை போடு போட்ட 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தில், எடிட்டர் ரூபன் வெட்டி வீசிய முக்கால் மணி நேரக் காட்சிகளை 'புஷ்பா-2'-வில் பக்காவாகச் சேர்த்துவிட்டார்களாம்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நிகராக, பகத் பாசில் காட்சிகளுக்கு இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
பாங்காக்கில் மீதக் காட்சிகளை ஷூட் பண்ணிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, படத்தின் பிசினஸைப் பெரிய அளவில் பேசி முடித்துவிட்டார்களாம்.
மிஸ்டர் மியாவில் மேலும்...
பரவசப்படுத்தும் பொல்லாத நடிகர்!
படாதபாடு படும் இயக்குநர்!
கீர்த்தி சுரேஷ் போட்ட கண்டிஷன்!
இழுபறியில் 'வாடிவாசல்'!