Published:Updated:

2024: BJP- யை வீழ்த்துவது சாத்தியமா?-எடப்பாடிக்கு நெருக்கடி?-பர்சனல் பகிரும் சமந்தா|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 22
Listicle
Vikatan Highlights July 22

2024: BJP- யை வீழ்த்துவது சாத்தியமா?-எடப்பாடிக்கு நெருக்கடி?-பர்சனல் பகிரும் சமந்தா|விகடன் ஹைலைட்ஸ்


1
சோனியா காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி

2024 தேர்தல்: பாஜகவை எதிர்க்கட்சிகள் வீட்டுக்கு அனுப்புவது சாத்தியமா?

ரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை எப்படியாவது ஆட்சியிலிருந்து அகற்றி விட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம் இருந்தாலும்,

அதற்கான அரசியல் வியூகம், மக்களைக் கவரும் பிரசாரங்கள், ஒற்றுமை போன்றவற்றில் அவற்றின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறதா இல்லையா என்பதை நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலே உணர்த்திவிட்டது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை மற்றும் முன்னேற்பாடுகளை நியாமாக பார்த்தால், இருப்பதில் பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிதான் முன்னின்று மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் சோனியா காந்திக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை காரணம் காட்டி அந்தக் கட்சி மெத்தனமாக இருந்த நிலையில், மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கூட்டு வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்தாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைத்ததாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், அக்கூட்டத்திற்கு தனது பிரதிநிதியை அனுப்பி வைத்தது. அதே சமயம், இதர முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட நிலையில், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

அப்போதே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேலியான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், மம்தா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த பெரும்பாலான கட்சிகள் விரும்பின. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து சில கட்சிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பெயரையும், சில கட்சிகள், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெயரையும் பரிந்துரைத்தன. ஆனால் ஃபரூக் அப்துல்லாவும் மறுத்துவிட்ட நிலையில், கடைசியில் யாரும் எதிர்பாராவிதமாக யஸ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டார்.

இதனிடையே, 'பாஜக பழங்குடியின மக்களின் காவலன்' என்ற இமேஜுடன் நிறுத்தப்பட்டார் ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு. மண்ணின் மகள் என்பதால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் முர்முவுக்கு ஆதரவளிப்பதாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்தார். அதேபோன்று அரசியல் ரீதியாக பாஜக-வுக்கு எதிராக இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட மேலும் சில மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதை எதிர்பார்த்துதான் பாஜக முர்முவை நிறுத்தியது. அதன் கணக்கு தப்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது ஆட்சியைக் கவிழ்த்த போதிலும், பாஜக நிறுத்திய முர்முவுக்கு சிவசேனா ஆதரவளித்ததுதான் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் உச்சம்.

இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 64.03% வாக்குகளைப் பெற்று திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றபோதிலும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்பி.க்கள் கூட முர்முவுக்கு அணி மாறி வாக்களித்து இருப்பதாக வெளியாகி உள்ள தகவலும், யஸ்வந்த் சின்ஹா ​​எதிர்பார்த்த வாக்குகளைப் பெறத் தவறியதும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கரை ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மம்தாவின் இந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக-வுடன் மம்தா மோதலை விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாக உள்ளது என்றும், அந்தக் கட்சியுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தா பானர்ஜி விரும்பியதகாவும், அது நடக்காது என்று தெரிந்த உடன் பின்வாங்கிவிட்டதாகவும் கூறினார்.

இப்படியான சூழலில், 2024 தேர்தலில் பாஜக-வை ஆட்சியிலிருந்து தூக்கி வீசுவோம் என நேற்று ஆவேசமாக கொல்கத்தாவில் நடைபெற்ற தனது கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசி உள்ளார் மம்தா. ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பதிவான செல்லாத வாக்கு, 100% முர்முவுக்கு வாக்களித்த மாநிலங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


2
எடப்பாடி பழனிசாமி

குட்கா ஊழல் வழக்கு: எடப்பாடியை நெருக்குகிறதா பாஜக?!

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியுள்ளது. இது அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் ஒரு புயலை கிளப்பி உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசியபோது, "தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போது, குட்கா வழக்கை மிக தீவிரமாகக் கையில் எடுத்தது. ஆனால், வழக்கு சி.பி.ஐ-யிடம் இருந்ததால் அ.தி.மு.க-வை எதுவும் செய்ய முடியவில்லை. 2017-ம் ஆண்டு எங்கள் கட்சி உடைந்தபோது ஆட்சியைத் தக்கவைக்க சில சமரசங்களைச் செய்தோம். ஏனென்றால், அப்போது தர்மயுத்தம் நடத்தி ஓ.பி.எஸ் பலமாக இருந்தார். ஆனால், இந்த முறை ஓ.பி.எஸ் ரொம்பவே வீக்காக இருக்கிறார். நாங்களோ அம்மா இருந்ததுபோல மிக பலமாக இருக்கிறோம்" என்கிறார்கள்.

எடப்பாடியின் சமீப நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக இந்த குட்கா ஊழல் வழக்கை கையிலெடுத்திருப்பதாக தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் மேலும் கூறுகிறார்கள். இது தொடர்பான முழுமையான விவரங்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
செந்தில்வேலன் ஐ.பி.எஸ்

 'டாக்டர் டு ஐ.பி.எஸ்!'... உளவுத்துறை ஐஜி-யாக செந்தில்வேலன் தேர்வு செய்யப்பட்டது எப்படி?!

செந்தில்வேலன் ஐ.பி.எஸ்-ஸின் சொந்த ஊர் மதுரை. இவரின் தந்தை தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலைப்பார்த்தார். செந்தில்வேலனுக்கு சிறு வயது முதல் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் அவரின் தந்தை, செந்தில்வேலனை டாக்டராக்க ஆசைப்பட்டார். அதனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முதலில் செந்தில்வேலன் டாக்டரானார். அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியானார்.

தமிழ்நாடு கேர்டர் ஐ.பி.எஸ் அதிகாரியான டாக்டர் செந்தில்வேலனுக்கு முதலில் கமுதியில் ஏ.எஸ்.பி-யாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு தொடங்கி மத்திய அரசின் உளவுத்துறை பணி வரைக்கும் சென்று திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், எங்கெல்லாம் பணிபுரிந்தார், எங்கெங்கு சிக்கலான நிலைமைகளைச் சமாளித்தார், உளவுத்துறை ஐஜி பதவிக்கு வரும் அளவுக்கு செந்தில்வேலன் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


4
மாம்பழம் ( www.kaleemullahkhan.com )

ஒரே மரத்தில் 300 வகை மாம்பழம்! இந்தியாவின் மாம்பழ தந்தையின் கண்டுபிடிப்பு!

ரு மாங்காய் மரத்தை கண்டாலே, அம்மரத்தின் மாம்பழங்களை புசிக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் ஒரே மாமரத்தில் 300 வகையான மாம்பழங்கள் இருந்தால் எப்படி இருக்கும்?

300 வகையான மாம்பழம் ஒரே மரத்தில் எப்படி வளரும் என வினவுகிறீர்களா? இதை சாத்தியப்படுத்தி காட்டி இருக்கிறார், இந்தியாவின் மாம்பழ தந்தை என அழைக்கப்படும் கலீம் உல்லாஹ் கான்.

தன்னுடைய பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, இளம் வயதிலேயே, இதற்கான முயற்சிகளில் இறங்கிய அவர், 300 வகையான மாம்பழம் ஒரே மரத்தில் வளருவதை சாத்தியப்படுத்தியது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


5
ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods)

இட்லி, தோசை மாவு விற்பனையில் ரூ.700 கோடி... எப்படி ஜெயித்தது இந்த நிறுவனம்?

சிலர் செய்யும் தொழிலில் எப்போதாவது திருப்புமுனை ஏற்படலாம். ஆனால், சிலருடைய வாழ்க்கை மொத்தமுமே திருப்புமுனைதான். அப்படிப்பட்ட ஒருவர்தான், ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods) நிறுவனத்தின் நிறுவனர் முஸ்தபா. இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ஆண்டுக்கு ரூ.700 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2000 கோடிக்குமேல்.

கேரளாவில் உள்ள வயநாட்டில் பிறந்தவர் முஸ்தபா. பெரிய குடும்பம். அப்பா கூலி வேலை பார்ப்பவர். அம்மாவும் கிராமத்தில் கிடைக்கும் சிறுசிறு வேலையை செய்பவர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மூன்று வேலை உணவு என்பது கனவுதான். சிறு வயதில் முஸ்தபா பள்ளிக்கூடத்துக்கு செல்வதே மதியம் உணவு கிடைக்கும் என்பதற்காகத்தான்.

இத்தகைய பின்னணியில் வளர்ந்தவரின் நிறுவனம்தான் வெறும் இட்லி, தோசை மாவு விற்பனையில் ரூ.700 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டும் அளவுக்கு ஜெயித்துள்ளது. இந்த வெற்றி எப்படி சாத்தியமானது, சந்தித்த இடையூறுகள் என்ன, அதை முஸ்தபா எப்படி எதிர்கொண்டார் என்பது உள்பட படித்தாலே உத்வேகம் அளிக்கக்கூடிய விரிவான ஸ்டோரியைப் படிக்க க்ளிக் செய்க...


6
சமந்தா,நாக சைதன்யா

'ஓ சொல்றியா மாமா' பாடல்... விவாகரத்து...நாக சைதன்யா! ' - பர்சனல் பகிரும் சமந்தா

பாலிவுட்டில் கரண் ஜோஹரின் பிரபலமான டாக் ஷோ 'காஃபி வித் கரண்' (Koffee with Karan). சினிமா பிரபலங்களின் பர்சனல் பக்கங்கள் தொடர்பான ரகசியங்களை வெளியே கொண்டு வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். ஆறு சீசன்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி தற்போது 7 -வது சீசனை Disney+ Hotstar-ல் வெளியிட்டு வருகிறது. முதல் எபிசோட்டில் ஆலியா பட், ரன்வீர் சிங், இரண்டாவது எபிசோட்டில் சாரா அலி கான் மற்றும் ஜான்வி கபூர் போன்றோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் மூன்றாவது எபிசோடில் சமந்தாவும், அக்‌ஷய்குமாரும் கலந்துகொள்ளப் போவதாக ப்ரோமோ வெளியானது. அதில் சமந்தா அவரது விவாகரத்து குறித்து பேசப் போவதாக ப்ரோமோவில் காட்டியிருந்தனர்.

அதன்படி இந்த லேட்டஸ்ட் எபிசோடில் கலந்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா உடனான விவாகரத்து, ஹிட்டடித்த 'ஓ சொல்றியா மாமா' பாடலில் நடித்தது உள்பட பகிர்ந்த பர்சனல் விஷயங்களைப் படிக்க க்ளிக் செய்க...


7
An Exclusive Interview With Cho - 1967

சோம்பலே அறியாத சோ!

மார்கழி மாதக்குளிரிலும் அதிகாலையில் எழுந்துவிடுகிறார் இவர். பத்திரிகையை ஒரு வரி கூட விடாமல் படிக்கிறார்.

அரசியலில் அத்தனை ஆர்வம் இவருக்கு. ஆனால், செய்திகளைப் படிப்பதோடு சரி. அரசியல் பற்று, தந்தை ஶ்ரீனிவாச ஐயரிடமிருந்து வந்திருந்தாலும், அரசியலில் நேரடியாக ஈடுபடுவது இவருக்குப் பிடிக்காது!

விகடனில் வெளியான சோ-வின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டியை விரிவாக படிக்க க்ளிக் செய்க...