எடப்பாடி: அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி? - வீட்டுக் கடன்: சூப்பர் ஐடியா - ரூ.2000: S.V. சேகர் விளக்கம்

எடப்பாடி மீது அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?!, வீட்டுக் கடன்: கட்டிய பணத்தை அப்படியே பெறும் சூப்பர் ஐடியா!,"சிப் வைத்த 2000 ரூபாய்..." - கலாய்ப்பவர்களுக்கு எஸ்.வி சேகர் பதில், இயர்போன் உபயோகம்... கேட்கும் திறனை பாதிக்குமா?, சரத்பாபு: நெகிழும் நம்பியார் பேரன் தீபக்!, Dahaad Review

'கடுகடுப்பு... ஏமாற்றம்... அப்செட்...' - எடப்பாடி மீது அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?!
தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம் - ஒழங்கு பிரச்னை, கள்ளச்சாராய மரணங்கள், திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளிக்க அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் நேற்று பேரணி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, பலநூறு பக்கங்கள்கொண்ட அறிக்கையை வழங்கினார் எடப்பாடி.
இந்தச் சந்திப்பின்போது, தங்களையும் அழைத்துச் செல்லாதது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரை அப்செட்டில் ஆழ்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசுகையில், யார் யாருக்கெல்லாம் அதிருப்தி என்பது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

வீட்டுக் கடன்: கட்டிய பணத்தை அப்படியே பெறும் சூப்பர் ஐடியா இதோ..!
வீட்டுக்கடனை வேகமாக அடைப்பதன் மூலம் கடனில் இருந்து வெளியே வர நினைப்பது நல்ல எண்ணம்தான். ஆனால், 20 ஆண்டுகளுக்குக் கட்டிமுடிக்கிற மாதிரி கடன் வாங்கிவிட்டு, அதை ஏன் 15 அல்லது 10 ஆண்டுகளில் கட்டிமுடிக்க வேண்டும்?
அப்படி செய்யாமல் வீட்டுக்கடனில் கூடுதலாகக் கட்டுகிற, கட்டும் தொகையை நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், சூப்பர் லாபம் பார்க்க முடியும்.
இன்னும் சொல்லப்போனால், ஏறக்குறைய ஒரு பைசா செலவு இல்லாமல் உங்களுக்கு இலவசமாக ஒரு வீடு கிடைக்கும் நிலை உருவாகும்.

"சிப் வைத்த 2000 ரூபாய்..." - கலாய்ப்பவர்களுக்கு எஸ்.வி சேகர் பதில்
'செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குப்பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும்' என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதால் 'எஸ்.வி சேகர் சிப் வைத்திருப்பதாகச் சொன்ன 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா?' என்று சமூக வலைதளங்களில் எஸ்.வி சேகரிடம் கிண்டலாக கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், எஸ்.வி சேகரைத் தொடர்புகொண்டு பேசியபோது, தம்மை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்ததோடு, 2000 ரூபாய் நோட்டில் சிப் வைத்திருப்பதாக பேசியது தொடர்பான விளக்கத்தையும் அளித்தார்.

"இன்பச்சுற்றுலா செல்கிறார் ஸ்டாலின்!" - இபிஎஸ் காட்டம்
முதலீட்டாளர்களை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருக்கிறார். அங்கிருந்து ஜப்பானுக்குச் செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, " தொழில் சுற்றுலா என்று விடியா அரசின் முதலமைச்சருடைய மகன், அவருடைய மருமகன் ஆகியோர் தமிழக மக்களைப் பற்றி கவலையில்லாமல் மாறிமாறி வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்" எனக் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்த அவரது காட்டமான அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

புதிய நாடாளுமன்றக் கட்டடம்: ஜனாதிபதி திறப்பதுதான் முறையா?!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம், ராகுல் சொல்வதுபோல் ஜனாதிபதி திறப்பதுதான் முறையா?!

இயர்போன், இயர்பாட்ஸ் உபயோகம்... கேட்கும் திறனை பாதிக்குமா?
ஹெட் செட் , இயர்போன் உபயோகிப்பதால் கேட்கும் திறன் பாதிக்கப்படுமா?
இந்த கேள்விக்கு இன்று வெளியான அவள் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள 'என்ன நோய், எந்த டாக்டர்?' பகுதியில் விளக்கமாக பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

சரத்பாபு: நெகிழும் நம்பியார் பேரன் தீபக்..!
மறைந்த பிரபல வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சிநேகாவின் மகன்தான் தீபக் நம்பியார்.
சிநேகாவுக்கு முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாக, அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்தவர் தீபக். அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
அதன் பிறகு நடிகர் சரத்பாபுவுக்கும் சிநேகாவுக்கும் நம்பியார் முன்னிலையில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், நடிகர் சரத்பாபு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் தீபக் நம்பியார்.
அதில், அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள தகவலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
Dahaad Review: சீரியல் கில்லரைத் தேடும் சோனாக்ஷி சின்ஹா - மிரட்டுகிறதா `தஹாத்'?
படம் குறித்த விரிவான பார்வையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...