Published:Updated:

Mr. கழுகு: 'காதில் வாங்காத அண்ணாமலை!' - கதறும் கலாஷேத்ரா மாணவிகள்! - முகலாயர் பாடம்: NCERT விளக்கம்!

Vikatan Highlights April 5
Listicle
Vikatan Highlights April 5

மிஸ்டர் கழுகு: 'காதில் வாங்காத அண்ணாமலை!', "விஐபி-களிடம் அட்ஜெஸ்ட்..." - கதறும் கலாஷேத்ரா மாணவிகள்..!, ஸ்டாலினுக்கு வானதி கேள்வி, 'முகலாயர்களின் பாடம் நீக்கமா?' - NCERT விளக்கம்!, டெபாசிட் பண மோசடிகள்... உஷார்!, கிசுகிசு: அடக்கி வாசிக்கச் சொல்லும் உச்ச நடிகரின் மகள்!


1
அண்ணாமலை

மிஸ்டர் கழுகு: 'காதில் வாங்காத அண்ணாமலை!'  

"எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்படியே, பைபாஸ் சர்ஜரி செய்திருக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவனைச் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.

அப்போது அண்ணாமலையின் சமீபகால சர்ச்சைப் பேச்சுகள் குறித்து ராகவனிடம் வருத்தப்பட்ட நிர்மலா சீதாராமன், 'உங்களைப் போன்ற அனுபவமிக்கவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும்' என்று சொன்னாராம்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனை அண்ணாமலை சந்தித்தபோது அ.தி.மு.க கூட்டணி குறித்து என்ன பேசினார்..?

வானதி சீனிவாசன் சொன்னதை ஏற்றுக்கொண்டாரா...?

அண்ணாமலைக்கு எதிராக கொதிக்கும் கட்சி சீனியர்கள்...

இது குறித்த மேலும் விரிவான தகவல் இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் மிஸ்டர் கழுகு பகுதியில்...

படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

'கேன் வாட்டர்' ஆபத்து! - சாட்டை எடுக்குமா அரசு?

ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
கலாஷேத்ரா | பாலியல் புகார்

"விஐபி-களிடம் அட்ஜெஸ்ட்..." - கதறும் கலாஷேத்ரா மாணவிகள்! 

'2008-லிருந்தே கலாஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் பெண்கள் புகார் அளித்தும் அதை ஏன் கவனத்தில் எடுக்கவில்லை... அங்கு என்ன நடக்கிறது?' என்கிற கேள்விகளோடு விசாரணையில் இறங்கினோம்.

"வீணை கற்று கொடுக்கும் நபர் அவர். கம்பி கருவிகளில் சரியான இடத்தில் வைத்து அழுத்தினால்தான் சரியான ஸ்வரம் வரும். அது உடனடியாக எல்லோருக்கும் பிடிபடாது. அதனால், அவர் பின் வந்து சுற்றி உட்கார்ந்து, 'இங்க பிடிக்க கூடாது, இங்க பிடி...' என்று சொல்லி தோளை அணைத்து, இடிப்புக்குள் கை நுழைத்து சொல்லி கொடுத்தால் எப்படி எங்களால் கற்று கொள்ள முடியும்."

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் பகிர்ந்த அதிர வைக்கும் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
வானதி சீனிவாசன் - முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி

"தந்தை, மகன், பேரன்... சமூகநீதி பற்றி நீங்கள் பேசலாமா ஸ்டாலின்?" 

மிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 3-ம் தேதியன்று இணையதளம் வாயிலாக, அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கிவிட்டு, சமூகநீதி பற்றி பேசுங்கள்" என விமர்சனம் செய்திருப்பதோடு, ஸ்டாலினுக்கு இது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
NCERT பாடப்புத்தகம்

'பாடப்புத்தகத்தில் முகலாயர்களின் வரலாற்றுப் பகுதி நீக்கமா?' - சர்ச்சையும் NCERT விளக்கமும்!

பாடப்புத்தகங்களில் இருந்துவந்த முகலாயர்கள் குறித்த பாடப்பகுதிகளை NCERT நீக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில் இக்குற்றச்சாட்டு குறித்து NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

"இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்" - இஸ்லாமிய அமைப்பின் வருத்தமும், இந்தியாவின் பதிலும்!

படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
முதல்வர் ஸ்டாலின் ( கோப்புப் படம் )

"நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி தரமாட்டோம்'' - ஸ்டாலின்- விகடன் டிரெண்டிங் செய்திகள்...

"நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்'' - நிலக்கரித்துறை அமைச்சரைச் சந்தித்த அண்ணாமலை

நிலக்கரி எடுக்கும் திட்டம் - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

நிலக்கரி சுரங்க விவகாரம்; "மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' - விஜயகாந்த்

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை... பயண விவரங்கள்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
Warner |DCvsGT

DCvsGT: வார்னரின் டெஸ்ட் இன்னிங்ஸிற்கு எண்டே இல்லையா? 

`தொடரும்' படத்தில் வடிவேலு அடித்துப்பிடித்து ஒரு வேலை வாங்குவார். ஆனால் யாராவது ஏதாவது செய்யப்போக அது கடைசியாய் வடிவேலு தலையில் விடிந்து அடிக்கடி மெடிக்கல் லீவில் போவார். அப்படித்தான் இருக்கிறது இந்த ஆண்டு ஐ.பி.எல்.

அடித்துப்பிடித்து வாங்கிய வீரர்கள் எல்லாம் காயம்பட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சீசனில் நடந்த ஆட்டங்களில் விழுந்த விக்கெட்களை விட சீசன் தொடங்கிய பின் வெளியேறிய வீரர்கள் அதிகம் இருப்பார்கள் போல.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
டெபாசிட் பண மோசடிகள்...

டெபாசிட் பண மோசடிகள்... கண்டறியும் 5 வழிகள்..!

க்களில் பலரும் இன்னமும் 'வங்கி நிரந்தர வைப்பு நிதியை விடவும் நல்ல வருமானம்' என்கிற கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு. ஒழுங்கு முறைப்படுத்தப்படாத திட்டங்களில் பணத்தைக் கட்டி ஏமாறுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த நிலையில், இத்தகைய டெபாசிட் பண மோசடிகளைக் கண்டறிவதற்கான 5 வழிகளைச் சொல்கிறார் முதலீட்டு ஆலோசரான ஆரத்தி கிருஷ்ணன் (Primeinvestor.in).

அவற்றை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
கிசுகிசு

கிசுகிசு: அடக்கி வாசிக்கச் சொல்லும் உச்ச நடிகரின் மகள்!

லைக்கோட்டையில் தாடிக்காரருக்கும், மீசை மினிஸ்டருக்கும் இடையே நடக்கும் உள்ளடிப் பஞ்சாயத்து இன்னமும் ஓயவில்லை. இந்த இருவருக்குமிடையே நடக்கும் பூசலைவைத்து மலைக்கோட்டையைத் தன் கோட்டையாக்க நினைத்தார் அன்பான அமைச்சர். ஆனால், அதற்கு முன்னரே மலைக்கோட்டைக்கு உட்பட்ட மூன்று எம்.எல்.ஏ-க்களை சைலன்ட்டாகத் தன்வசமாக்கி வைத்திருக்கிறாராம் ஷாக் கொடுக்கும் அமைச்சர்.

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள கிசுகிசு பகுதியில் மேலும்...

முதன்மையானவரின் அக்கறை!

மலைக்கோட்டையில் 'ஷாக்' கொடுத்த அமைச்சர்!

கலங்கிப்போன மாஜி காக்கி!

அடக்கி வாசிக்கச் சொல்லும் உச்ச நடிகரின் மகள்!

பணிவானவரை அலற வைத்த பசை விவகாரம்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...