மாணவிகளை இழிவுபடுத்தும் 'மூத்த அமைச்சர்' - ஆளுநருக்கு பதிலடி - மோடி கையிலெடுத்த 'The Kerala Story'

மாணவிகளை இழிவுபடுத்தும் 'மூத்த அமைச்சர்', 'திராவிடல் மாடல்': ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!, வைகை கள்ளழகர் திருவிழா கொண்டாட்ட தகவல்கள், மோடி கையிலெடுத்த 'The Kerala Story' , ஆளைக் கொல்லும் வெள்ளைக் காளான்கள், பாரதிராஜா - கமல் சண்டைக்கு காரணமான 'ஒரு கைதியின் டைரி'!

மாணவிகளை இழிவுபடுத்தும் 'மூத்த அமைச்சர்'... வாயை மூடிக்கிடக்கும் முதலமைச்சர்!
கல்லூரி மாணவிகளுக்குத் தமிழக அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருப்பதும், அதற்குக் கட்சித் தலைமையிடமிருந்து எந்த விளக்கமும், கண்டமும் வராமல் இருப்பதும்... தி.மு.கவின் `பெண்கள் நலம்', 'பெண்கள் பாதுகாப்பு', 'பெண்களுக்கான மரியாதை' முகங்களை மீண்டும் ஒருமுறை வெளுக்கவைத்துள்ளது.
அமைச்சர் துரைமுருகன் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசியிருக்கும் வீடியோவில், கல்லூரிப் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகையைப் பற்றி உதிர்த்துள்ள வார்த்தைகள், கண்டிக்கத்தக்கவை, நாகரிகமற்றவை, ஆணாதிக்கமானவை.
அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாச உடல்மொழியுடனும் வாய்க்கொழுப்புடன் அமைச்சர் துரைமுருகனின் அந்த பேச்சை மன்னிக்கவே முடியாது..!

'திராவிடல் மாடல்': ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழ்நாடு அரசையும், திராவிட மாடலையும் விமர்சித்துப் பேசியிருப்பது, ஆளும் தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
திமுக இரண்டாண்டு ஆட்சி எப்படி..? - மினி சர்வே
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்து இரண்டாண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது...
அது குறித்த ஒரு மினி சர்வே-யில் நீங்களும் பங்கெடுக்க இங்கே க்ளிக் செய்க...

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: விண்ணை எட்டிய கோவிந்தா கோஷம்!
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரைத்திருவிழா நிகழ்வுகள் கோலாகலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அழகர்கோயிலில் கடந்த 1-ம் தேதி விழா வைபவம் ஆரம்பமானது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட வைகை கள்ளழகர் திருவிழா கொண்டாட்டம் குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மோடி கையிலெடுத்த 'The Kerala Story'
இன்று கர்நாடக மாநிலம், பெல்லாரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி `The Kerala Story' படம் குறித்துப் பேசினார்.
அப்போது அவர், "ஒரு சமூகத்தில், குறிப்பாக கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள், அறிவுஜீவிகளின் அழகிய பூமியான கேரளா போன்ற மாநிலத்தில் பயங்கரவாதத்தின் விளைவுகளை வெளிப்படுத்தும் வகையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது" என்றார்.
இந்த பட விவகாரத்தில் காங்கிரஸ் மீதான அவரது குற்றச்சாட்டுகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
அதானி விவகாரம்: 'செபி'க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!
அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்ட செபிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பங்கு மோசடி, பண மோசடி என்று பல குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பிப்ரவரியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை பெரிய அளவில் பரபரப்பாகி அதானி குழுமப் பங்குகள் அனைத்தும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

IPL 2023 Round Up: ஹர்பஜனின் கணிப்பு முதல் தோனியின் மாஸ் வரை!
இந்த ஐபிஎல் 2023 சீசன் தொடங்கி, விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. வருகின்ற மே 23-ம் தேதி பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் வீரரான ஹர்பஜன் சிங், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகளை கணித்துள்ளார்.

ஆளைக் கொல்லும் வெள்ளைக் காளான்கள்... உயிர்த்தெழுந்தவரின் அனுபவம்!
நகரின் பெரிய மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் தன்னுடைய இதயத் துடிப்பை எதிரில் இருந்த திரையில் பார்த்துக்கொண்டிருந்தார். குட்டையும் நெட்டையுமாக சீராக இருக்க வேண்டிய அந்த அலை வரிசை தாறுமாறாக இருந்தது.
நேற்று இரவிலிருந்து வாந்தியும், வயிற்றுப்போக்கும் தொடர, தண்ணீர்கூட வயிற்றில் நிற்கவில்லை. சோர்ந்து போயிருந்த கண்ணபிரான் மனத்திரையில் கடந்த இரண்டு நாள்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.

பாரதிராஜா - கமல் சண்டைக்கு காரணமான 'ஒரு கைதியின் டைரி'!
"கிழக்கே போகும் ரயில்' படத்துல நடிக்க ஒரு நடிகையை கமிட் பண்ணியிருந்தேன். அவங்க பெரிய நடிகையுடைய தங்கை. ஷூட்டிங் லொகேஷன் போன பிறகு வரலைன்னு சொல்லிட்டா.
மெட்ராஸுக்கு வந்தோம். ஒரு டான்ஸர் என்கிட்ட அவங்க தங்கைக்கு சான்ஸ் கேட்டாங்க. அப்போ அவங்க பேக்ல இருந்து ஒரு போட்டோ கீழே விழுந்தது. அந்தப் பொண்ணோட சிரிப்பும் காதோரம் இருக்கும் முடியும் பிடிச்சிருந்தது. இந்தப் பொண்ணைப் பார்க்கணும்னு கேட்டு அவங்க வீட்டுக்குப் போனேன்.
அந்தப் பொண்ணு என்னைப் பார்த்ததும் உள்ள ஓடிடுச்சு. அவங்க அம்மாவுக்கு நான் யாருன்னு தெரிஞ்சது. நடிக்கக் கேட்டேன். அந்தப் பொண்ணுக்கு விருப்பமில்லை. அவங்க அம்மா சொல்லி ஒருவழியா ஓகே சொல்லுச்சு. அதுதான் ராதிகா..."
- விகடன் சார்பாக இயக்குநர் கௌதம் மேனன் நடத்திய சந்திப்பில் தனது திரையுலக வாழ்வின் நிறைய பக்கங்களைப் புரட்டிக்காட்டினார் பாரதிராஜா. அதில் கமல் உடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு காரணமாக 'ஒரு கைதியின் டைரி' படத்தின்போது நடந்த ப்ளாஷ்பேக்கையும் நினைவு கூர்ந்தார்.
மேலும், 'கொடிபறக்குது' படத்துக்காக ரஜினி வாங்கிக்கொண்ட சம்பளம், சத்யராஜை ஹீரோவா யோசிச்சது எப்படி என்பது உட்பட பாரதிராஜா இந்த வார ஆனந்த விகடன் இதழில் பகிர்ந்த பல தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...