எடப்பாடியின் அடுத்த பிளான்! - Mr. கழுகு: 'எங்கே சீமான்?'- கடன் உதவி மையங்கள்! -ஆஸ்கர்:முழு தொகுப்பு

எடப்பாடியின் அடுத்த பிளான் என்ன?

ஒற்றைத் தலைமையின் முதல் தோல்வி! - எடப்பாடியின் அடுத்த பிளான் என்ன?
அதிமுக ஏறக்குறைய எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
திமுக மற்றும் மறைமுக அழுத்தம் தரும் பாஜக-வை சமாளிக்க இது அவருக்கு புது தெம்பை தந்துள்ளது. என்றாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி முதல்வரான பின்னர் சந்தித்த தேர்தல் அனைத்திலும் தோல்வியே கிடைத்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் அதிமுக பொதுக்குழு தொடர்பாக அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, கட்சி எடப்பாடியின் ஒற்றைத் தலைமையின் கீழ் வந்த நிலையில், அதிமுக சந்தித்த முதல் இடைத்தேர்தலே எடப்பாடிக்கு சோதனையாக அமைந்துவிட்டது.
இந்த நிலையில், இந்த தோல்வி குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'பொதுச்செயலாளர்' தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகிறார் எடப்பாடி.
எடப்பாடியின் அடுத்த பிளான் என்ன..?
எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்..?
இது குறித்து இன்று வெளியான Vikatan Plus இதழில் இடம்பெற்றிருக்கும்
விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
மிஸ்டர் கழுகு: 'எங்கே சீமான்..?'

"திமுக கவுன்சிலர் வன்முறை வெறியாட்டம்" - முதல்வருக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி 17-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் இளங்கோ, இருவருக்கு இடையேயான சொத்து பிரச்னையில் தலையிட்டு, ஒருசாராருக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தரப்பினர் பெண்களைத் தாக்கியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த பிரச்னை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

'மோடியை விமர்சித்தால் தேச அவமதிப்பா?' - ராகுல் பேச்சும் சர்ச்சையும்!
லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ராகுல் காந்தி உரையாற்றினர். அப்போது அவர், "இந்தியாவில் அரசியல் தலைவர்கள் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள்.
என்னுடைய செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருளை நிறுவியிருக்கிறார்கள்" என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மின்வாரியத்தில் என்ன பிரச்னை..?
ஜனவரி 20-ம் தேதி.., ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்துகொண்டிருந்த சிவசங்கரன் என்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகிய அதிர்ச்சி வீடியோ வாட்ஸ்அப்பில் பரவியது.
சிவசங்கரனின் மரணத்தை வைத்தே இந்த அரசாங்கம் மின்வாரியத்தை எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறது என்பதைச் சொல்லிவிடலாம் என வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆள் பற்றாக்குறை, பராமரிப்பு என மின்வாரியத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன..?
உண்மையில் மின்வாரியத்தில் என்னதான் பிரச்னை..?

கடன் பிரச்னை... உதவ காத்திருக்கும் மையங்கள்!
கடனைக் கட்டத் தவறியவர்கள், 'வாராக் கடனாளி' என்று அடையாளப்படுத்தப்படு கிறார்கள். சிறு தவறுகளால் அவர்களது 'கடன் வரலாறு' (Credit history) பாதிப்படைந்து எதிர் காலத்தில் வளர்ச்சிக்கான நல்ல கடன்களை அவர்கள் பெறுவதில் தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.
நன்கு படித்தவர்களுக்கும், கடனை ஒழுங்காகக் கட்டிவிட வேண்டும் என்ற ஒழுக்கம் நிறைந்தவர்களுக்கும்கூட இந்தக் கடன் வலையில் இருந்து மீளும் வழிவகை தெரிவதில்லை.
இது போன்று கடன் சிக்கலில் அவதிப்படுபவர்களுக்கு உதவ மேலை நாடுகளில் ஆலோசகர்கள் உள்ளனர். இந்த சேவை தற்போது நம் நாட்டிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது...
இது குறித்து இந்த வார 'நாணயம் விகடன்' இதழில் வெளியாகி உள்ள விரிவான தகவலை படிக்க இங்கே க்ளிக் செய்க...

"ஆர்கசம் அனுபவித்ததே இல்லை'' - காமத்துக்கு மரியாதை | S3 E 32
"எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது?"
- வாசகி ஒருவரின் கேள்வி இது.
இதற்கு மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி அளித்த பதிலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

ஆஸ்கர் விருதுகள் குறித்த முழு தொகுப்பு: மாபெரும் கனவை நனவாக்கிய RRR!
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வெல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில், மாபெரும் கனவை நனவாக்கும் விதத்தில் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது 'நாட்டு நாட்டு' பாடல்..!'''
இது குறித்து விரிவான செய்தியையும், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட இதர ஆஸ்கர் விருதுகள் குறித்த முழுமையான செய்தி தொகுப்பைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...