Published:Updated:

`தொங்கலில்விடப்பட்ட இலைப் புள்ளி’ | ஜல்லிக்கட்டு: பரபரப்பு தீர்ப்பு | சினிமா விமர்சனம்: GOOD NIGHT

Vikatan Highlights May 18
Listicle
Vikatan Highlights May 18

`தொங்கலில்விடப்பட்ட இலைப் புள்ளி’ - கழுகார் அப்டேட்ஸ், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: `தடைவிதிக்க முடியாது’, முதல்வராகும் சித்தராமையா, துணை முதல்வராகும் சிவக்குமார்; இருப்பினும் தொடருமா இருவரின் `பனிப்போர்?', வெயிலால் கருத்துப்போன சருமம்... நிறமாற்றத்தைப் போக்க முடியுமா?


1
கழுகார்

`குறை சொன்னவர்களின் லிஸ்ட் வாரிசு கையில்’... `தொங்கலில்விடப்பட்ட இலைப் புள்ளி’ - கழுகார் அப்டேட்ஸ்

ணிவானவரின் அணியை பலவீனப்படுத்த ‘ஆபரேஷன் சவுத்’ ஆளிழுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறது துணிவானவரின் தரப்பு. ஆனால், கடைக்கோடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் புள்ளி, தூதுவிட்டும்கூட அவரைச் சேர்க்கத் தயங்குகிறதாம் துணிவானவர் தரப்பு.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்...

அமைச்சரின் கல்லூரியைச் சுத்தம் செய்ய... 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களா?

ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி மிதிப்பதா? - அமைச்சர்மீதான கடுப்பில் மன்னர் பிரமுகர்!

‘அந்தப் புகார் மட்டும் வேணாம்...’ - கையெடுத்துக் கும்பிடும் பெரிய அதிகாரி!

துணிவானரின் பாராட்டும்... மணியானவரின் கடுப்பும்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
சிவக்குமார் Vs சித்தராமையா.

முதல்வராகும் சித்தராமையா, துணை முதல்வராகும் சிவக்குமார்; இருப்பினும் தொடருமா இருவரின் `பனிப்போர்?'

ன்று காலை காங்கிரஸ் மேலிடம், ``இருவருமே முதல்வர் பதவிக்குத் தகுதியான நபர்கள்தான். பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், அடுத்த லோக் சபா தேர்தல் முடியும் வரையில், சிவக்குமார் மாநிலத் தலைவராகவும் தொடருவார்.

‘என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்டு வார்’ வழக்கம்போல் தொடருமா?

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: `தடைவிதிக்க முடியாது’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ``ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்திருக்கும் ஆவணங்கள் திருப்திகரமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தத் தடையில்லை" என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்தத் தீர்ப்பில் ஒரு நிபந்தனையையும் விதித்திருக்கிறது உச்சநீதிமன்ற அமர்வு.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


4
IPL 2023 பிளேஆஃப்களுக்கான டிக்கெட்டுகள்

IPL 2023 PlayOffs: டிக்கெட்டுகள் விற்பனை இன்று தொடக்கம்

டைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் பரபரப்பு உச்சநிலையை எட்டியுள்ளது. பாயிண்ட் டேபிளின் கடைசி இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் தகுதியை இழந்துவிட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் இதுவரை பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் தகுதியைப் பெற்றுவிட்டது. ஏனைய அணிகள் இடையே பலத்த போட்டி நிலவிவருகிறது. குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் மே 23 மற்றும் மே 24 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இதுவரை ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியான முறையில் கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பிளேஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனையாகவுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
GOOD NIGHT - சினிமா விமர்சனம்

GOOD NIGHT - சினிமா விமர்சனம்

குறட்டைப் பிரச்னையால் ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை காமெடியாகச் சொல்லும் படமே ‘குட் நைட்.'ஐ.டி-யில் பணிபுரியும் மோகன் (மணிகண்டன்), தன் அம்மா, அக்கா, அக்காவின் கணவர், தங்கை ஆகியோருடன் நிறைவாக வாழ்ந்துவருகிறார். ஆனால், அவருக்கு இருக்கும் குறட்டைப் பிரச்னையால் காதல் வாழ்க்கையில் சிக்கல், அலுவலகத்தில் சிக்கல் எனப் பல இன்னல்களைச் சந்திக்கிறார். அடுத்தடுத்து அவருக்கு நிகழும் பிரச்னைகள் என்னென்ன, அவற்றிலிருந்து அவர் மீண்டு வந்தாரா என்பதே படத்தின் கதை.

GOOD NIGHT - இப்படத்திற்கான ஆனந்த விகடன் மதிப்பெண் என்ன?

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்

இங்கே க்ளிக் செய்க...

மேலும் ,

ஃபர்ஹானா - சினிமா விமர்சனம்

இங்கே க்ளிக் செய்க...


6
Modern Love Chennai

Modern Love Chennai: தமிழ் ஆந்தாலஜிகளில் இது ஏன் ஒரு முக்கியமான படைப்பு?

மேசான் பிரைம் வீடியோவில் வெளியான `Modern Love Chennai' வெப் சீரிஸ், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உருவாக்கத் தயாரிப்பாளராகச் செயல்பட்டிருக்கும் இந்த காதல் ஆந்தாலஜி எப்படியிருக்கிறது? தமிழ் ஆந்தாலஜிகளில் இது ஏன் ஒரு முக்கியமான படைப்பு?

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
எலும்பு

உணவுகள் மூலம் எலும்புகளை வலுவாக்குவது எப்படி?

மது உடலின் கட்டமைப்பு எலும்புகளால் ஆனது. உடல் இயக்கத்துக்கே ஆதாரமாக விளங்கும் எலும்புகள் வலுவாக இல்லையென்றால், பல பிரச்னைகளைச் சந்திக்க நேரும். அன்றாட உணவுப்பழக்கத்தின் வழியே எலும்புகளை வலுவாக்குவது எப்படி?

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
சருமம்

வெயிலால் கருத்துப்போன சருமம்... நிறமாற்றத்தைப் போக்க முடியுமா?

வெயிலில் அலைந்து கழுத்து மற்றும் கைகள், கால்கள் கறுத்துவிட்டன. இதை பழைய நிறத்துக்குக் கொண்டுவர முடியுமா? சன் ஸ்கிரீன் உபயோகித்தும் இப்படி ஆகிறது. என்ன செய்வது?

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...