Published:Updated:

Mr. கழுகு: ஸ்டாலினை கண் சிவக்க வைத்த அமைச்சர்!- மெர்சலான நடிகரின் முடிவு - VAO கொலை அதிர்ச்சி ஆடியோ!

Vikatan Highlights April 26
Listicle
Vikatan Highlights April 26

Mr. கழுகு: 'தங்கம் தென்னரசு விளக்கவே இல்லை..!' - கண் சிவந்த ஸ்டாலின்!,கிசுகிசு: மெர்சலான நடிகரின் அரசியல் முடிவு!,தூத்துக்குடி விஏஓ கொலையில் அதிர வைக்கும் ஆடியோ!, தோனி ஏன் இளைஞர்களால் சூழப்படுகிறார்?, கடினமான நபர்களைக் கையாளும் ரகசியங்கள், மிஸ்டர் மியாவ்!


1
மிஸ்டர் கழுகு

Mr. கழுகு: 'தங்கம் தென்னரசு விளக்கவே இல்லை..!' - கண் சிவந்த ஸ்டாலின்!

மைச்சரவை மாற்றம் குறித்து மேலிடம் சீரியஸாக விவாதித்திருப்பதால், குருப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பெயர்ச்சியும் வருகிறது..."

- கழுகார் தரும் இது குறித்த விரிவான எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்...

முதல்வரின் ரெட் ஷீட்டில் இருக்கும் 2 அமைச்சர்கள் யார் யார்..?

அமைச்சராகும் ஜாக்பாட் யார் யாருக்கு..?

12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் முதல்வரிடமே வருத்தத்தைக் கொட்டிய தி.மு.க எம்எல்ஏ...

முதல்வரின் ரியாக்சன்... என

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

கிசுகிசு

* 'இன்னும் ஒரு படம்தான்...' என மெர்சலான நடிகரின் அரசியல் முடிவு!

* காக்கி மாஜிக்கும் துணிவானவருக்கும் இடையே நடக்கும் மோதல் விவகாரத்தின் உள்ளடி நாடகம்!

* அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் உளவுத்துறை போட்ட 'நோட்'...

கிறுகிறுக்க வைக்கும் சீக்ரெட் அரசியல் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஆடியோ விவகாரம்: "பிரிக்கத் துடிக்கும் பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌!" - பிடிஆர்

மீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரே ஆண்டில் முறைகேடாகச் சம்பாதித்தாகப் பேசியதாக, ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பா.ஜ.க வெளியிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், அது போலியான ஆடியோ எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, மீண்டும் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவை பா.ஜ.க வெளியிட்டது.

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக ஒபாமா உள்ளிட்ட சிலர் பேசும் வீடியோக்களைப் பகிர்ந்து தற்போது அறிக்கை ஒன்றை பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
முறப்பநாடு காவல் நிலையம்

மணல் கடத்தல்: தூத்துக்குடி விஏஓ கொலையில் அதிர வைக்கும் ஆடியோ!

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோயில்பத்து கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸ், மணல் கடத்தலை தடுத்ததால், நேற்று அவர் பணிபுரிந்த அலுவலகத்திலேயே 2 பேரால் வெட்டப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், "தூத்துக்குடி மாவட்டத்துல பணிபுரியுற நிறைய வி.ஏ.ஓ-க்களுக்கு மனசாட்சியே இல்லையா?" என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வி.ஏ.ஓ ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

" அவரோட இறப்புக்கு ஒரு வகையில நீங்களும் காரணம். ஆனா, அவர் இறந்த பிறகு முதல் ஆளா அவருக்கு அஞ்சலி செலுத்த கிளம்பிட்டீங்க..." என்ற ரீதியில் சங்கத்தில் உள்ளவர்களை கடுமையாக விமர்சிக்கும் அந்த ஆடியோவின் முழு உரையாடலையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
நிதிஷ் - மம்தா

பாஜகவுக்கு எதிராக மம்தா - நிதிஷ் 'திடீர்' தீவிரம்... காங்கிரஸை ஏற்கும் எதிர்க்கட்சிகள்?!

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததும், அதையடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதும், 'காங்கிரஸ் வேண்டாம்' என்று சொல்லிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பா.ஜ.க-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. இதற்காக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் களமிறங்கிய பிறகு, சூழல் மாறியிருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சர்க்கஸ் யானையுடன் ஜெமினி சங்கரன்

Gemini Circus: ஒரு யானை,இரண்டு சிங்கங்கள்...  சர்க்கஸ் ஜாம்பவான் ஜெமினி சங்கரனின் கதை!

ர்க்கஸ் உலகில் சரித்திரம் படைத்த ஜெமினி சங்கரன் தனது 99-வது வயதில் மரணித்துள்ளார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சர்க்கஸ் உலகின் குலகுரு என போற்றப்படும் கிலேரி குஞ்ஞி கண்ணனின் சீடனான ராமனிடம் களரி பயின்றார்.

கல்க்கத்தா போஸ் லயன் சர்க்கஸில் பால் பிளேயராக சர்க்கஸ் துறையில் அடியெடுத்து வைத்தார். அடுத்ததாக தலச்சேரியைச் சேர்ந்த ரயமெண்ட் சர்க்கஸிலும் பணியாற்றினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
தோனி

தோனி ஏன் இளைஞர்களால் சூழப்படுகிறார்? - ஓர் அலசல்

டப்பு ஐ.பி.எல் சீசனில் போட்டிகளைக் கடந்து அதன் சுவாரஸ்யங்களுக்கு அப்பாற்பட்டு வெளியே நடக்கும் விஷயங்கள் இன்னும் அதிக சுவாரஸ்யங்களை உள்ளடக்கியிருப்பதை பார்க்க முடிகிறது. அதில் ஒன்று போட்டிகளுக்குப் பிறகு இளம் வீரர்களுடன் தோனி நடத்தும் உரையாடல்.

தோனி ஏன் இளைஞர்களால் சூழப்படுகிறார்?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
கடினமான நபர்கள்...

செல்ஃப் டெவலப்மென்ட்: கடினமான நபர்களைக் கையாளும் ரகசியங்கள்...

சுய முன்னேற்றத்தில் யாருக்குத்தான் அக்கறை இருக்காது..? அப்படி முன்னேறி செல்ல நாம் திட்டமிடும்போது நம் வாழ்க்கையில் சில கடினமான மனிதர்களையும் எதிர்கொள்ளத் தான் வேண்டும்.

'இப்படிப்பட்ட மனிதர்களைப் புரிந்துகொள்வது எப்படி, அவர்களைப் பாசிட்டிவ்வாக அணுகி ஜெயிப்பது எப்படி,

யார் கடினமான நபர்கள், கடினமான மனிதர்களின் வகைகள், அவர்களை எப்படிக் கையாள்வது..?' என்பதற்கு ஒரு புத்தகம் மூலம் வழிகாட்டுகிறது இந்த வார நாணயம் விகடனில் வெளியாகி இருக்கும் சிறப்பு கட்டுரை.

படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்: 40 கோடி சம்பளம் கேட்ட  இயக்குநர்!

மாரி செல்வராஜ் இயக்கி முடித்திருக்கும் 'மாமன்னன்' படத்தில் உதயநிதியைக் காட்டிலும், வடிவேலுவுக்குத்தான் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதுவரை செய்திராத சீரியஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலுவின் நடிப்பு, அத்தனை பேரையும் கலங்கடித்திருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ் தரும் மேலும் சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகள்...

* ஓடிடி ரிலீஸில் வித்தியாசம் காட்டும் 'விடுதலை-1'

* சசிகுமாரின் வருத்தம்!

* 40 கோடி சம்பளம் கேட்ட இயக்குநர்!

* வயதே ஆகாமலிருக்கும் நடிகைக்கு போன் போடும் ஹீரோக்கள்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


9
மாதவிடாய்

மாதவிடாய் விடுப்பு: பாலின சமத்துவம் நோக்கிப் பயணிக்கும் விகடன்..!

விகடன் குழுமம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிவிப்பதில் பெருமை கொள்வதாகவும், பெண் ஊழியர்கள் ஆண்டுக்கு 12 நாள்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மதிக்கக்கூடிய, இருபாலருக்கும் இணக்கமான பணிச்சூழலை உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்த விடுப்பின் மூலம் கிடைக்கும் ஓய்வு, பெண் ஊழியர்களை மேலும் வலிமை உள்ளவர்களாக மாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ள எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான கீதா இளங்கோவன், " 'மாதவிடாய் விடுப்பு' என்ற அவசியமான முன்னெடுப்பை மற்ற நிறுவனங்களும், அரசும் செயல்படுத்த முன்வர வேண்டும்" என வலியுறுத்தி எழுதியுள்ள கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க...