ஓரினச் சேர்க்கை: குரங்கு அம்மை அலெர்ட்- சமாளிப்பாரா எடப்பாடி?பெரியார் பல்கலை சர்ச்சை|விகடன் ஹைலைட்ஸ்

ஓரினச் சேர்க்கை: குரங்கு அம்மை அலெர்ட்- சமாளிப்பாரா எடப்பாடி?பெரியார் பல்கலை சர்ச்சை|விகடன் ஹைலைட்ஸ்

'குரங்கு அம்மைக்கு ஓரினச் சேர்க்கையாளர்களே அதிகம் பாதிப்பு!'
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை நோய், தற்போது கேரள இளைஞர் ஒருவர் மூலம் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசுடன் இணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
யு.ஏ.இ-யில் இருந்து கடந்த 12-ம் தேதி விமானத்தில் கேரளா வந்த 35 வயது உள்ள ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. யு.ஏ.இ-ல் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து காரில் கொல்லத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரது சாம்பிள் பரிசோதனைக்காக புனே வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வந்த நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடப்பட்டு, மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது கேரள அரசு. விமானத்தில் வந்த இளைஞருடன் பயணித்த பயணிகள் 164 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் 6 பேரும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை உன்னிப்புடன் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்ட, ஆழப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, இந்த மாவட்டங்களில் மட்டும் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களைத் தனித்தனியாக அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முகாம்கள் விரைவில் தயாராகி விடும் என்றும், அதே சமயம் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாநில அரசுக்கு உதவுவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மருத்துவ நிபுணர்களும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில், 63 நாடுகளில் இருந்து 9,000 க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மே மாதத்திலிருந்து பதிவு செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பான WHO தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த நோய்க்கு ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களே அதிகம் இலக்கு ஆவதாகவும் WHO தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே இது அதிகம் காணப்படுவதாகவும், அமெரிக்காவில் குரங்கு அம்மை பாதித்தவர்களில் பெரும்பாலானோர் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களே என்றும், பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் சுமார் 1000 பேர் இந்த பிரிவினர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் குரங்கு அம்மை, ஓரினச்சேர்க்கையாளர்கள் மட்டுமல்லாது யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடியதுதான் என்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...
'எதிர்கால சி.எம்-மைச் சந்தியுங்கள்...' - கல்வி நிறுவனங்களில் 'புரமோட்' செய்யப்படுகிறாரா அண்ணாமலை?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை மறுநாள் பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பொள்ளாச்சியை போலவே பெரிய அளவில் கூட்டம் சேர்க்க கட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியில் அண்ணாமலையை ப்ரமோட் செய்யும் வேலையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். பள்ளி மாணவர்கள் அண்ணாமலையுடன் கலந்துரையாடும் ஓர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பிட்ட சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வருகின்றனர்.
'எதிர்கால சி.எம்' ; 'செல்ஃபி வித் `அண்ணா' என்பது போன்ற வாசகங்களுடன் கூடிய நோட்டீஸ்கள், அட்டைகள் நகரின் பல இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விநியோகிக்கப்பபடுகிற நிலையில், கல்வி நிறுவனங்களில் அண்ணாமலையை ப்ரமோட் செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

'இனிமேதான் இருக்கு...' - சவால்களைச் சமாளிப்பாரா எடப்பாடி?
ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்ற அச்சநிலையிலேயே இருந்த எடப்பாடிக்கு, நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியது. இதையடுத்து நடந்த பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதும், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடிக்கு அடுத்தடுத்து பிரச்னை வரிசைக் கட்டி நிற்கிறது.
பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்தை ஓ.பி.எஸ் அணுகியிருப்பதால், கட்சி யாருடையது என்று முதலில் முடிவு செய்துவிட்டு, பின்னர், துணைத் தலைவர் பதவியை மாற்றியமைக்கலாம் என்று கூறி, இந்த விவகாரத்தைச் சபாநாயகர் கிடப்பில்போட வாய்ப்பு இருக்கிறது. அதேபோலதான், கட்சி அலுவலகம் சீல் திறப்பில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்றால், தி.மு.க அரசு இந்த பிரச்னையை இப்போதைக்கு முடிக்காது என்று ஆட்சி மட்டத்தில் இருந்து தகவல் வருகிறது.

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி ரீதியான கேள்வியால் வெடித்த சர்ச்சை!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதிரீதியான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. நேற்று பெரியார் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வை ஏற்படுத்தும்விதமாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதை மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துப் பதிவுசெய்தார். இந்தச் செய்தி சமூக வலைளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியது.
பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்தும் இரண்டு இந்திய வம்சாவளிகள் - யார் இவர்கள்?
கொரோனா விதிமுறை மீறல் உட்பட பல சர்ச்சைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் பதவியையும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியையும் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் முதலில் 11 பேர் களமிறங்கிய நிலையில், மூன்று பேர் பின்வாங்கியதால், தற்போது எட்டு பேர் போட்டியில் இருக்கிறார்கள். இவர்கள் எட்டு பேரும், இதற்குமுன் இல்லாத அளவுக்கு, மாறுபட்ட பின்புலங்களைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அதிக செல்வாக்கு பெற்றவராக முன்னேறுகிறார். போட்டியில் இருக்கும் மற்றொருவர், இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவர்மன். அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரலான இருக்கும் இவர், பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து அரசின் சட்ட வல்லுநர்களில் மிக மூத்தவர்.
இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்தும் இந்த இரண்டு இந்திய வம்சாவளிகள் யார் என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

"பிரதாப் போத்தன் சார் ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பேசினார்!"- ` மறைவு குறித்து இயக்குநர் உருக்கம்!
இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நிலைக் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. மலையாளத்தில் 'ஆரவம்' படத்தின் மூலம் நடிகரானவர், பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக வலம் வந்தவர், 'மீண்டும் ஒரு காதல் கதை'யில் இயக்குநரானார். அந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
கமலின் 'வெற்றி விழா', சத்யராஜின் 'ஜீவா', பிரபுவின் 'மை டியர் மார்த்தாண்டன்', நெப்போலியனின் 'சீவலப்பேரி பாண்டி' உட்படப் பல படங்களை இயக்கினார். எல்லைகளைக் கடந்து பல மொழிகளில் பல வருடங்களாக நடித்துவந்தார். முக்கியமாக தமிழ் சினிமாவில் பல துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துவந்தார். சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்திலும் நடித்திருந்தார்.

ஜெயலலிதாவைக் கேட்ட இரண்டே கேள்விகள் - #AppExclusive
" சினிமா உலகைப் பொறுத்த வரையில், எம். ஜி. ஆர். அவர்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. 'வெண்ணிற ஆடை'யில் நடிக்கும் முன்..."
விகடனில் வெளியான ஜெயலலிதா பேட்டி குறித்த முழுமையான உரையாடல்களைப் படிக்க க்ளிக் செயக்...