அமைச்சரவை மாற்றமா? முன்னதாகவே கிளம்பிய PTR - கோலி Vs கம்பீர் சண்டை: என்ன நடந்தது? - பவார் ராஜினாமா!

அமைச்சரவையில் மாற்றமா?! முன்னதாகவே கிளம்பிய பிடிஆர், கோலி Vs கம்பீர் - இப்படி ஒரு அவல சண்டை தேவைதானா?, சரத் பவார் திடீர் ராஜினாமா... பரபரப்பு!, அதானி குழுமத்தில் மோசடி நடக்கவில்லையா? 'செபி' சொல்வதென்ன?, தடையில்லாமல் பணம் வர வழிகள்!,பைக் மெயின்டனென்ஸ் டிப்ஸ், ஸ்ருதிஹாசன் பேட்டி

அமைச்சரவையில் மாற்றமா?! முன்னதாகவே கிளம்பிய பிடிஆர்...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்தும், அவர்கள், 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார்கள் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ சமீபத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது.
இந்த விவகாரத்தில் பிடிஆர் மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
வழக்கமாக, அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றதும், முதல்வர்தான் முதலில் வெளியேறுவார். பின்னர், அமைச்சர்கள் ஒருவர்பின் ஒருவராக அறையை விட்டு வெளியேறுவார்கள். ஆனால், முன்கூட்டியே பி.டி.ஆர் வெளியேறியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
அமைச்சரவை மாற்றம்
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்துக்கான பரிந்துரைக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கோலி Vs கம்பீர் - இப்படி ஒரு அவல சண்டை தேவைதானா? பின்னணி என்ன?
ஐ.பி.எல் இன் இந்த வார போட்டிகளை மனதில் வைத்து 'Rivalry Week' என ஒரு தனியார் தொலைக்காட்சி விளம்பரம் செய்திருந்தது. அந்தத் தொலைக்காட்சியின் எண்ணத்திற்கேற்ப முதல் போட்டியிலேயே பகை பற்றி எரிந்திருக்கிறது.
விராட் கோலி - கம்பீர் + நவீன் உல் ஹக் இடையேயான அந்த சண்டைதான் இப்போது இணையத்தில் பயங்கர வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இது குறித்த முழுமையான பின்னணி தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
LSGvRCB : கோலி - கம்பீர் சண்டையை தாண்டி அந்தப் போட்டியில் என்னதான் நடந்தது?

சரத் பவார் திடீர் ராஜினாமா... பரபரப்பு!
தேசியவாத காங்கிரஸ் கட்சியில், தற்போது அதன் தலைவர் சரத் பவாருக்கும், அவரின் சகோதரர் மகன் அஜித் பவாருக்கும் இடையே அதிகாரப்போட்டி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக அஜித் பவார் பா.ஜ.க.வில் சேரப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்திருக்கிறார்.
இது குறித்த பரபரப்பான பின்னணி தகவல்கள் மற்றும் சரத் பவாரின் எதிர்கால திட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

அதானி குழுமத்தில் மோசடி நடக்கவில்லையா? 'செபி' சொல்வதென்ன..?
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின்படி அதானி குழுமத்தில் மோசடி நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என செபி உச்ச நீதிமன்றத்தில் கூறியதாகத் தகவல் ஒன்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.
உண்மையில் செபி அவ்வாறு கூறியிருக்கிறதா, உண்மை என்ன?
இது குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

தடையில்லாமல் பணம் வருவதற்கான 'நிதி சுதந்திர' வழிகள்!
ஐம்பது வயதில் ஓய்வு பெற்று, மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால், அந்த ஆசை பலருக் கும் நிறைவேறுவதில்லை. காரணம், 50 வயதில் அவர்களால் நிதி சுதந்திரம் அடைய முடிவதில்லை.
நிதி சுதந்திரம் (Financial Freedom) என்றால் என்ன?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் விநாயக் சொல்லும் விளக்கத்தை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

சம்மருக்கு ஜம்முனு சில பைக் மெயின்டனென்ஸ் டிப்ஸ்!
'அக்னி நட்சத்திரம்' ரீலீஸாகிவிட்டது. நமக்கு மட்டுமல்ல; நம் வாகனங்களுக்கும் இது ஹாட் டைம் மச்சி! 'வெயில் நேரத்தில் ஜில்லுனு ஒரு இளநி… ஜூஸ் குடிச்சு நம் பாடியை கூல் பண்ணுவதுபோல்… இந்த நேரத்தில் பைக்குகளையும் கூல் செய்ய வேண்டியது நம் கடமை பாஸ்!
பைக்குகளுக்கு ஜூஸோ… இளநியெல்லாம் வாங்கிக் குடுத்துச் செலவழிக்க வேண்டியதில்லை. சில சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்! பைக்ஸ் ஹேப்பி அண்ணாச்சி!
இது குறித்து மோட்டார் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் டிப்ஸ்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

"சென்னையையும், அப்பாவையும் மிஸ் பண்ணுறேன்..!"- ஸ்ருதிஹாசன்
பொண்ணு பார்க்கதான் செம ஸ்டைலீஷ். ஆனா, பேச ஆரம்பித்தால் பக்கத்து வீட்டுப்பெண் போல பாந்தம்.
"தெலுங்கில் ரொம்ப பிஸியாகிட்டீங்கபோல. தமிழ்ல உங்களைப் பார்க்கவே முடியறதில்ல'' என்ற சிம்பிள் கேள்விக்கு ஹம்பிளாகப் பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்ருதி.
"தமிழ்ல 'லாபம்' பண்ணினதும், அடுத்து நடிக்கலாம்னு கதைகள் கேட்டேன். அந்தச்சமயத்துலதான் கோவிட் லாக்டௌன். அப்புறம், தெலுங்கில் படங்கள் வரவே, பண்ண ஆரம்பிச்சுட்டேன். இடையே சென்னைக்கு வந்தேன். இங்கே படங்கள் பண்ணணும்னு ஆர்வமாகவும் இருந்தேன். ஏன்னா, என் மனசு முழுக்க சென்னையில தான் இருக்கு..."
Vikatan Plus இதழில் இடம்பெற்றிருக்கும் ஸ்ருதிஹாசன் பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...