அண்ணாமலை ஊழல் பட்டியல்.. டெல்லி ரியாக்சன்! - ஆளுநர்: 'அடேங்கப்பா' செலவினம்! - கோடீஸ்வரர் ஆவதெப்படி?

அண்ணாமலையின் ஊழல் பட்டியல்... டெல்லியின் ரியாக்சன்!, ஆளுநர் மாளிகையின் அடேங்கப்பா செலவின ரிப்போர்ட்!, கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த மகன் ஆணவக்கொலை..!, சிஎஸ்கே... தோனி... ஐபிஎல் 2023 RoundUp, குறைவான சம்பளம் வாங்குபவரும் கோடீஸ்வரர் ஆகலாம்... எப்படி?, சினிமா விமர்சனம்

அண்ணாமலையின் ஊழல் பட்டியல்... டெல்லியின் ரியாக்சன்!
" 'ஏப்ரல் 14-ல் தி.மு.க-வின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்' என்று சொல்லிவந்த பா.ஜ.க அண்ணாமலை, அதற்காகவே மாமல்லபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் திட்டமிட்டிருந்தார். 'இது தி.மு.க-மீது அண்ணாமலை தொடுக்கும் குருஷேத்திரப் போர். எனவே, தேர் வடிவில் மேடையை அமைப்போம்' என்றெல்லாம் ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் ரத்தானது.
அதற்கான பின்னணி காரணம் என்ன..?
இது விஷயத்தில் டெல்லி தலைமை அண்ணாமலையிடம் சொன்ன விஷயம்...
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் காவல்துறை தரப்புக்கும் இடையே நடந்த உரசல்,
உதயநிதி குறித்து கூட்டணிக் கட்சியினர் குமுறியதன் காரணம்... என
ஏராளமான அரசியல் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் அள்ளித்தருகிறார் கழுகார்...
மேலும்,
அதிமுக விஐபி-களின் சொத்து பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்கு தான் என்ன?!

ஆளுநர் மாளிகையின் அடேங்கப்பா செலவின ரிப்போர்ட்!
"ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது" என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநரை நோக்கி வீசியிருக்கும் வெடியின் சத்தம் மாநிலம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை செலவினங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு தகவல்களைப் பெற்றிருக்கும் கோவை வழக்கறிஞர் லோகநாதன், "ஒரு ராஜாவைப்போலத்தான் ஆளுநர், அரசு செலவில் ஆடம்பரமாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர்கூட இவ்வளவு ஆடம்பரமாக இருப்பதில்லை" எனச் சொல்கிறார்.
'பராமரிப்புக்கு ரூ.5 கோடி... மின்கட்டணம் ரூ.64 லட்சம்... டெலிபோனுக்கு ரூ.10 லட்சம்!' என அடேங்கப்பா சொல்ல வைக்கும்
ஆளுநர் மாளிகை செலவின ரிப்போர்ட்டைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

புல்வாமா தாக்குதல்: பிரதமர் மோடி மீது ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு!
பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2019, பிப்ரவரி 14 அன்று ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு - காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்குக் காரணம் என்றும், அப்போது பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இது குறித்து சத்ய பால் மாலிக் அளித்துள்ள பேட்டியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

சிஎஸ்கே... தோனி... ஐபிஎல் 2023 RoundUp
2023 ஐபிஎல் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் செய்தித் தொடர்பு நிறுவனம், ஐ.பி.எல் தொடர் பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டியிருக்கிறது.
இப்பட்டியலில் முதல் இரண்டு வாரங்களில், `மிகவும் பிரபலமான ஐ.பி.எல் அணிகள்' என்ற பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த மகன் ஆணவக்கொலை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணியின் மகன் சுபாஷ் (25). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், தன்னுடன் வேலை செய்துவந்த அனுஷா என்ற பெண்ணைக் காதலித்துவந்திருக்கிறார் சுபாஷ்.
தந்தை தண்டபாணியின் எதிர்ப்பை மீறி, மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அனுஷாவை சில நாள்களுக்கு முன்பு, சுபாஷ் திருமணம் செய்திருக்கிறார். நேற்று, சொந்த ஊருக்கு வந்த சுபாஷ் மற்றும் அனுஷா, அந்தப் பகுதியிலுள்ள தனது பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்) வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

குறைவான சம்பளம் வாங்குபவரும் கோடீஸ்வரர் ஆகலாம்... எப்படி?
"நான் கொஞ்சம் சம்பளம்தான் வாங்கு கிறேன். என்னால் எப்படி கோடீஸ்வரர் ஆக முடியும்?" - இந்தக் கேள்வி நம்மில் பெரும் பாலானவர்களிடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ரூ.15,000 - ரூ.20,000 வரை சம்பளம் வாங்குகிற பலரிடம் இருக்கிறது.
பானையின் அடியில் உள்ள நீரை கூழாங்கற்களைப் போட்டு மேலே கொண்டு வந்த காக்கையைப்போல, ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் சராசரிக்கும் குறைவாக சம்பாதித்தாலும், சிறிய தொகையை சேமிப்பதன் மூலம் அவர் சுலபமாக கோடீஸ்வரராக மாற முடியும்.
எப்படி என்பதை இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் விளக்குகிறார் நிதி ஆலோசகர் ராஜன் ...

வியர்வையோடு இருக்கும்போது குளிக்கக்கூடாது என்பது உண்மையா?
"வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் அல்லது உடற்பயிற்சி செய்ததும் வியர்வை நீங்குவதற்கு உடனே குளிக்க நினைப்போம். ஆனால் வியர்வையோடு குளிக்கக்கூடாது என்கிறார்களே... அது உண்மையா?"
- சருமநல மருத்துவர் பூர்ணிமா சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

சினிமா விமர்சனம்: திருவின் குரல்
ஒரு சாதாரண இளைஞன், தன் குடும்பத்துக்காக நான்கு கொலைகாரர்களை எதிர்த்து நடத்தும் யுத்தமே இந்த `திருவின் குரல்'. அறிமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு, ஒரு சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.
வாய் பேச முடியாத, அதனால் செவித்திறனும் சற்றே பாதிப்படைந்த சவாலான வேடத்தில் அருள்நிதி. ஆத்மிகாவுக்கு சம்பிரதாய நாயகி வேடம் மட்டுமே.
விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
சினிமா விமர்சனம்: ருத்ரன்