Published:Updated:

ஆளுநர் - தி.மு.க மீண்டும் மோதல்- அறிவாலயத்தைக் காப்பாற்றிய ஜெ.- ஜெய்சங்கர் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 12
Listicle
Vikatan Highlights July 12

ஆளுநர் - தி.மு.க மீண்டும் மோதல்- அறிவாலயத்தைக் காப்பாற்றிய ஜெ.- ஜெய்சங்கர் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

கொதித்தெழுந்த பொன்முடி... மீண்டும் வெடித்த ஆளுநர் - தி.மு.க மோதல்!

த்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, தங்களால் ஆட்சியை பிடிக்க முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பல்வேறு இடையூறுகளை தொடர்ச்சியாக செய்து வருவதாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மகாராஷ்டிராவில் அண்மையில் ஆட்சியைப் பறிகொடுத்த உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோதும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுடன் அவ்வளவாக இணக்கம் காட்டவில்லை என்றாலும், பெரிய அளவில் மோதல் எதுவும் வெடிக்கவில்லை. ஆனால், அவருக்குப் பதிலாக கே.என். ரவி தமிழக கவர்னராக பதவியேற்ற சில மாதங்களிலிருந்தே அரசுடனான மோதல் தொடங்கிவிட்டது.

குறிப்பாக 'நீட்' விலக்கு மசோதாவை பல மாதங்களாக ஜனாபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டது, திமுக அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக மேடைகளில் குற்றம் சாட்டிப் பேசியும் அசைந்து கொடுக்காமல் இருந்து வந்தார் ரவி.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை வழக்கில் ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்து கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் எனக் காட்டமாக கூறி இருந்தது. மேலும், "அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ன் படி தமிழக அமைச்சரவை ஒரு முடிவெடுத்தது என்றால், அந்த முடிவு மாநிலத்தின் ஆளுநருக்கு கட்டுப்பட்டதுதான். அமைச்சரவையின் முடிவு தனக்கு கட்டுப்படாதது என்று ஆளுநர் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" என்றும் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்தே 'நீட்' விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் ரவி. ஆனால் ஜனாதிபதியும் அந்த மசோதா மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது தனிக் கதை.

அதே சமயம், நீட் மசோதாவை அனுப்பிவிட்டாலும், மேலும் பல மசோதாக்கள் ஆளுநரிடம் இன்னும் கிடப்பில்தான் இருக்கின்றன. இந்த நிலையில்தான், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ரவி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான மேலும் பல்வேறு விஷயங்களிலும் இதே போக்குடன் நடந்துகொள்வதாகவும் திமுக ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

ஆனால், ஆளுநர் போக்கில் எந்தவித மாற்றமும் காணப்படவில்லை. தொடர்ந்து அவர், தான் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக விழாக்கள், கல்லூரி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், சனாதான தர்மத்துக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இதற்கு திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அதை எதையுமே ஆளுநர் ரவி கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரவி, "இந்தியாவை பல ராஜாக்கள் ஆண்டபோதும் ஒரே குடும்பமாக இருந்தோம். ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். விந்தியமலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்களை ஆரியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறினர். ஒருங்கிணைந்த மராட்டியம், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளும் திராவிடமாக இருந்தது. திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே" எனக் கூறி இருந்தார்.

ஆளுநரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, " தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநர் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதற்கும் தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முன்வைத்து ஆளுநர் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே வெடித்துள்ள அடுத்த மோதல் என்ன, ஆளுநருக்கு எதிரான அமைச்சர் பொன்முடியின் ரியாக்சன் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


2
அண்ணா அறிவாலயம்

"ஜெயலலிதா அப்படி செய்யாமல் இருந்திருந்தால் அறிவாலயம் இருந்திருக்காது..!" - சீறும் அதிமுக

சென்னை வானகரம் பகுதியில் நேற்றைய தினம் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளாத ஓ.பி.எஸ் தரப்பு, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டது. அதனால் அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. அதில் சிலர் காயமடைந்தனர். களேபரங்களுக்கிடையே நடைபெற்ற அந்த பொதுக்குழுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அ.தி.மு.க அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, "எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன், அனைத்தும் முடிந்த பின்பு தலைமை அலுவலகத்தை மூடியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக திமுக அரசு நடந்துகொண்டுள்ளது" என அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், திமுகவிலிருந்து வைகோ பிரிந்தபோது நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, ஜெயலலிதாதான் அப்போது அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததாக அதிமுக காட்டமாக கூறி உள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
வேலுமணியுடன் செந்தில் பிரபு மற்றும் சந்திரசேகர்

வேலுமணி சகாக்கள்... மலேசியா டு தமிழ்நாடு... அதிர வைக்கும் ரெய்டு பின்னணி!

கொட்டும் மழைக்கு நடுவிலும் அதிரடிக்கும் ரெய்டுகளால் அ.தி.முகவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவில் இது ரெய்டு காலம். ஒற்றைத் தலைமைக்காக முட்டி மோதிக்கு கொண்டிருப்பவர்களை, நாலா பக்கமும் ரெய்டுகள் நெருக்குகின்றன. மாத மாதம் ஒரு முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வீட்டுக்கு சென்று ரெய்டு நடத்துவதை லஞ்ச ஒழிப்புத்துறை வாடிக்கையாக வைத்துள்ளது.

அ.தி.மு.கவினரும் தடபுடல் விருந்துடன் ரெய்டுகளை எதிர் கொண்டு வந்தனர். ஆனால், இந்த முறை வருமானவரித்துறையும் குறிவைத்து தாக்கியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

வேலுமணி மற்றும் அவரது சகாக்களை குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடி ரெய்டுகள் குறித்த அதிர வைக்கும் பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


4
இலங்கை

இலங்கை : ராமாயணத்திலிருந்து அணையாத நெருப்பு; யார் பொறுப்பு! என்னதான் தீர்வு?

லங்கையின் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனப் போராடிய லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி அங்கே நிலை கொண்டுள்ளனர். ஜனாதிபதியோ எங்கோ தலைமறைவாகியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்குமே தெரியாத புதிரின் – மர்மத்தின் - மேல் இலங்கை இருக்கிறது.

ராமாயணத்திலிருந்து தொடர்ந்த இலங்கையின் அணையாத நெருப்புக்கு யார் பொறுப்பு, என்னதான் தீர்வு என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


5
கால்நடை

மாடுகளுக்கு சோறு கொடுக்கலாமா? கால்நடை மருத்துவர் தரும் உஷார் தகவல்!

மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் கால்நடைகளுக்கு வேகவைத்த அரிசி, அதாவது சாதத்தை உணவாக பலரும் கொடுத்துவிடுகின்றனர்.

கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் வைக்கும்போது அதில் சாதத்தை அதிகம் கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது கிராமங்களில் அதிகரித்துவிட்டது.

இது போன்று அதிக அளவில் அரிசியை வேகவைத்து கால்நடைகளுக்கு சோறு கொடுப்பதால் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து கால்நடை மருத்துவர் சொல்லிய தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


6
Actor Jaishankar

"யார் பெயரை முதலில் போடுவது?" - ஜெய்சங்கர் #AppExclusive

டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்று சமீ பத்தில் ஒரு பிரச்னை கிளம்பியி ருக்கிறதே..?

'ஆசீர்வாதம்' படத்தில் என்னுடன் திரு.எஸ்.வி.சுப்பையாவும் நடித்திருக்கிறார். திரு.சுப்பையா ஒரு பெரிய குணச்சித்திர நடிகர். அப்படிப்பட்டவர் எனக்குப் பின்னால் தனது பெயர் காட்டப்பட்டதை மறுக்கவில்லை; பிரச்னையாக்கவும் விடவில்லை!

ஒரு படத்தில் கதாநாயகனின் பெயரைக் காட்டுவது மக்களி டையே ஒரு சென்ஸேஷனை ஏற் படுத்துவதற்காகத்தான்! நான் எம்.ஜி.ஆருடனோ, சிவாஜியுடனோ நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலில் வரவேண்டும்.ஏனெனில், அது அவர்கள் படம். தந்தையாகவோ வேறு ஏதாவது ஒரு வேடத்திலோ நடிப் பவர்கள் தங்கள் புகழைத்தான் எதிர்பார்க்கவேண்டுமே ஒழிய, டைட்டிலை அல்ல!

புதிய இளம் தலைமுறையினர் யாரையும் இப்போது படவுலகில் பார்க்கமுடியவில்லையே, ஏன்?

பட முதலாளிகளுக்குத் தைரியமில்லாததுதான் காரணம். 'பழை யன கழிதலும், புதியன புகுதலும்' என்பது எப்போதுமே எதிர்பார்க்க வேண்டிய விஷயம்தான். திரு. ஜோசப் தளியத் தன்னை அதிக விளம்பரம் செய்துகொள்ளாமல் படத்தில் என்னைப் பிரபலப்படுத்தி, அறிமுகப்படுத்தினார். அதைப்போல பேசாமல் சாதனை செய்பவர்கள் இண்டஸ்ட்ரியில் மிகக் குறைவு!

விகடனுக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டியின் முழு உரையாடல்களைப் படிக்க க்ளிக் செய்க...