Published:Updated:

12 மணிநேர வேலை: எதிர்ப்புடன் நிறைவேறிய மசோதா - வக்கீல் நோட்டீஸ்: அண்ணாமலை பதில்- விமர்சனம்: யாத்திசை

Vikatan Highlights April 21
Listicle
Vikatan Highlights April 21

12 மணிநேர வேலை... மசோதா நிறைவேற்றம்; திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!, DMK Files: வக்கீல் நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதில்!, முதல்வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர்!, அதானி - சரத் பவார் சந்திப்பு பின்னணி, தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடை... எடை குறையுமா?, சினிமா விமர்சனம்: 'யாத்திசை'


1
தமிழ்நாடு சட்டமன்றம்

12 மணிநேர வேலை... மசோதா நிறைவேற்றம்; திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்கும் விதமாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதா தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த மசோதாவுக்கு தி.மு.க கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கம்யூனிஸ்ட், வி.சி.க போன்ற கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில்,

மசோதா குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த விளக்கம்...

மசோதாவை எதிர்ப்பது ஏன் என்பதற்கான விசிக-வின் விளக்கம்...

உள்பட இது குறித்த விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

'12 மணிநேர வேலை: `தொழிலாளர்கள் விரோத சட்டமா?' - சட்டசபை விவாதத்தில் நடந்தது என்ன?!

படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
அண்ணாமலை - ஆர்.எஸ் பாரதி

DMK Files: வக்கீல் நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதில்!

மிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி, 'DMK Files' எனும் தலைப்பில், திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் எனக் கூறி சில தகவல்களை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் பொது வெளியில் மன்னிப்புக் கேட்டு, ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில், இந்த வக்கீல் நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார்.

ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை அனுப்பியுள்ள பதில் என்ன..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
முதல்வருடன் வினோத் பாபு

முதல்வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு.

கடந்த மாதம் 26-ம் தேதி லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்து கொண்டதாகவும், அதில் இறுதி வரை முன்னேறி 'பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
சரத் பவார் - கவுதம் அதானி

அதானி - சரத் பவார் சந்திப்பின் பின்னணி என்ன?

2024 -ல் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க-வுக்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதானி விவகாரத்தில் பவார் அவருக்கு ஆதரவாகப் பேசிவருவதும், கௌதம் அதானி அவரை நேரில் வந்து சந்தித்திருப்பதும் எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

இது குறித்த விரிவான பின்னணி தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
மக்களே உஷார்...

'க்ளிக் செய்தால்... மொத்தப்பணமும் காலி!'- உஷார் மக்களே..!

ன்றைய இணைய யுகத்தில் சோஷியல் மீடியாக்களைப் பயன்படுத் தாமல் நம்மால் இருக்கவே முடிவதில்லை.

பலரும் சோஷியல் மீடியாக்களில் பலவிதமான போஸ்ட்டுகளைப் பதிவேற்றுகிறோம். ஆனால், நம்மில் பலரும் மோசடிகளில் சிக்க அதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்த வரிசையில் இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்டாக இருக்கிறது இன்ஸ்டாகிராம் மோசடி. இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி செய்ய முடியுமா என்று கேட்பவர்களுக்கு இதோ ஓர் உதாரணம்....

படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
நடைபயிற்சி

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடை...  எடை  குறையுமா?

"தினமும் 10,000 அடிகள் நடப்பது எடையைக் குறைக்க உதவுமா? வாக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஏதும் இருக்கின்றனவா? பேசிக்கொண்டே நடப்பது தவறானதா?"

- இந்த கேள்விக்கு ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
'7ஜி ரெயின்போ காலனி'

7G ரெயின்போ காலனி - 2:  செல்வராகவனுடன் இணையும் ரவி கிருஷ்ணா - யுவன்! 

யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி அடைந்த படம், `7ஜி ரெயின்போ காலனி'. `காதல் கொண்டேன்' வெற்றிக்குப் பிறகு, செல்வராகவன் கொடுத்த கிளாஸிக் இது. செல்வாவைப் பிடித்த எல்லோருக்கும் 7ஜியை நிச்சயம் பிடித்திருக்கும்.

இந்த நிலையில், இப்போது அதனுடைய இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. இது குறித்த எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களை தெரிந்துகொள்ள

இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

சினிமா விமர்சனம்: 'யாத்திசை'

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...