"நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீறிய பன்னீர் - கழுகார் - 'சிங்கம் தோனி'- டென்ட் கொட்டாய் டைரீஸ்!

"டெல்லி, எடப்பாடிக்கு நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர்!, கழுகார் அப்டேட்ஸ்: அடம்பிடிக்கும் சீனியர்!, CSK v RR: தோற்றாலும் 'நீ சிங்கம்தான்' எனச் சொல்ல வைத்த தோனி!, சமைப்பதால் சத்துகள் நீங்கிவிடுகிறதா..?, அச்சமில்லை அச்சமில்லை: டென்ட் கொட்டாய் டைரீஸ்...

"டெல்லி, எடப்பாடிக்கு நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர்!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டு முறை அவருக்கு டெல்லி பரிபூரண ஆதரவை அளித்தது. பிப்ரவரி 2017-ல் அவர் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவருக்குப் பின்னால் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் வருவார்கள் என டெல்லி எதிர்பார்த்தது. ஆனால், அதைச் செய்துகாட்ட முடியவில்லை.
எடப்பாடியுடன் ஓ.பி.எஸ் நேரடியாக முட்டிக்கொண்ட பிறகு, மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் ஓ.பி.எஸ் பின்னால் ஓரளவுக்காவது திரள்வார்கள் எனவும் டெல்லி எதிர்பார்த்தது. அதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக அவர் மீதான டெல்லியின் மரியாதைப் பார்வை மங்கத் தொடங்கியது.
இதனால், டெல்லி தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக ஓ. பன்னீர் செல்வம் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள், திருச்சி மாநாட்டையொட்டி அவர் மேற்கொண்டிருக்கும் சில திட்டமிடல்கள் உள்ளிட்டவற்றை

கழுகார் அப்டேட்ஸ்: அடம்பிடிக்கும் சீனியர்!
பன்னீர் பக்கமிருந்து, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பக்கத்துக்குத் தாவிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி, தற்போது பா.ஜ.க-வுக்குச் செல்லும் முடிவில் இருக்கிறாராம்.
எடப்பாடி அணியில், தான் எதிர்பார்த்த எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாததால் அப்செட்டில் இருந்தவர், தாய்க்கட்சியான பா.ஜ.க-வில் இணைவதற்குத் தூது மேல் தூது விட்டிருக்கிறார்.
மாஜி காக்கி தரப்பு ஓகே சொன்னாலும், 'நான் டெல்லியில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில்தான் கட்சியில் இணைவேன்' என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த சீனியர் நிர்வாகி.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்...
கனத்த இதயத்தோடு பர்ஸைத் திறந்த ஓபிஎஸ்!
அரசியல் ஆர்வம் வற்றிய வாரிசு... சோகக்கடலில் அமைச்சர்!
தூக்கம் தொலைத்த மாஜி காக்கி!
ஆசை துறக்காத முனிவர்... உத்தரவு போட்ட மேலிடம்!

"இந்தியைத் திணிக்க முடியாது!" - ஆளுநர் ரவி பேச்சு
சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், " 3,500 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான வரலாறுகளைக்கொண்டது தமிழ்நாடு" என்றார்.
மேலும், "மிகவும் பழைமையான தமிழ் மொழியில் இந்தியைத் திணிக்க முடியாது" என்றும் கூறினார்.

பல்வீர் சிங்... பற்கள் பிடுங்கப்பட்டவர்களின் கண்ணீர் கதை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.
பல்வீர் சிங் மூலம் பற்கள் பிடுங்கப்பட்டவர்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன.

CSK v RR: தோற்றாலும் 'நீ சிங்கம்தான்' எனச் சொல்ல வைத்த தோனி!
பல திருப்பங்களை சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையிலான போட்டி சந்திக்கும் என்பது பலருமே யூகித்த ஒன்றாகவே இருந்தது.
டாஸ்கூட 200-வது முறையாக சிஎஸ்கேவிற்குத் தலைமையேற்ற தோனிக்கே வாழ்த்தி வாக்களித்தது. ஒவ்வொரு முறை அவர் களத்தில் காலடி வைக்கும் போதும் பல சாதனைகள் உடைக்கவும் படைக்கவும் படுகின்றன.

சமைப்பதால் சத்துகள் நீங்கிவிடுகிறதா..?
'உணவைச் சமைக்காமல் சாப்பிடுங்கள்' என்று இயற்கை வாழ்வியல் விரும்பிகள் பலரும் அறிவுறுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
அரிசியை குக்கரில் சமைப்பதா அல்லது வடிப்பதா..?
காய்கறிகளை எப்படி வேக வைக்க வேண்டும்..?
என்பது உட்பட சத்துகள் குறையாமல் சமைப்பது குறித்து இன்று வெளியான ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கும் 'ஆரோக்கியம் ஒரு பிளேட்' தொடரில் விவரிக்கிறார் டாக்டர் அருண்குமார்.

'அச்சமில்லை அச்சமில்லை': டென்ட் கொட்டாய் டைரீஸ்...
80 S, 90 S Cinemas
'அச்சமில்லை அச்சமில்லை' என்று பாரதியாரின் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு, 1984-ல் வெளியான இந்த அரசியல் டிராமா, இன்றைக்கும் கூட பொருந்தக்கூடிய அளவுக்குச் சமகாலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. சமூக விழிப்புணர்வு படங்களை ஜனரஞ்சகமான அம்சங்களோடு வழங்கக்கூடிய கே.பாலசந்தரின் இந்தப் படைப்பை ஒருவகையில் 'Political Satire' என்று கூடச் சொல்லலாம்.
ஒரு லட்சியவாதி இளைஞன், அதிகார அரசியலின் ருசியையும் அதன் மூலம் ஈட்டக்கூடிய லாபத்தையும் கண்டபிறகு எவ்வாறு அந்த மீள முடியாத சகதியில் சிக்கிக் கொள்கிறான் என்பதைத்தான் இந்தத் திரைப்படம் உணர்ச்சிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது.
உலகநாதனாக ராஜேஷ். திராவிடக் களையுடன் லட்சணமான முகத்துடன் இருக்கும் ராஜேஷ், லட்சியவாத இளைஞனாக, இவர் அறிமுகமாகும் காட்சியே அத்தனை அழகு.
இந்தத் திரைப்படத்தில் வரும் 'தேன்மொழி' பாத்திரம், சரிதாவின் கலைப்பயணத்தில் 'சிறந்தவற்றில் முக்கியமானதொன்றாக' அமைந்துள்ளது.
படம் குறித்த சுவாரஸ்யமான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022 - திறமைக்கு மரியாதை
"நடிப்பு எனக்கு சலித்துப்போகவில்லை. லோகேஷ் மாதிரி ஒரு தம்பி வரும்போது வருடம் பூராவும் உழைக்க நான் தயார். அப்படி சந்தோஷமா உழைச்சதுக்கு அங்கீகாரம்தான் இந்த விருது" என 2022-ம் ஆண்டுக்கான விகடன் விருது விழாவில் நெகிழ்ந்தார் கமல்.
சிறந்த நடிகர் விருதினை 'விக்ரம்' திரைப்படத்திற்காக பெற்ற கமலிடம், அதிகம் பேசாத மணிரத்னம் ஒரு கேள்வி கேட்டார். "எப்படி ஆர்ட், பொழுதுபோக்கு என இரண்டுவிதமான படங்களையும் சமமாக பேலன்ஸ் செய்து இத்தனை நீண்ட வருடங்கள் சக்சஸ்புல்லாக கரியரைக் கொண்டு செல்கிறீர்கள்?" அதற்கு கமல் தயக்கமே இல்லாமல் சட்டென சொன்ன பதில்...
கமல் பற்றித் திருவாய் மலர்ந்த ரஹ்மான்... என இன்னும் இன்னும் ஏராளமான,
விருது நிகழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்த வார ஆனந்த விகடன் இதழின் வெளிவந்துள்ள கவர் ஸ்டோரியை படிக்க இங்கே க்ளிக் செய்க...