Published:Updated:

GST எதிர்ப்பு நாடகமா?-பி.டி.ஆர் ஆச்சர்யம்-500 பவுனுடன் பிறந்த நாள்-கார்த்திக் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 19
Listicle
Vikatan Highlights July 19

GST எதிர்ப்பு நாடகமா?-பி.டி.ஆர் ஆச்சர்யம்-500 பவுனுடன் பிறந்த நாள்-கார்த்திக் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
சூப்பர் மார்க்கெட்

ஜிஎஸ்டி: கூட்டத்தில் ஆதரித்துவிட்டு வெளியே நாடகமாடுகின்றனவா எதிர்க்கட்சிகள்?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி திருத்தப்பட்டது. இதில் புதிதாக சில பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 29 ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், சீஸ், லஸ்ஸி, பனீர், அரிசி, கோதுமை மாவு, தானியங்கள், தேன், அப்பளம், வெல்லம், இறைச்சி, மீன் ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 18 ஆம் தேதி ( நேற்று) முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, சாமான்ய ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முடிவு அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. குறிப்பாக அன்றாட தேவைக்கேற்ப, சில்லறை விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள் என எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, " இது மோடிஜியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்" என ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டிருந்தார். " அதிக வரிகள்... வேலை வாய்ப்புகள் இல்லை... ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவை எப்படி அழிப்பது என்பது பற்றிய பாஜகவின் மாஸ்டர் கிளாஸ் இது..." என அவர் மேலும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

அதேபோன்று இடதுசாரி கட்சிகள் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்பிரச்னையை விவாதிக்க வலியுறுத்தி இரு தினங்களாக அமளியிலும் ஈடுபட்டனர்.

அதே சமயம் "எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பு , ஒரு நாடகம்" என்ற விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

"ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அனைவரின் ஏகோபித்த ஒப்புதலுடன்தான் இந்த 5% ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாஜக-வுக்கு எதிரான காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில நிதியமைச்சர்களும், கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் யாருமே அப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..?

ஜிஎஸ்டி-யை உயர்த்தி விடுவோம் என்று பயந்த காங்கிரஸும், எதிர்க்கட்சிகளும் அப்போது எங்கே போனார்கள்? அவர்களின் பொருளாதார அமைச்சர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? உண்மையில் சொல்லப்போனால், உணவு தானியங்கள் மீதான வரி கசிவைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும், அவற்றின் மீதான ஜிஎஸ்டி விகித திருத்தத்தையும் கேரளா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 7 மாநில நிதியமைச்சர்களால் முன்மொழியப்பட்டது. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு தானியங்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கும் நடவடிக்கையை இவர்கள் ஆதரித்தனர். அங்கே ஆதரித்துவிட்டு, அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து நாடகமாடுகின்றனர்"என பாஜக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பிலோ, யார் என்ன கோரிக்கை வைத்தாலும் முடிவு செய்வது அரசுதானே... மேலும் நாங்கள் சொல்லி எதை அவர்கள் கேட்டுள்ளார்கள்..?" எனப் பதிலடி கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி -யால் ஏற்பட்டுள்ள தாக்கமும் பாதிப்பும் குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
பழனிவேல் தியாகராஜன்

"அறநிலையத்துறையைத்தான் கேட்டேன், ஆனால்..." - ஆச்சர்யம் பகிரும் பி.டி.ஆர்!

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் செய்யும் போராட்டம், நிதி நிலைமையைச் சீர்செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, கட்டண உயர்வு, தனியார்மயமாக்கல், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

"முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவற்றைச் சரி செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள்?"

``அரசாங்கம் நம் கையில் வந்தவுடன் 100 நல்ல அதிகாரிகள் கிடைப்பார்கள். உடனே எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், அது தவறு எனப் புரிந்துவிட்டது. பத்து ஆண்டுகள் ஒரே கட்சி ஆட்சியிலிருந்ததில் பல்வேறு தவறுகள் நடந்திருக்கின்றன. ஊழல் புரையோடிப் போய்விட்டது. ஆலோசனைக்காக துறை ரீதியிலான வல்லுநர்களை நியமிக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதுவும் நடக்கவில்லை. எதிர்பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இங்கே இல்லை. நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அரசாங்கப் பணத்தை அடக்கத்தோடு செலவு செய்யவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். ஏற்கெனவே, ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரக் குழுவில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு பைசாகூட இதுவரை ஊதியமாகக் கொடுக்கவில்லை. விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றைச் சரி செய்து திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.”

தொடர்ந்து பேசிய அவர், "முதல்வர் ஸ்டாலினிடம் என்னை அமைச்சராக்கும் எண்ணமிருந்தால் அறநிலையத்துறை கொடுங்கள்" என்றுதான் நான் கோரிக்கை வைத்தேன் என்ற புதிய தகவலைச் சொன்னதோடு, அதற்கு முதல்வரின் ரியாக்சன் என்னவாக இருந்தது, துறையில் முதல்வரின் தலையீடு இருந்ததா என்பது உள்பட அவர் பகிர்ந்த மேலும் பல தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
வேல்முருகன்

'போவோமா ஊர்கோலம்...' 500 பவுன் நகையுடன் பிறந்த நாள் கொண்டாடிய திமுக ஒன்றியக்குழுத் தலைவர்!

ங்க நகைகளை உடம்பில் போட்டுக் கொண்டு, ஊர் ஊராக வலம் வந்தபடி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்.

கழுத்து, கைகளில் தங்க நகைகள் ஜொலிக்க, பிறந்தநாளில் கவனம் ஈர்த்த இந்த திமுக ஒன்றியக்குழுத் தலைவர் குறித்து வேலூர் திமுகவினர் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


4
உத்தவ் தாக்கரே

அணி மாறும் எம்.பி-க்கள்... நெருக்கடியில் உத்தவ் தாக்கரே!

காராஷ்டிராவில் கடந்த மாதம் 20-ம் தேதி நடந்த சட்டமேலவைத் தேர்தலைத் தொடர்ந்து சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. அதே போன்ற ஒரு நிலை இப்போது ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இன்று சிவசேனா எம்.பி-க்கள் 12 பேர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு டெல்லியில்வைத்து வெளியிடப்படவிருக்கிறது என்ற தகவலும் பரபரக்கிறது.

இதற்காக ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்குச் சென்று முதலில் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அதைத் தொடர்ந்து எம்.பி-க்கள் அணி மாறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

இதையடுத்து சின்னம் கேட்டு ஷிண்டே தேர்தல் கமிஷனை அணுகப்போவதாக தகவல் வெளியாகி உள்ளதால், உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்த மேலும் விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


5
சாய் பல்லவி

சாய் பல்லவியின் 'கார்கி' - கிழிக்கப்படும் சமூக முகத்திரை

``இப்பயெல்லாம் அவள் என்னை அப்பாவா பாக்கறதில்ல... ஆம்பளையா பார்க்கறா!’’ என்று அந்த ஒன்பது வயதுக் குழந்தையின் அப்பா (சரவணன்) வெளிப்படுத்தும் கதறல், ஈட்டியாய் பாய்கிறது சமூகத்தின் மீது.

``மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா அப்படினு சொல்றதை யெல்லாம் கொஞ்சமும் நம்பிடாதே’’ என்று நிருபர் அகல்யா (ஐஸ்வர்ய லெட்சுமி) எள்ளல் சிரிப்புடன், அந்தச் சிறுமியிடம் அலைபேசியில் சொல்லும்போது, சமூகத்தின் முகத்திரை நார்நாராய்க் கிழிந்து தொங்குகிறது.

கொஞ்சம் ஆழமாக யோசித்தால், ‘அப்பா எனும் உறவுகூட பொய்யோ’ என்று பயமாகத்தான் இருக்கிறது. அத்தனை அப்பாக் களையும் சொல்லிவிட முடியாது என்றாலும், ஆங்காங்கே கேள்விப்படும் விஷயங்கள் அப்படித்தானே இருக்கின்றன. மகளின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; தந்தையால் கர்ப்பமான மகள் என்று தினம் தினம் நீள்கின்றனவே பட்டியல்கள்..!

சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்படம் எதை ஆழமாக பேசுகிறது, எத்தகைய விமர்சனங்களை முன்வைக்கிறது, சமூகத்தின் முகத்திரைகளை எப்படியெல்லாம் கிழித்து தொங்கவிடுகிறது என்பது குறித்த ஒரு விரிவான பார்வை...


6
Karthik Exclusive Interview

"சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாத நான் ஹீரோவானேன்!" - நடிகர் கார்த்திக்

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான கார்த்திக் - ராதா ஜோடி அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார்கள் தொடர்ந்து இருவருமே 'பிஸி'யானார்கள். சினிமா ரேஸில் வேகமாக ஓடிய இருவரில் கார்த்திக் பின்தங்கினார். கடந்த எட்டு வருடங்களில் இரண்டு முறை கார்த்திக்குக்கு இடைவெளி ஏற்பட்டது. 'மெளன ராகம்', 'வண்ணக் கனவுகள்', 'கண் சிமிட்டும் நேரம்', 'அக்னி நட்சத்திரம்' படங்கள் இப்போது கார்த்திக்கின் நட்சத்திர அந்தஸ்தை மறுபடியும் உயர்த்தியிருக்கிறது.

பெரிய நடிகராக உயர்ந்திருக்க வேண்டியவர் கார்த்திக். ஆனால் கொடுத்த கால்ஷீட்டுகளை மதிப்பதில்லை என்ற கிசுகிசுக்களில் சிக்கிக்கொண்டு, தன் 'இமேஜைக் கெடுத்துக் கொள்கிறார்' என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் கார்த்திக்கைப் பற்றி வதந்திகள். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம்.

நண்பரோடு வரவேற்பு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். புதுப் பட விளம்பரத்துக்கு 'ஸ்டில் படம்' எடுக்க மேக்கப்புடன் இருந்தார்.

1988 ல் கார்த்திக் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க...