Published:Updated:

கலக்கத்தில் எடப்பாடி-ஓரணியில் OPS-சசி-பணக்கார ராஜபக்சேக்கள்-சிலுக்கு ஸ்மிதா உண்மைகள்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 26
Listicle
Vikatan Highlights July 26

கலக்கத்தில் எடப்பாடி-ஓரணியில் OPS-சசி-பணக்கார ராஜபக்சேக்கள்-சிலுக்கு ஸ்மிதா உண்மைகள்|விகடன் ஹைலைட்ஸ்


1
எடப்பாடி பழனிசாமி

காத்திருக்கும் சிக்கல்கள்... கலக்கத்தில் எடப்பாடி!

ற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான மோதலில், ஓ. பன்னீர் செல்வத்தை வீழ்த்தி வெற்றி கண்டார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் சாவி கையில் கிடைத்தபோதும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனபோதும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார் எடப்பாடி.

அ.தி.மு.க நிர்வாகிகள் பெரும்பாலானோரை தன் பக்கம் வளைத்துவிட்ட போதிலும், கட்சி முழுமையாக எடப்பாடி பக்கம் வருவது என்பது தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கும் சாதகமான தீர்ப்புகளைப் பொறுத்தே இருக்கிறது. ஆனால், அது அத்தனை சுலபமல்ல. ஏனெனில் பன்னீர் செல்வம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் சசிகலாவும் கட்சிக்கு உரிமை கொண்டாடிக்கொண்டு இருப்பது போன்றவற்றால், நிலைமை சிக்கல் நிறைந்ததாகவே உள்ளது.

இந்த நிலையில் 'டெல்லி'யின் கடைக்கண் பார்வை இருந்தால், இந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்திப்பதற்காக கடந்த வாரம் டெல்லி சென்றார் எடப்பாடி. ஆனால், அங்கு அவருக்குத் தனிப்பட்ட சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததோடு, உரிய மரியாதையும் அளிக்கப்படவில்லை என்பதால் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில், டெல்லியின் காற்று தங்கள் பக்கம் வீசுவதாக பன்னீர் முகாம் ஏக குஷியில் இருக்கிறது. டெல்லியில் எடப்பாடிக்கு நேர்ந்த அவமதிப்பைச் சொல்லிச் சொல்லி மகிழும் பன்னீர் ஆதரவாளர்கள், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு, டெல்லியின் தற்போதைய பாராமுகம் போன்றவை எடப்பாடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நிலைமை மாறினால் இவர்களில் பலர் பன்னீர் முகாமுக்குத் தாவவும் தயங்க மாட்டார்கள் என்பதால், வரும் நாட்களில் அ,தி.மு.க-வில் மீண்டும் பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் அக்கட்சியின் உள் விவகாரத்தை அறிந்தவர்கள்.

இந்த நிலையில், 5 நாள் பயணத்துக்கு திட்டமிட்டு டெல்லி சென்ற எடப்பாடி அப்செட்டாகி உடனே சென்னை திரும்பியது ஏன், என்பது குறித்த விரிவான பின்னணி தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
சசிகலா, பன்னீர்

சசிகலா ஆதரவு... எடப்பாடிக்கு எதிராக ஒருங்கிணைகிறதா எதிரணி?!

அ.தி.மு.க-வின் ஒற்றை மக்களவை எம்.பி-யாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத்தும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜூலை 23-ம் தேதி எடப்பாடியின் இந்த முடிவுக்கு எதிராகவும், ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகவும் சசிகலா அறிக்கை வெளியிட்டார்.

திடீரென பன்னீர் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக சசிகலா வெளிப்படையாக ஆதரவளிக்க என்ன காரணம், எடப்பாடிக்கு எதிராக சசிகலா, பன்னீர் செல்வம், தினகரன் உள்ளிட்டவர்கள் ஓரணியில் திரள்கிறார்களா என்பது குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
தனியார் பள்ளி

"குழந்தைகள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல!"- தனியார் பள்ளிகளின் புதிய நிபந்தனை!

ள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியில் தனியார் பள்ளி மாணவி மரணம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன.

'மாணவர்கள் பள்ளியின் காவலில் இருக்கும்போது ஏதாவது பிரச்னை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்' என்ற ரீதியில் பெற்றோரிடம் கோவை தனியார் பள்ளி கையெழுத்து வாங்கிய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


4
ஜிஎஸ்டி

"உணவுப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி... ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தார்கள்..?!"

`25 கிலோவுக்குக் குறைவான அளவுகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை, தயிர், வெண்ணெய்க்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்’ என்கிற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், `உணவுப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி விதித்திருப்பதற்கு மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தார்கள் என்று காட்டமாக கூறி உள்ளார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


5
மகிந்த ராஜபக்சே

'வராத கப்பலுக்கு துறைமுகம் கட்டிய ராஜபக்சே!'

ஜூலை 25-ம் தேதி அன்று, `சென்னை சிட்டிசன் ஃபோரம்' (CCF) அமைப்பிலிருந்து, இலங்கையின் தற்போதைய நிலை குறித்து விவரிக்க ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த இந்தக் கருத்தரங்கில், இலங்கையைச் சேர்ந்த அரசியல் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஏ.பி.மதன், இந்தியாவின் மூத்த பத்திரிகை ஆசிரியர்களுள் ஒருவரான பக்வான் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அதற்கான தீர்வுகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டது.

கருத்தரங்கில் பேசியவர்கள், இலங்கை அரசு நிர்வாகத்தில் ராஜபக்சேக்கள் செய்த பல குளறுபடிகளை விரிவாக விவரித்தார்கள். அதனைப் படிக்க க்ளிக் செய்க...


6
கவாத்து பணியில்

வறண்ட ராமநாதபுரத்திலும் பொங்கும் பசுமை! - 'பல்லே பல்லே' பஞ்சாப் விவசாயிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது வல்லந்தை ஊராட்சி. இங்கு 350 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து பிரமாண்ட மாகக் காட்சி அளிக்கும் அகல் இயற்கை வேளாண் தோட்டத்தில் மா, பலா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீத்தா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம், பப்பாளி உட்பட ஆயிரக்கணக்கான மரங்கள் செழிப்பாக விளைந்து கவனம் ஈர்க்கின்றன. கடும் வறட்சி நிலவும் பகுதியான வல்லந்தையில் இப்படி ஒரு பசுமையான தோட்டத்தை உருவாக்கியிருப்பது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் என்பதுதான் கூடுதல் ஆச்சர்யம்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுவதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் மா, கொய்யா, நெல்லி கூடுதல் சுவையுடன் இருப்பதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இதனால் ராமநாதபுரம் பகுதி வியாபாரிகள் மத்தியில் இங்கு உற்பத்தியாகும் விளைபொருள்களுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக, ‘சிங் மாம்பழம்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களுக்கு இப்பகுதி மக்களிடம் மவுசு அதிகம்.

வறண்ட ராமநாதபுரத்திலும் பசுமையை உருவாக்க முடியும் என இந்த பஞ்சாப் விவசாயிகளின் நம்பிக்கைக்கு காரணம், அவர்களின் விடா முயற்சி, மாநிலம் விட்டு மாநிலம் வந்து வறண்ட பூமியைத் தேடி வந்து பயிர் செய்வதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான கட்டுரையைப் படிக்க க்ளிக் செய்க...


7
Silk Smitha Unknown facts

சிலுக்கு ஸ்மிதா... தெரிந்த பெயர்... தெரியாத விஷயங்கள்...

ல்லோருக்கும் ஓரளவு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் சொல்லுகிறோம்! இன்றைய பட உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருப்பவர் சிலுக்கு ஸ்மிதாதான். நாளொன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு படங்களிலும் அதிகபட்சம் நான்கு படங்களிலும் நடிக்கிறார் அல்லது ஆடுகிறார். நாள் கணக்கில் கால்ஷீட் பேசாமல் இத்தனை மணி நேரம் மட்டும்தான் என்று கால்ஷீட் கொடுக்கும் ஒரே நடிகை இவர்தான். கூடிய சீக்கிரம் நிமிஷக் கணக்கில் இயங்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்!இன்றைக்கு தருகிறேன், நாளைக்குத் தருகிறேன் என்று இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள் நடிக்கச் சொல்லி அழைத்தால், முழுத் தொகையையும் எண்ணி வைத்த பிறகே செட்டிற்குள் நுழைகிறார்.

காலையில்‌ ஐந்தரை மணிக்கே எழுந்து வீட்டிலேயே மேக்‌-அப்‌ போட்டுக்‌ கொண்டு புறப்படுகிறார்‌. இரவு படுக்‌கைச்குச்‌ செல்லும்போது இரண்டு அல்லது மூன்று மணி ஆகிவிடுகிறது. பின்னிரண்டிலிருந்து பதினாறு மணி நேரத்திற்குள்‌, (இரண்டு நாட்களில்‌)பாடலுக்கான நடனத்தை ஆடி முடித்துக்‌ கொடுத்து விடுகிறார்‌. நடனக்‌ காட்சிகளுக்கான உடை (கொஞ்சம்தானே!) டிஸைன்‌, கலர் இவற்றை இவரே தேத்ந்தெடுக்கிறார்‌ படப்பிடிப்பிற்குச்‌ சென்று விட்டால்‌ இவருக்கு வரும்‌ போன்கால்களை இவரது தாயார்தான்‌ அட்டெண்ட்‌ செய்வார்‌...

இது ஓர் #AppExclusive படைப்பு! சிலுக்கு ஸ்மிதா குறித்த மேலும் பல தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...