திமுக அரசு: ஆளுநரிடம் EPS நேரில் புகார் - Mr. கழுகு: கொதித்த மத்திய அமைச்சர் - நடிகர் சரத்பாபு மரணம்

திமுக அரசுக்கு எதிராக பேரணி... ஆளுநரிடம் எடப்பாடி புகார் மனு!, மிஸ்டர் கழுகு: 'முதல்வரிடம் பேசவா..?', கொதித்தெழுந்த மத்திய அமைச்சர், 2000 ரூபாய் நோட்டு நீக்கம்.. சாமானியர்களை பாதிக்குமா?வீட்டுக் கடன்: முன்பணம் திரட்டுவது எப்படி?, ஹீட் ஸ்ட்ரோக் ஏன்?, நடிகர் சரத்பாபு காலமானார்!

திமுக அரசுக்கு எதிராக அதிமுக பேரணி... ஆளுநரை சந்தித்து புகார் மனு!
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று அக்கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அவரிடம், ஆளும் திமுக அரசுக்கு எதிராக புகார் மனுவும் அளிக்கப்பட்டது.
அண்மையில் கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் மரணமடைந்த விவகாரம் அடங்குவதற்குள், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பேர் மது குடித்து மரணம் அடைந்த பிரச்னை, திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில், எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக பேரணி முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதிமுக பேரணி, ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் திமுக அரசுக்கு எதிராக கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி உள்பட அனைத்தையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,

அதிமுக பேரணி... போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

மிஸ்டர் கழுகு: 'முதல்வரிடம் பேசவா..?' - கொதித்தெழுந்த மத்திய அமைச்சர்!
பெரிய பொறுப்பிலிருக்கும் தமிழ் பேசும் மத்திய அமைச்சர் அவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், வழக்கமாகத் தங்கும் இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுஸ் நோக்கிச் சென்றிருக்கிறார். அப்;போது நடந்த ஒரு நிகழ்வால், 'இது யதார்த்தமாக நடந்ததா... இல்லை திட்டமிட்ட செயலா என எனக்குத் தெரிந்தாக வேண்டும்' எனக் கேட்டு அமைச்சர் கொதித்தெழுந்துள்ளார்.
இது குறித்த மேலும் விவரங்களை இன்று வெளியான Vikatan Plus இதழில் தருகிறார் மிஸ்டர் கழுகு...
அத்துடன்,
* ' ரோட்டை நீ போடு, மத்ததை நாங்க பாத்துக்குறோம்...' வனத்துறை அதிகாரிகளின் ஏகபோகம்!
* 'கிடைச்சதை தக்கவெச்சுக்கத் தெரியலயே?' - ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளருக்கு எதிராக பேசும் உடன்பிறப்புகள்!
* 'பந்திக்கு முந்து, படைக்கு பிந்து' - எள்ளி நகையாடப்படும் எளிமை எம்.எம்.ஏ!

2000 ரூபாய் நோட்டு நீக்கம்... உண்மையில் சாமானியர்களை பாதிக்குமா? ... முழு அலசல்!
செப்டம்பர் 30-க்குப் பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த 2000 ரூபாய் நோட்டு நீக்கம் உண்மையில் சாமானியர்களை பாதிக்குமா?
இது குறித்த முழுமையான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
`2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்கிற அறிவிப்பு எத்தகையது?' | விகடன் கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

IPL 2023 Round Up: ரோஹித் சர்மாவின் சாதனை முதல் ரஷித் கானுக்கு பரிசளித்த விராட் வரை!
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது, மும்பை அணி. இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 37 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதன் மூலம், டி20 போட்டிகளில் 11,000 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையை படைக்கும் 7வது வீரர், ரோஹித் சர்மா ஆவார்
ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பை படிக்க இங்கே க்ளிக் செய்க...

வீட்டுக் கடன்: முன்பணம் திரட்டுவது எப்படி?
வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கும்போது, வீட்டின் முழுமையான மதிப்புக்குக் கடன் கிடைக்காது. வீட்டை வாங்குபவர், கடன் தொகையைப் பொறுத்து சுமார் 20% முதல் 25 சதவிகித தொகையை கையிலிருந்து முன்பணமாகப் போட வேண்டும். இதை ஆங்கிலத்தில் Down Payment அல்லது Margin Money என்பார்கள்.
இந்த நிலையில், வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை எப்படி திரட்டுவது..?
நிதி ஆலோசகர் ஆர்.வெங்கடேஷ் சொல்லும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

ஹீட் ஸ்ட்ரோக்: காரணங்கள், தற்காக்கும் வழிகள்! | #Visual Story
மாரடைப்பை போலவே திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பு... கோடைக்காலத்தில் ஏற்படும் 'சன் ஸ்ட்ரோக்' (Sun Stroke). 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) என்றும் சொல்லலாம்.
இதற்கான காரணங்கள், தற்காக்கும் வழிகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!
'முள்ளும் மலரும்' 'வேலைக்காரன்', 'அண்ணாமலை' உள்பட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சரத்பாபு (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவில் 1970-களின் கடைசி காலகட்டத்தில் அறிமுகமாகி, கதாநாயகனாகவும், நண்பனாகவும், வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சரத்பாபு.