Published:Updated:

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!" - ஆபரேஷன் SABS - கிசுகிசு: அடுக்குமாடி வீடு: கவனிக்க...

Vikatan Highlights April 29
Listicle
Vikatan Highlights April 29

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!", ஆபரேஷன் SABS... டீ குடித்தவரைத் தூக்கிய திருச்சி டீம்!, கிசுகிசு: மெர்சல் நடிகருடன் மோதும் சேனல்!, உச்ச நீதிமன்றத்துக்கே உத்தரவிட்ட ஹைகோர்ட் நீதிபதி!, அடுக்குமாடி வீடு... கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்!, வியர்க்குரு... எளிய தீர்வுகள்!,


1
வைகோ

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!"

ண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

'30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுகவுடன் இணைப்பதே நல்லது' என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இக்கடிதம் குறித்து நம்மிடம் பேசிய சு.துரைசாமி, " எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுகவில் இன்று குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது" எனக் குற்றம் சாட்டி உள்ளார்.

வைகோ மீதான அதிருப்திக்கு சு.துரைசாமி கூறும் காரணங்களையும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன?

படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்?

ஆபரேஷன் SABS... டீ குடித்தவரைத் தூக்கிய திருச்சி டீம்!

"வருமான வரித்துறையின் திடீர் அதிரடி ரெய்டால், ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ஜி ஸ்கொயர்' ஆடிப்போயிருக்கிறது.

தொடக்கத்தில், 40 இடங்களில் நடந்த ரெய்டு, அடுத்த 48 மணி நேரத்தில் 90 இடங்களாக விரிந்து, கடைசியில் 140 இடங்களில் நடைபெற்றிருக்கிறது.

இந்த ரெய்டில், வருமான வரித்துறைக்கு ஜாக்பாட்டாகச் சிக்கியவர் ஆடிட்டர் சண்முகராஜாதான். சபரீசனின் ஆடிட்டரான இவரின் மேற்பார்வையில்தான், பல்வேறு தொழில்களும் பரிவர்த்தனைகளும் நடந்ததாகச் சந்தேகிக்கிறது வருமான வரித்துறை.

ஆபரேஷன் SABS' ஏன், எப்படி நடந்தது..?

விசாரணை வளையத்தில் யாரெல்லாம் சிக்கியிருக்கிறார்கள்... சிக்குகிறார்கள்..?

- விரிவான, விறுவிறுப்பான தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில்...

படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: மெர்சல் நடிகருடன் மோதும் சேனல்!

ஜூன் மாதம்தான் கோட்டையின் உச்ச அதிகாரி ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், 'மூன்று மாதங்கள் மட்டும் அந்த உச்ச பதவியில் உட்கார்ந்துகொள்கிறேன். அதன் பிறகு வி.ஆர்.எஸ் கொடுத்துவிடுகிறேன்' எனச் சொல்லி, வடக்கத்திய அதிகாரி ஒருவர் பேசுகிற பேரம் கோட்டையையே திகைக்க வைக்கிறதாம்.

கிசுகிசு பகுதியில் மேலும்...

* மெர்சல் நடிகருடன் மோதும் சின்ன தலைவியின் சேனல்!

* முதன்மையானவர் குறித்து பேசிய அமைச்சர்களின் பட்டியல்!

* பணிவானவர் மாநாடு குறித்து டெல்லிக்கு சொல்லப்பட்ட விஷயங்கள்..!

* அண்ணன் தலைவரின் திடீர் அமைதிக்கு காரணம்...

என அனைத்து அரசியல் கிசுகிசுக்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்

உச்ச நீதிமன்றத்துக்கே உத்தரவிட்ட ஹைகோர்ட் நீதிபதி! - நடந்தது என்ன...?

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஊடகத்தில் தான் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையை நள்ளிரவு 12 மணிக்குள் தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றச் செயலாளருக்கு உத்தரவு போட்ட நிகழ்வு பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு உச்ச நீதிமன்றம் ஆற்றிய எதிர்வினை என்ன..? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
ஷீர்டி சாயிபாபா கோயில்

மூடப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில்! - என்ன காரணம்?

காராஷ்டிராவில் ஷீர்டி சாயிபாபா கோயில் மிகவும் புகழ்பெற்ற புனிதஸ்தலமாகக் கருதப்படுகிறது. விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தரிசிக்க வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 1-ம் தேதியிலிருந்து காலவரையற்று சாயிபாபா கோயிலை மூடப்போவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம்..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
அடுக்குமாடி குடியிருப்புக்கள்

அடுக்குமாடி வீடு... கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்..!

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகரங்களில் வீட்டுமனைகளின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், பலரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவ்வாறு அடுக்குமாடி வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்களை இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் தெரிவிக்கிறார் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன்.

படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
வியர்வை, வியர்க்குரு

வியர்க்குரு... இயற்கை முறையில் எளிய தீர்வுகள்!

கோடைக்கால நோய்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. இதனை, நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; தடுக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

அவர் பகிர்ந்த வியர்க்குரு பிரச்னைக்கான தீர்வுகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
பொன்னியின் செல்வன் 2

Ponniyin Selvan 2: 'நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன்?' - மணிரத்னம் சொல்வது என்ன?

ணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்-2' நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நாவலில் இல்லாத விஷயங்களைப் படத்தில் சேர்த்ததும், நாவலில் இருந்ததை மாற்றியது குறித்தும் விவாதங்கள் எழுந்திருப்பதை பார்க்கமுடிகிறது.

இது தொடர்பாக கடந்த வாரம் ஆனந்த விகடன் பேட்டியில் (26/04/2023) இயக்குநர் மணிரத்னம் சொன்னதை படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

மிஸ்டர் மியாவ்: பெரிய தொகை கேட்கும் விஜய்!

படிக்க இங்கே க்ளிக் செய்க...