Published:Updated:

திமுக-காங்.கூட்டணியில் உரசல்?-சீமானின் டார்கெட்-சிபிசிஐடி கண்துடைப்பா?- தனுஷ் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 28
Listicle
Vikatan Highlights July 28

திமுக-காங்.கூட்டணியில் உரசல்?-சீமானின் டார்கெட்-சிபிசிஐடி கண்துடைப்பா?- தனுஷ் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
ஸ்டாலின் - அழகிரி

'பாஜக மனதைக் குளிர வைக்கும் காவல்துறை!' - விளாசும் காங்கிரஸ்... திமுக கூட்டணியில் உரசல்?

சென்னை நேரு ஸ்டேடியத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா கோலகலமாக நடந்த நிலையில், இந்த போட்டியை மையமாக வைத்து தமிழக அரசியல் சதுரங்கத்தில் நடந்த காய்நகர்த்தல்களும், தாக்குதல்களும், தடுப்புகளும், வைக்கப்பட்ட செக் மேட்களும் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணியை உரசலில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10 - ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி, இதன் தொடக்கவிழாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதழை திமுக எம்.பி-க்களான டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று வழங்கிய நிலையில், மோடியும் அதனை ஏற்று விழாவுக்கு வர ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியையொட்டி தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டிய பாஜக-வினர், சென்னையில் வைக்கப்பட்ட அந்த விளம்பரங்களில் நேற்று மோடியின் புகைப்படங்களை ஒட்டினர். இதற்கு அரசு தரப்பிலோ அல்லது திமுக தரப்பிலோ எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பாஜக-வினர் ஒட்டிய பிரதமர் படங்களின் மீது மை பூசி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலைமையில், பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. விழா தொடங்கும் நேரத்தில் பிரச்னை வேண்டாம் எனக் கருதிய தமிழக அரசு, உடனடியாக பிரதமரின் படத்துடன் கூடிய விளம்பரங்களை வைத்தது. அத்துடன், விழா தொடங்குவதையொட்டி இன்று நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட அரசு விளம்பரங்களிலும் பிரதமரின் படம் இடம்பெற்று இருந்தது. மேலும், பிரதமர் படங்களின் மீது மை பூசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் கைது செய்யப்பட்டனர். அதே சமயம், மோடியின் புகைப்படங்களை ஒட்டிய பாஜக-வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, அரசின் இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து பதிவிட்ட திமுக ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாஜக-விடம் இந்த அளவுக்கு திமுக-வுக்கு அச்சம் ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவே இப்படி வளைந்துபோவதாக காட்டமாக விமர்சித்தனர்.

இதில் திடீர் திருப்பமாக, தமிழக காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து அரசின் நடவடிக்கையை விமர்சித்திருப்பதுதான் தமிழக அரசியல் சதுரங்கத்தில் பரபரப்பான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே, டெல்லி பாஜக புள்ளிகள் மூலம் திமுக அந்தக் கட்சியுடன் அதிக நெருக்கம் காட்டுவதாகவும், சில அரசியல் கணக்குகளைப் போட்டே திமுக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. காங்கிரஸாரின் இந்தக் குற்றச்சாட்டுகள் திமுக தரப்புக்கும் எட்டாமல் இல்லை. "மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், மாநிலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, திட்டங்களுக்கான ஒப்புதல் போன்ற விஷயங்களில் அவர்களைச் சந்தித்துப் பேசினால்தானே காரியம் நடக்கும்..?" என அவர்கள் தரப்பில் சமாதானங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், "செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் மோடி படத்தை ஒட்டிய விவகாரத்தில் பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா?" என்று கேள்வி எழுப்பி தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை, திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் ஏற்பட்டுள்ள உரசலை வெளிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கான விளம்பரப் பலகைகள் பரவலாக வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது. பாஜகவினர் சிலர் இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஒட்டியிருக்கின்றனர்.

அந்த வீடியோ வைரலானதால் பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த விளம்பரத்தில் தான் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜக-வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"எனக் கூறியுள்ளார்.

அழகிரியின் அறிக்கையில், " காவல்துறையினர் பாஜக-வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது" என்று இடம்பெற்றுள்ள வரி, காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் மீதான நேரடியான விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது.

தற்போதைக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிவடையும் வரை எந்தவிதமான விவாதங்களுக்கும் சர்ச்சைக்கும் இடமளிக்காமல் இருக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நிலைப்பாடாக இருப்பதால், போட்டி முடிவடைந்த பின்னர் திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டால், திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் விழ வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசியல் சதுரங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய Chess Olympiad போட்டி தொடங்கிய வரலாறு, வழங்கப்படும் பரிசுகள் குறித்த ஒரு விரிவான அலசலைப் படிக்க க்ளிக் செய்க...


2
எஸ்.வி. சேகர் - சீமான்

விசிக-வை குறிவைக்கும் நாம் தமிழர்... மீண்டும் கமலாலயம் வந்த எஸ்.வி.சேகர்!

" 'பா.ஜ.க என்னைக் கண்டுகொள்ளவில்லை’ என வெளிப்படையாகப் பேசிவந்த எஸ்.வி.சேகரை தமிழ்நாடு பா.ஜ.க அழைத்துப் பேசியிருக்கிறது. அதோடு ஜூலை 24-ம் தேதி கமலாலயத்தில் நடந்த சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறையில், முன்னாள் சென்சார் உறுப்பினர் என்ற முறையில்... "

எஸ்.வி.சேகர் முதல் விசிக-வை குறிவைக்கும் நாம் தமிழர் வரையிலான கழுகார் தரும் அப்டேட்ஸ்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
சி.பி.சி.ஐ.டி

சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் வழக்குகள்... கண்துடைப்பு நடவடிக்கையா?

குற்றச்செயல்கள், சந்தேகங்கள் எழுப்பும் மர்ம மரணங்கள், கொலை-கொள்ளைகள்... என நிகழ்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், சமீபகாலங்களில் இது போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் காவல்துறையின் செயல்பாடுகளைத் தாண்டி சிபிசிஐடி-க்கு வழக்குகளை மாற்றும் போக்கு அதிகரித்துவருகிறது.

இவ்வாறு சிபிசிஐடி-க்கு வழக்குகளை அதிக அளவில் மாற்றுவது போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்காதா என்றும், இது அரசின் கண்துடைப்பு நடவடிக்கையா என்றும் கிளம்பி உள்ள விமர்சனங்கள் குறித்த விரிவான அலசல்களைப் படிக்க க்ளிக் செய்க...


4
சோனியா காந்தி

ஜனாதிபதி குறித்த காங்.எம்.பி பேச்சு: சோனியா - பாஜக எம்.பி-க்களிடையே வாக்குவாதம்!

ந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, `ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், பாஜக-இடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சோனியா காந்தி வெளியேறும்போது பாஜக எம்.பி-க்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம், மோதல் உள்ளிட்ட விரிவான செய்திகளைப் படிக்க க்ளிக் செய்க..


5
லெஜண்ட் சரவணா

Legend Saravanan: `பாத்திரக் கடை டு பவர்ஃபுல் ஹீரோ': யார் இந்த லெஜண்ட் சரவணா?

டந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் உச்சரித்த பெயர்களில் 'தி லெஜண்ட்' முக்கியமான பெயராக இருக்கும். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் தயாரித்து நடித்திருக்கும் படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இன்று படம் கோலாகலமாக வெளியானது. முன்னணி நட்சத்திரங்களுக்கு அதிகாலை ஷோ போடுவது போல இந்தப் படத்திற்கும் 4 மணி ஷோ திரையிட்டார்கள்.

ப்ரோமோஷன்களில் பல மொழிகள் பேசி மெர்சல் காட்டிய லெஜண்ட் சரவணா யார்? என அலசியதில் கிடைத்த தகவல்கள் இதோ...


6
Exclusive Interview's Dhanush

"ஜனங்கள் என்ன ஏத்துக்க மாட்டாங்கனு நினைச்சேன்!" - தனுஷ் #AppExclusive

னுஷ்.... முழுசாக மீசை முளைக்கவில்லை. இன்னமும் சதைப் பிடிக்காத ஒல்லி உடம்பு. ப்ளஸ் டூவில் ஃபெயிலாகிவிட்டு அப்பாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தலைமறைவாகத் திரிகிற பையன் போலத்தான் இருக்கிறார் டைரக்டர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ். ஆனால், ஏழெட்டு கோடி ரூபாயை இவரை நம்பிக் கொட்டத் துணிந்திருக்கிறார்கள்.

"டைரக்டர்களை நம்பித்தான் இருக்கீங்க போல.. அதையும் தாண்டி உங்க திறமைகளை வளர்த்துக்க ஏதாவது திட்டம் வெச்சிருக்கீங்களா? "

" டைரக்டர்ஸ்தான் சார் எல்லாம். இப்போ ' திருடா திருடி'யில் பெயர் வாசு. அந்த வாசு என்ன பண்ணுவான்னு டைரக்டருக்குத்தான் தெரியும். அதனால அவர் என்ன சொல்றாரோ, அதைப் பண்றது மட்டும்தான் என் வேலை. ஏன்னா, டைரக்டரை மீறின படங்கள் எல்லாமே தோல்வியடைஞ்சிருக்கு. அதைத் தவிர தனிப்பட்ட ஹீரோயிஸம்ல எனக்கு நம்பிக்கை இல்லை! "

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 22.06.2003 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு தனுஷ் அளித்த பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்யவும்...