Published:Updated:

OPS:கோட்டை டு கோஷ்டி தலைவர்!- இதுவா திராவிட மாடல்?-டோக்லாம்: சீனா கொடுத்த அதிர்ச்சி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July20
Listicle
Vikatan Highlights July20

OPS:கோட்டை டு கோஷ்டி தலைவர்!- இதுவா திராவிட மாடல்?-டோக்லாம்: சீனா கொடுத்த அதிர்ச்சி|விகடன் ஹைலைட்ஸ்


1
பன்னீர் செல்வம்

'கோட்டை முதல்வர் இப்போ கோஷ்டி தலைவர்!' - ஓ.பி.எஸ் வீழ்ந்த கதை...

ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போதே, ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்தார்கள்.

அங்கு நின்றுகொண்டிருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் அதைத் தடுக்க முயன்றபோது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல், கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களால் அந்த இடமே ரணகளமானது.

அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் தலையிட்டு, கலவரக்காரர்களை அடித்து விரட்டிய நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்ட வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்துக்குச் சீல் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என நீதிமன்றத்தை நாடினர். இந்த நிலையில், 'அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு, பன்னீரின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

அவர் ஏற்கெனவே வகித்து வந்த தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். புதிய துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், அதற்கான கடிதத்தை எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து ஏற்படும் பின்னடைவுகளுக்கிடையே தற்போதைக்கு பன்னீருக்கு உள்ள ஒரே நம்பிக்கை, தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள முறையீட்டு மனுக்கள்தான்.

அதிமுகவில் ஜெயலலிதா - திருநாவுக்கரசர் இடையே அதிகாரப் போட்டி எழுந்தபோது, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெரும்பான்மையாக பெற்ற ஜெயலலிதாவுக்கே இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியது. அதேபோன்று உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் பெரும்பான்மைஎம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளின் ஆதரவு அடிப்படையில் அகிலேஷ் யாதவிடம் கட்சியை தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது.

இந்த நிலைமையில், தற்போதைய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும், மேற்கூறிய தேர்தல் ஆணையத்தின் கடந்த கால முடிவுகளையும் முடிச்சுப்போட்டுப் பார்த்தால், கட்சியும் சின்னமும் முழுமையாக எடப்பாடி வசம் செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

மொத்தத்தில் நடப்பது எல்லாம் பன்னீரின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது என்றே சொல்லலாம். 'தர்ம யுத்தம்'நடத்தியபோது தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள தவறியது, முதல்வர் பதவியிலிருக்கும்போதே கட்சியை மெல்ல மெல்ல தனது பிடியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடப்பாடி மேற்கொண்டு வருவதை சரியாக உணரத்தவறியது எனப் பன்னீரின் அரசியல் சொதப்பல்களை வரிசையாக பட்டியலிடுகின்றனர், எடப்பாடி பக்கம் தாவிய அவரது முன்னாள் விசுவாசிகள்.

" கட்சிக்கான பத்திரிகை, டி.வி சேனல் என எல்லாமும் தொடங்கி, 'அதிமுகவின் முகம் நான்தான்' என்பதை கட்சியினரிடம் மெல்ல மெல்ல நிலைநாட்டி வந்தார் எடப்பாடி. அப்படியான தொலைநோக்கு சாதுரியத்துடன் செயல்பட்ட அவரது கையில் கட்சி இருப்பது சரிதான். நீதிமன்றம், தகுதியானவரிடம்தான் சாவியை ஒப்படைக்கச் சொல்லி இருக்கிறது.

இப்போது எடப்பாடியை ஆதரிக்கும் கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அவர் மீதான விசுவாசத்தில் ஒன்றும் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அல்ல. கடந்த காலத்திலும், இப்போதும் அவர் தொடர்ந்து படியளிப்பதாலேயே அவரை ஆதரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அது நின்றுபோனால், அடுத்து என்ன என்று யோசிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எனவே தனக்கான நேரம் வரும் வரை ஓ.பி.எஸ் காத்திருந்து. கட்சிக்குள் இருந்தே போராடி இருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யத் தவறிவிட்டார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் அதிமுகவின் பெரிய தலைவராக முன்னிறுத்தப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 'அ.தி.மு.க உடன் கூட்டணி அல்லது அதனை உடைப்பது' என்ற நோக்கத்திலேயேதான் பா.ஜ.க அதனைச் செய்தது. ஆனால், தங்களது எதிர்பார்ப்பை ஓ.பி.எஸ் செய்ய தவறிவிட்டதால், அவரைக் கைவிட்டு எடப்பாடி பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டது.

இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. கட்சி எடப்பாடி வசம்தான் செல்லும் என்பதைக் கணித்துள்ள பா.ஜ.க, 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க முரண்டு பிடிக்கக்கூடாது என்று நினைக்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தற்போது நடக்கும் வருமான வரித்துறை ரெய்டுகள் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் எல்லாம் அதை கணக்குப்போட்டுதான்" எனக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஆக மொத்தம், முதல் சுற்றில் எடப்பாடியிடம் ஓ.பி.எஸ் வீழ்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். கோட்டையில் முதல்வராக இருந்தவர் 'கோஷ்டித்தலைவர்' என்ற அளவுக்குத்தான் பன்னீரின் அரசியல் செல்வாக்கு இப்போதைக்கு இருக்கிறது. அடுத்து தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இதே ரீதியில் இருந்தால், அவரிடம் இருக்கும் அந்த கோஷ்டியும் காணாமால் போய்விடும்.

இந்த நிலையில், அ.தி.மு.க அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


2
ஸ்டாலின் - மோடி

இலவச மின்சாரம் துறப்பு: 'மோடி மாடல்' ஆட்சியைப் பின்பற்றுகிறதா `திராவிட மாடல்'?

மிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூலை 18-ம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் தொடர் அழுத்தம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் சுமையைக் கருத்தில்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி இருந்தார், இதற்கு எதிர்க்கட்சிகள் தொடங்கி தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், 100 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் இல்லை என்பதை தேவை இல்லாதவர்கள் எழுதிக் கொடுக்கலாம் என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசைப் பின் தொடர்கிறது தி.மு.க அரசு என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள்.

பல்வேறு திட்டங்களில் மத்திய அரசைப் பின் தொடரும் தி.மு.க அரசு, மின்சார கட்டண உயர்விலும் மோடி மாடலைத் தொடர்வதாகவும் இதுதான் திராவிட மாடலா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க அரசின் மீதான இந்த விமர்சனம் உண்மைதானா என்பது குறித்த விரிவாக படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
பாஸ்போர்ட்

இந்திய குடியுரிமையை துறந்த 1.63 லட்சம் இந்தியர்கள்!

டந்த 2019 முதல் நடப்பு ஆண்டு வரை இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களின் விவரங்களையும், எண்ணிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இந்திய குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் குடியுரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை குறித்து தெரிவித்த விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


4
இந்தியா - சீனா - டோக்லாம்

டோக்லாம் எல்லையில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா... அதிர்ச்சியூட்டும் செயற்கைகோள் படங்கள்!

ண்மைக்காலமாக இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சீனா-இந்தியா இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்த வண்ணமாக இருந்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே வெடித்த மோதல், சுமார் 73 நாள்கள் வரை நீடித்தது. அந்தப் பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது தகவல் வெளியானது.

இந்த நிலையில், டோக்லாம் அருகே பூடானுக்குச் சொந்தமான பகுதியில், சீன ராணுவத்தினர் தற்போது அந்தப் பகுதிக்கு முழுமையாக குடியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


5
எஸ்.ஜே.சூர்யா

" 'வாலி', ' குஷி'யெல்லாம் நான் உணர்ந்த விஷயங்கள்..!" - எஸ்.ஜே.சூர்யா

முறுக்கு மீசை, மொசுமொசு தாடி, பரட்டைத் தலை... ஒரு பேச்சுலர் வாழ்வதற்கான அத்தனை அடையாளங்களுடன் கலைந்துகிடக்கிற தி.நகர் ஃப்ளாட்டில் பால்கனியில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

" எந்த வேலைக்குப் போனாலும், அதுல டாப்பா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். எதுன்னா லும் சரி, அதோட எக்ஸ்ட்ரீம் வரைக்கும் போய்ப் பார்க்க ஆசைப்படுவேன். இதுல டாப் ஸ்டார் ஆகணும்னா, அதுக்கு என்னென்னபண்ணணுமோ அத்தனையும் பண்ணிப் பார்ப்பேன். அப்படித்தான் இந்த கெட்-அப் சேஞ்ச். ஜிம் போறேன், டான்ஸ் கிளாஸ் போறேன்,டயட்ல இருக்கேன். அடிச்சா முரட்டு அடியா அடிச்சிரணும்!"

- எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, விகடனுக்கு அளித்த பேட்டியின் முழுமையான உரையாடல்களைப் படிக்க க்ளிக் செய்க...