Published:Updated:

OPS- ஐ ரவுண்டு கட்டிய எடப்பாடி & கோ! - கழுகார்: எகிறிய மாஜி!- சினிமா விருதுகள் 2022 - முதலீடு டிப்ஸ்

Vikatan Highlights March 23
Listicle
Vikatan Highlights March 23

ஓபிஎஸ்-ஸை ரவுண்டு கட்டிய எடப்பாடி & கோ... சட்டசபையில் நடந்தது என்ன?, சினிமா விருதுகள் 2022, கழுகார்: எகிறிய மாஜி... அடக்கிய தலைமை!, போதைக்குழிக்குள் அடுத்த தலைமுறை!, முதலீட்டு பிரமிடு, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா?, 'கோகுலத்தில் சீதை': 80s, 90s Cinemas


1
சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதிமுக உறுப்பினர்கள்

ஓபிஎஸ்-ஸை ரவுண்டு கட்டிய எடப்பாடி & கோ... சட்டசபையில் நடந்தது என்ன?  

மிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மசோதா தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முழுமையாக வரவேற்கிறோம்'' என்றார்

'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்' என பன்னீர் செல்வம் பயன்படுத்திய வார்த்தை எடப்பாடி பழனிசாமி தரப்பை கொதிக்க வைத்தது. இதனையடுத்து எடப்பாடியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஆவேசமாக குரல் எழுப்பினர்.

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக்கொண்டு ஓடிவர, ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை ரசாபாசமானது...

கூச்சலும் குழப்பங்களுமாக சத்தசபையாக மாறிய தமிழக சட்டசபையில் நடந்தது என்ன..?

விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


2
சினிமா விருதுகள் 2022

சினிமா விருதுகள் 2022 - திறமைக்கு மரியாதை! 

மிழ் சினிமாவின் சாதனை நட்சத்திரங்களைக் கொண்டாட வரும் மார்ச் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா.

இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

சிறந்த படம்

சிறந்த இயக்குநர்

சிறந்த நடிகர்

சிறந்த நடிகை

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த நகைச்சுவை நடிகர்

சிறந்த வில்லன்

சிறந்த வில்லி

... என 2022-ம் ஆண்டுக்கான பல்வேறு பிரிவுகளுக்கான வெற்றியாளர்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
கழுகார்

கழுகார் அப்டேட்ஸ்:  எகிறிய மாஜி... அடக்கிய தலைமை! 

தென்காசி மாவட்டம், புளியரை வழியாக தினம்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல மடங்கு ஏற்றிச் செல்லப்படும் அந்த வாகனங்களுக்கு 'ஓவர் லோடு' அபராதம்கூட விதிக்காமல் செக்போஸ்டைக் கடந்து செல்ல தமிழக காவல்துறையினர் அனுமதிப்பதாக மக்களிடையே எதிர்ப்புக்குரல் வலுத்துவருகிறது.

இது குறித்த விரிவான தகவல்கள் கழுகார் அப்டேட்ஸில்...

மேலும்,

எகிறிய மாஜி... அடக்கிய தலைமை!

புகைப்படக் கண்காட்சியும்... அமைச்சர்களின் ஈகோவும்!

கல்லுக்கும் கான்கிரீட்டுக்கும் சண்டை... தி.மு.க-வில் பிசினஸ் யுத்தம்!

வாரிசுக்கு ட்ரெயினிங்... மா.செ-வின் பெருங்கனவு!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ராகுல் காந்தி

'ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை!' - சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

டந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்யும்போது பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சு, 'ஒட்டுமொத்த மோடி சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் இருக்கிறது' என்று கூறி ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ.புருனேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
போதைக்குழிக்குள் அடுத்த தலைமுறை!

லாபவெறி டாஸ்மாக்... போதைக்குழிக்குள் அடுத்த தலைமுறை!

ன்றைக்கு கல்யாணம், காதுகுத்து தொடங்கி கோயில் திருவிழா வரைக்கும் கொண்டாட்டமே குடிதான். கிராமம், நகரம் வேறுபாடெல்லாம் இல்லை. சின்னப் பையன்கள்கூட குடித்துவிட்டுச் சலம்புகிறார்கள். குடிப்பது வீரத்தின் அடையாளமாகிவிட்டது.

2021-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 10 சதவிகித்துக்கும் மேற்பட்ட விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்டவை.

ஒரு மாநிலம் மூன்றில் ஒரு பங்கு வருவாயை தம் மக்களைக் குடிக்கவைத்துப் பெறுகிறது என்பது எவ்வளவு பெரிய அவமானம்?

அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்...

அதிகரிக்கும் மனமகிழ் மன்றங்கள்...

வாக்குறுதி என்னானது?

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில், தமிழகத்தின் அடுத்த தலைமுறை எதிர்கொள்ளும் பேராபத்தை விவரிக்கும் இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
முதலீட்டு பிரமிடு:

முதலீட்டு பிரமிடு: வருமானத்துக்கு பலமான வழிகாட்டி!

முதலீடு என்று வருகிறபோது எடுத்த உடனே அதிக வருமானம் தரும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலோ அல்லது அதிக ரிஸ்க்கான பங்கு வர்த்தகத்திலோ செய்வதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த வகை முதலீடுகள், அதிக ரிஸ்க்கானவை என்பதால், மூலதனத்தில் இழப்பு ஏற்படக் கூடும். அந்த இழப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையையே வீணாக்கிவிடும். எனவே, முதலீட்டு பிரமிடைப் பின்பற்றி முதலீடுகளை மேற்கொள்வதுதான் சரி.

பிரமிடு தெரியும். அதென்ன முதலீட்டு பிரமிடு..?

முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
தண்ணீர்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா?

"எனக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இது நோயின் அறிகுறியா? நான் தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது சரியானதா?"

- இந்த கேள்விக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
கோகுலத்தில் சீதை

'கோகுலத்தில் சீதை': 80s, 90s Cinemas

கத்தியன் இயக்கிய சிறப்பான திரைப்படங்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது 'கோகுலத்தில் சீதை'. எத்தனையோ ஆவேசமான பெண்ணியத் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டத் தொனியும் இல்லாத அட்டகாசமான பெண்ணியத் திரைப்படம் இது.

கார்த்திக் இதுவரை நடித்ததில், அவரது அசாதாரணமான நடிப்புத் திறமையை மிகச்சரியாகவும் முழுமையாகவும் பயன்படுத்திய திரைப்படம் என்று 'கோகுலத்தில் சீதையை' சொல்லலாம். கார்த்திக்கின் கலைப்பயணத்தில் டாப் ஒன் இடத்தை இதுதான் வகிக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியும்.

படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...