Published:Updated:

'2024-ல் தேர்தல்' - EPS பேச்சின் பின்னணி.. - டெல்டா:ஸ்டாலின் கடிதம்- தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்

 Vikatan Highlights April 4
Listicle
Vikatan Highlights April 4

'2024-ல் சட்டமன்றத் தேர்தல்' - எடப்பாடி பேச்சின் பின்னணி..., டெல்டாவை பாலைவனமாக்கவா நிலக்கரி எடுக்கும் திட்டம்?', ட்விட்டரின் லோகோ மாறியது ஏன்?, கம்பேக் கொடுத்த சிஎஸ்கே!, MF: முதலீடு ஆலோசனை, ஸ்ட்ரெஸ் அதிகமானால் ஹார்ட் அட்டாக் ஏன்?, தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்


1
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

'2024-ல் சட்டமன்றத் தேர்தல்...' - எடப்பாடி பேச்சின் பின்னணி என்ன?!

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தலைமை பதவிக்கு வந்தபின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்னர் சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் தொண்டர்களைச் சந்தித்தார் அவர்.

அப்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, "2024 ல் கூட நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அப்படி வருகின்ற பொழுது மீண்டும் அதிமுக அரசு மலரும்" என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசுவதன் பின்னணி என்ன..?

இதற்கு திமுக தரப்பில் என்ன ரியாக்சன்..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

"புல்லட் வண்டிக்கு உதவியாளர் வைத்திருந்தேன்!" - ட்விட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிசாமி `கலகல'

படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
டெல்டா

'டெல்டாவை பாலைவனமாக்கவா நிலக்கரி எடுக்கும் திட்டம்..?' - கொதிக்கும் விவசாயிகள்!

ஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு நிலகரி எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

காவிரி டெல்டா பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் நிலையில், ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை.விமல்நான்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் உள்ளிட்டவர்களின் கருத்துகளுடன் கூடிய விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
Elon musk, Dogecoin cryptocurrency

ட்விட்டரின் லோகோ மாறியது ஏன்?

லகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்த நிலையில், எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் லோகோவாக இருந்த நீல நிறப் பறவைக்குப் பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சிக்குப் பயன்படுத்தப்படும் நாய் உருவத்தைத் தனது ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்றியது ஏன்..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


4
CSK

'ஜெயிச்சிட்டோம் மாறா' - கெத்தாக கம்பேக் கொடுத்த சிஎஸ்கே!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணில் சிஎஸ்கே ஆடும் போட்டியில் மறக்கமுடியாத வரவேற்பை ரசிகர்கள் தர பதிலுக்கு நினைவில் கொள்ளத்தக்க வெற்றியை தோனியின் படையும் பரிசளித்திருக்கிறது.

சேப்பாக்கம் களத்தில் தனது சிறந்த பவர்பிளே ரன்களையும் (79), ஒட்டுமொத்தமாக தனது மூன்றாவது சிறந்த பவர்பிளே ரன்களையும் சிஎஸ்கே பதிவு செய்தது. இதில் கெய்க்வாட்டின் பங்கு மட்டுமே 20 பந்துகளில் 46 ரன்கள்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ஸ்டாலின், மோடி

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - விகடன் டிரெண்டிங் செய்திகள்...

நிலக்கரி சுரங்க அறிவிப்பு: "டெல்டா பகுதிகளை நீக்கிட வேண்டும்" - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

பாகன் தம்பதியைச் சந்திக்க முதுமலைக்கு வருகிறார் பிரதமர் மோடி!

"எல்லாவற்றிலும் வெறுப்பையே வெளிப்படுத்துகிறது ஒன்றிய அரசு'' - சு. வெங்கடேசன் எம்.பி

கேரளா: ரயிலில் பயணிகளுக்குத் தீ வைத்த நபர் உ.பி-யில் கைது!

கலாஷேத்ரா விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
மியூச்சுவல் ஃபண்ட்

MF:இழப்பு இல்லாமல் முதலீடு செய்வது எப்படி?

ங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் முதல்முறை முதலீட்டாளரா நீங்கள்?

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பணத்தை இழந்துவிடுவோம் என பயப்படுகிறீர்களா?

உங்கள் பயத்தைப் போக்குவதற்கான வழிகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
மாரடைப்பு

ஸ்ட்ரெஸ் அதிகமானால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதேன்?

ஸ்ட்ரெஸ்ஸுக்கும் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா? ஸ்ட்ரெஸ் அதிகமானதால் ஹார்ட் அட்டாக் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோமே... அதற்கு சாத்தியமுண்டா?

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி சொல்லும் பதிலை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

ன்று வெளியான சக்தி விகடன் இதழில் கே.பி.வித்யாதரனின் கணித்துள்ள 12 ராசிகளுக்குமான முழுமையான புத்தாண்டு ராசி பலன்கள்,

பொதுப்பலன் மற்றும் புத்தாண்டு பஞ்சாங்கம்...

வாசிக்க இங்கே க்ளிக் செய்க...