எடப்பாடியைச் சுற்றி ஷிண்டேக்கள்? -சர்ச்சையில் அமைச்சர்-'இணைந்த கைகள்' இன்டர்வெல்|விகடன் ஹைலைட்ஸ்

எடப்பாடியைச் சுற்றி ஷிண்டேக்கள்? -சர்ச்சையில் அமைச்சர்-'இணைந்த கைகள்' இன்டர்வெல்|விகடன் ஹைலைட்ஸ்

எடப்பாடியைச் சுற்றி 'ஷிண்டே'க்கள்..? பொன்னையனின் பரபரப்பு ஆடியோ
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்படுவது என்பது புதிதல்ல. தேசிய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா, ஜனதா தளம் தொடங்கி சமீபத்தில் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுகள் வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். அதே போன்று தமிழகத்திலும் திராவிட கட்சிகளும் பல பிளவுகளைச் சந்தித்துள்ளன. திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பிளவால் திமுக உருவானது. திமுகவில் ஏற்பட்ட பிளவால் அதிமுக, பின்னர் மதிமுக உருவானது.
அதே போன்று அதிமுகவும் அவ்வப்போது பிளவுகளைச் சந்திப்பதும், அதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதுக்கட்சி தொடங்குவதும் பின்னர் காணாமல் போவதும் நடந்தேறி வருகிறது.
அந்த வகையில், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1987 லும், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017 லும் பிளவைச் சந்தித்த அதிமுகவில் தற்போது மீண்டும் ஒரு பிளவு அரங்கேறி உள்ளது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி பக்கம் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் நிற்கும் நிலையில், அவருக்கு எதிராக மல்லுக்கட்டிய ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பெரிய ஆதரவில்லாத நிலை காணப்படுகிறது. அதே சமயம், நீதிமன்ற தீர்ப்புகள் எப்படி வரப்போகிறது, தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் எடப்பாடியுடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள் தொடங்கி மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் வரை, அவரால் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆதாயம் அடைந்தவர்கள்தான் என்றும், தொடர்ந்து தங்களுக்கான ஆதாயம் மற்றும் செயல்திட்டங்களை மனதில் கொண்டே எடப்பாடியுடன் அவர்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.
சுருக்கமாக சொல்வதானால், எடப்பாடியைச் சுற்றி இருக்கும் மூத்த நிர்வாகிகளில் பலர் எந்த நேரமும் மகாராஷ்டிராவின் 'ஏக்நாத் ஷிண்டே'க்கள் போல மாறத் தயங்காதவர்கள் என்றும் சொல்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது ஒருபுறம் இருந்தாலும், அப்படி நடக்காது என்று அடித்துச் சொல்லிவிடவும் முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரான கூவத்தூர் நிகழ்வு தொடங்கி, முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக தனது அமைச்சரவை சகாக்கள், கட்சி எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் வரை எடப்பாடி காட்டிய தாராளம்' தான், கட்சியின் ஒற்றைத் தலைமையாக தன்னை நிறுவிக்கொள்ளும் தைரியத்தை அவருக்கு அளித்தது.
ஆனால் முதல்வராக இருந்தபோது காட்டிய 'தாராளத்தை இப்போதும் தொடர முடியாது. இப்போது கூட பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்ட, ஒன்றிய அளவில் கட்சி நிர்வாகிகளும் எடப்பாடியிடம் சில கவனிப்புகளைக் கேட்டுப்பெற்றுத்தான் அவரை ஆதரித்ததாக சொல்கிறது பன்னீர் தரப்பு.
எனவே, " மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, கட்சியின் பல மூத்த நிர்வாகிகள் வரை எடப்பாடி மூலமான ஆதாயம் நின்றுபோனாலோ அல்லது இவரால் இனி பயனில்லை என்று கருதினாலோ, ஷிண்டேக்களாக மாற தயங்க மாட்டார்கள். அதற்கு உதாரணம்தான் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனும், கன்னியாகுமரியைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனும் பேசிய உரையாடல். எடப்பாடியைச் சுற்றி இருக்கும் பலர் எந்த நேரமும் ஷிண்டேக்களாக மாறுவார்கள் என்பதையே இந்த ஆடியோ உணர்த்துகிறது" என்றும் சொல்கிறார்கள் பன்னீரை ஆதரிப்பவர்கள்.

பெண்ணை தலையில் அடித்த அமைச்சர்... அண்ணாமலை ட்வீட்டால் வெடித்த சர்ச்சை!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனின் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து சிலர், தங்களின் கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினர். அப்போது, முதியோர் பென்ஷன் கேட்டு மனு கொடுக்கவந்த பெண்ணை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மனு அடங்கிய கவரால் தலையில் அடித்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தின் முழு விவரங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்....

``திமுக-வின் கைக்கூலி பன்னீர்..!" - எடப்பாடி சீறுவதன் பின்னணி என்ன?
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்திருக்கும் கலவரத்தின் பின்னணியிலும், அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதிலும் தி.மு.க அரசின் கைங்கரியம் இருப்பதாகக் கொதிக்கிறது எடப்பாடி தரப்பு.

தப்பி ஓடிய கோத்தபய... இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!
இலங்கையில், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அரசியல் அழுத்தம் காரணமாக இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அவர் தற்போது இலங்கையில் இல்லை. ராணுவ விமானம் மூலம் தன் மனைவியுடன் கோத்தபய இலங்கையிலிருந்து வெளியேறி மாலத்தீவில் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார் பிரதமர் ரணில். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...

இணைந்த கைகள்: ஆபாவாணனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் சினிமா - அதிலும் அந்த `மாஸ்' இன்டர்வெல் பிளாக்!
தற்போது பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் தமிழ்ப் படங்களின் முன்னோடி 1948-ல் வெளியான ‘சந்திரலேகா’. அதன் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், சிவந்த மண் என்று பல ‘மெகா பட்ஜெட்’ திரைப்படங்கள் வந்தன. இவற்றில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடியை நாட்டிய படங்களும் உண்டு. எதிர்பார்த்த அளவிற்கான உயரத்தை எட்டாத படங்களும் உண்டு.
பிறகுச் சற்று ஓய்ந்து போன இந்த டிரெண்டை, தொண்ணூறுகளில் மீண்டும் வெற்றிகரமாக உருவாக்கியவர் என்று ஆபாவாணனைச் சொல்லலாம். பின்னால் வந்த ஷங்கர், ராஜமௌலி போன்றோருக்கு முன்னோடி இவரே. ‘புலன் விசாரணை’ திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையில் இவரைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களாலும் வெற்றிகரமான வணிகத் திரைப்படங்களை உருவாக்கிக் காட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் ஆபாவாணன். ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே என்று வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர். 70 MM என்கிற ‘அகன்ற திரைக்கு’ மறுவாழ்வு கொடுத்தவர், தமிழ் சினிமாவின் வணிகத்தை ‘இன்டர்நேஷனல் ஏரியா’விற்கு விஸ்தரித்தவர் என்கிற பல பெருமைகள் இவருக்கு உண்டு.
‘ஆர்ட் படங்களை மட்டும்தான் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களால் எடுக்க முடியும்’ என்று தமிழ் சினிமாத்துறை அலட்சியமாகக் கருதிக் கொண்டிருந்த காரணத்தினாலேயே கமர்ஷியல் படங்களைத் தயாரிக்க முன்வந்தார் ஆபாவாணன். அதில் ஜெயித்தும் காட்டினார். ஆனால் அவர் தயாரிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணம் ‘விஜயகாந்த்’ மட்டுமே என்பது மாதிரியான பேச்சு உலவியது. ‘ஓகே... இதையும் தாண்டி வருவோம்’ என்று முடிவெடுத்த ஆபாவாணன், அப்போது வளர்ந்து கொண்டிருந்த இளம் ஹீரோக்களான ராம்கி, அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் வைத்து உருவாக்கிய மெகா பட்ஜெட் படம்தான் ‘இணைந்த கைகள்’.
அந்த வகையில் ஆபாவாணனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் சினிமாவாக உருவானதுதான் 'இணைந்த கைகள்' அதிலும் அந்த `மாஸ்' இன்டர்வெல் பிளாக் ஆடியன்ஸின் அப்ளாஸ்களை அள்ளியது. 'இணைந்த கைகள்' குறித்த சுவாரஸ்யமான அலசல்களைப் படிக்க க்ளிக் செய்க...

மறக்க முடியாத மஞ்சள் சால்வை - வைரமுத்து
அரிய பொக்கிஷம் என்று எதையாவது பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா?
‘முதல் மரியாதை’க்கு எனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சர், நான் ராமாவரம் போகாமல் கோபாலபுரம் போனேன். கலைஞர் எனக்கொரு சால்வை அணிவித்தார். அதை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். சால்வையின் நிறம் - மஞ்சள்.
1998ல் வைரமுத்து விகடனுக்கு அளித்த சுவாரஸ்யப் பேட்டியின் முழு உரையாடல்களையும் வாசிக்க க்ளிக் செய்க...