Published:Updated:

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையா- அண்ணாமலை CM வேட்பாளர்?ரங்கராவ் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 18
Listicle
Vikatan Highlights July 18

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையா- அண்ணாமலை CM வேட்பாளர்?ரங்கராவ் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
சைலேந்திர பாபு, ஸ்டாலின்

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையா?

காவல்துறையினர், ஒரு சமயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் காவல் நிலைய கொலை போன்ற அளவுக்கு அத்துமீறுகிறார்கள் அல்லது கள்ளக்குறிச்சியில் நடந்ததைப் போன்று சட்டம் ஒழுங்கைக் காப்பதில் கோட்டை விடுகிறார்கள் என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது அவர்களது நடவடிக்கைகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஞாயிறன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்குள்ளும் பள்ளிக்கு அருகிலும் நடந்த கலவரமும் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் அதனைக்கண்டித்து போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், இந்த முறை நடந்த போராட்டமும், அதனையொட்டி அரங்கேறிய வன்முறை சம்பவங்களும் தமிழகம் இதுவரை பார்த்திராத புதுவகையானதாக இருக்கிறது என்றும், தீயை அணைக்க வந்த தீயணைப்பு வண்டிகளையே உள்ளே அனுமதிக்காத கலவரக்காரர்களின் போக்கு போன்றவை இந்தியாவின் வட மாநில கலவரங்களை நினைவூட்டுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் உள்பட ஏராளமான காவலர்கள் ரத்தக்காயமடைந்துள்ளனர். இந்த அளவு நிலைமை மோசமாகும் அளவுக்கு காவல்துறை வேடிக்கை பார்த்தது ஏன்? மாணவியின் மர்ம மரணம் நடந்து 4 தினங்களாகியும், மாணவியின் பெற்றோருக்கும் சாவுக்கு நீதி கேட்டு போராடியவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான நம்பிக்கையை உருவாக்க தவறிவிட்டது காவல்துறை.

இதுதான், போராட்டத்தில் சம்பந்தமில்லாத வன்முறை கும்பல் ஊடுருவ வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதிலும் கலவரம் நடந்த ஞாயிறன்று காலை 9 மணி முதலே இரு சக்கர வாகனத்திலும், சரக்கு வாகனங்களிலும் இளம் வயதினர் வந்து கொஞ்சம் கொஞ்சமாக குவிவதை பார்த்த பின்னராவது காவல்துறை உயரதிகாரிகள், குறிப்பாக உளவுத்துறையினர் சுதாரித்திருக்க வேண்டும். 500-க்கும் அதிகமான கலவரக்கும்பல் திரளும் வரைக்கும் 50-க்கும் குறைவான காவலர்களே சம்பவ இடத்தில் நின்றிருக்கின்றனர்.

பிரச்சனைக்குள்ளான பள்ளிக்குள் வருவதற்கு பல திறந்த வழிகள் உள்ள நிலையில், பிரதான சாலையில் மட்டுமே காவலர்கள் நின்றுகொண்டிருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. "தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற வன்முறையை தடுத்திருக்கலாம். உளவுத்துறை செயலற்றுவிட்டது அதனால்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அரசாங்கம் மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி, உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பள்ளியின் தாளாளர், செயலாளர் முதல்வர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தால் இது மாதிரியான அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்" என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டைப் புறந்தள்ளி விட முடியாது.

அதே போன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரானோ பாதிப்பினால் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த தருணத்தில், ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் சுதாரிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதாகவும், குறிப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவின் செயல்பாடு அரசுக்கு அவப்பெயரை வாங்கித்தந்து விட்டதாகவும் திமுகவினரே ஆதங்கப்படுகிறார்கள்.

அதிகாரிகள்தான் இப்படி என்றால், அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்களாவது மாணவியின் பெற்றோரை சந்தித்துப் பேசி, பிரச்சனையின் சூட்டைத் தணிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. அதிலும், இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பில் உடனடி முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாதது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் திமுக ஆதரவாளர்களோ, "ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் காவல்துறை இன்னும் முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் வராதது போன்றுதான் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களில், பிரச்சனையை முற்ற வைத்துவிடுகிறார்கள். காவல்துறையின் பல மட்டங்களில் பாஜக ஆதரவு போக்கு காணப்படுகிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடந்த பள்ளி மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சட்டத்தையும் முறையாக அமல்படுத்தவில்லை" என்று மிக காட்டமாக விமர்சித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. கலவரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் மற்றும் நீதிபதிகளின் கருத்துகளை முழுமையாக தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


2
அண்ணாமலை

முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை... மாணவர்கள் வரை குறிவைக்கும் பாஜக-வின் திட்டம் என்ன?

`தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்' என, பா.ஜ.க.,வினர் கூறி வரும் நிலையில், பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையை, முதல்வர் வேட்பாளராக, வெளிப்படையாகவே அடையாளம் காண்பிக்கும் வகையில் பா.ஜ.க,வினர் அதிரடி காட்டி வருகின்றனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது போல் மாணவர்களுடன் கலந்துரையாடுவது முதல் முறையல்ல. இதற்கு முன் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் பல முறை நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறார். ஆனால், ‘வருங்கால முதல்வரைச் சந்தியுங்கள்’ என்பதுதான் இப்போது பேசு பொருளாகியிருக்கிறது.

இது, வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையை நிறுத்துவதற்கான திட்டமா என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

`சிவசேனா உடைவதை தடுக்க மோடி, அமித் ஷாவிடம் கடைசி நேரத்தில் பேசிய உத்தவ் தாக்கரே?!

டந்த மாதம் 20-ம் தேதி மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பது தெரிந்தவுடன் அன்றே உத்தவ் தாக்கரே அவசரமாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 11 எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை குஜராத்துக்கு அழைத்து சென்றுவிட்டு அங்கிருந்து அஸ்ஸாம் சென்றார். இதன்பிறகு கட்சி உடைவது தவிர்க்க முடியாதது என்பதை தெரிந்து கொண்ட உத்தவ் தாக்கரே, பாஜக-வுடன் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி அடைந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

`சிவசேனா உடைவதை தடுக்க வேண்டும்' என்ற முனைப்புடன் மோடி, அமித் ஷாவிடம் கடைசி நேரத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதற்கு அவர்கள் அளித்த பதில் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க ...


4
சமையல் எண்ணெய்

எண்ணெய் கொடுத்தால் பீர்... பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி!

ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.

சமையல் எண்ணெய் பற்றாக்குறையால் ஜெர்மன் நாட்டில் உள்ள பல வணிக வளாகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எண்ணெய் வழங்குவதில் கெடுபிடியாகப் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வழக்கமாக வாங்கும் சமையல் எண்ணெய்யில் பாதி அளவை மட்டுமே வழங்குகிறது.

இந்த நிலைமையில், தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜெர்மனியில் உள்ள முனிச் நகர மதுபான விடுதி ஒன்று எண்ணெய் கொடுத்தால் பீர் கொடுக்கும் வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


5
வருமான வரி

வருமான வரித் தாக்கல்... யார், எந்தத் தேதிக்குள் செய்ய வேண்டும்?

ருமான வரி விதிகள் ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிலையில், வருமான வரி செலுத்தியவர்கள், வருமான வரி செலுத்தா விட்டாலும் வரி வரம்பைத் தாண்டிய வருமானம் உள்ளவர்கள் உள்பட வரித்தாக்கல் செய்ய வேண்டியவர்கள் ஐந்து வகையினர்.

இந்த ஐந்து வகையினருக்கும் வருமான வரித் தாக்கலுக்கான கடைசித் தேதி மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய விதிகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


6
Tribute to the legendary Actor S.V. Ranga Rao

"அந்தப் பொய்யைச் சொல்லியிருக்காவிட்டால் இன்று நான் இருந்திருக்கமாட்டேன்..!" - எஸ்.வி.ரங்க ராவ்#AppExclusive

எஸ். வி. ரங்க ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் 'அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம் சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார். ஆறாவது பாரம் வரை திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில் தான் படித்தார். பிறகுதான் விசாகப்பட்டினத்தில் 'இண்டர்மீடியட்’டை முடித்துக் கொண்டு, காகினாடாவுக்குப் போய் தாவர சாஸ்திரத்தில் பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றார்.

“‘தமிழில் பேசவும் படிக்கவும் எப்படிப் பழகிக் கொண்டீர்கள்?’ என்று என்னைப் பார்த்து யாராவது கேட்டால் எனக்குச் சிரிப்புத் தான் வரும். நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்! நான் தமிழில் பேசுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஹை ஸ்கூல் படிப்பை முடித்து விட்டு நான் ஆந்திராவுக்குச் சென்றப்போது அங்கு எல்லோரும் நான் பேசிய தெலுங்கைக் கண்டு சிரித்தார்கள். நான் பேசியது மெட்ராஸ் தெலுங்கு!

ஆனந்த விகடன் இதழுக்கு ரங்க ராவ் அளித்த பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க...