Published:Updated:

இந்தியாவின் முதுகில் குத்திய இலங்கை!-குரங்கு அம்மை பீதி- சிவகுமார் திருமண வாழ்க்கை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 1
Listicle
Vikatan Highlights August 1

இந்தியாவின் முதுகில் குத்திய இலங்கை!-குரங்கு அம்மை பீதி- சிவகுமார் திருமண வாழ்க்கை|விகடன் ஹைலைட்ஸ்


1
இந்தியா - இலங்கை

உளவுக் கப்பல்: இந்தியாவின் முதுகில் குத்திய இலங்கை!

சீனாவின் உளவுக் கப்பலைத் தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அனுமதித்ததன் மூலம், இலங்கை அரசு வழக்கம்போல் இந்தியாவுக்கு துரோகமிழைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அண்டை நாடு என்ற அடிப்படையிலும், பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டும் இலங்கையிடம் எப்போதுமே நேசம் காட்டுவதோடு, அதற்கு ஏராளமான நிதியுதவிகளை செய்து வருகிறது இந்தியா. மேலும், அந்த நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளது.

ஆனால், இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் இந்தியாவிடம் தேவையான உதவிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு, கடைசியில் இந்தியாவுக்கு எதிரான சீனாவிடம் நட்பு பாராட்டுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இப்போதுகூட கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த இலங்கை மக்களின் போராட்டம் காரணமாக அந்த நாடு கடும் நெருக்கடிக்கு உள்ளானது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு ஓடும் அளவுக்கு கடன் நெருக்கடி அதன் கழுத்தைச் சுற்றி வளைத்தது. மக்கள் எரிபொருளுக்கும், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் திண்டாடினர்.

இத்தகைய சூழலில்தான் இந்தியா உதவிக்கரம் நீட்டியது. கோதுமை, அரிசி, பால் பொருட்கள், உயிர் காக்கும் மருந்து பொருட்கள் என டன் கணக்கில் கப்பல் மூலமாக அனுப்பியது. மேலும் பல்லாயிரம் லிட்டர் பெட்ரோல், டீசலும் அனுப்பி வைக்கப்பட்டன. இவை தவிர, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்தும், மேலும் பல மில்லியன் டாலர் கடன் உதவியையும் வழங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவிடமிருந்து 4.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான உதவிகளைப் பெற்றுள்ளது இலங்கை.

இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை, இந்தியாவிடம் எந்த அளவுக்கு நட்புடன் இருக்க வேண்டும்..? ஆனால், அதன் நட்பு, விசுவாசமெல்லாம் சீனாவிடம்தான் இருக்கிறது என்பதைத்தான் அந்த நாட்டின் உளவுக் கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அனுமதித்தன் மூலம் நிரூபணமாகி விட்டதாக கொந்தளிப்பான குரல்கள் எழுந்துள்ளன.

சீன உளவுக் கப்பலால், ஒட்டு மொத்த இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒருபுறம் என்றாலும், தமிழகத்திற்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
குரங்கு அம்மை

குரங்கு அம்மை நோய் உயிரைப் பறிக்குமா..? கேரள இளைஞர் மரணத்தால் பீதி!

கேரள மாநிலத்தில் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில், இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் குரங்கு அம்மை நோயால் இந்தியாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக பீதி எழுந்துள்ள நிலையில், மரணத்திற்கு இந்த நோய்தான் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பான விரிவான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
திருச்செந்தூர் கோயிலில் மோதல்

திருச்செந்தூர் கோயிலில் போலீஸை அர்ச்சகர் தாக்கியதால் சர்ச்சை!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணம் பெற்றுக்கொண்டு, தரிசனத்துக்காக பக்தர்களை கோயிலுக்குள் அழைத்து செல்ல முயன்ற அர்ச்சகரை போலீஸார் தடுத்தனர்.

இதனால், அர்ச்சகர்கள் கும்பலாகச் சேர்ந்து போலீஸாரை அடித்ததாக சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


4
கிரித்தி துபே, நரேந்திர மோடி

பென்சில் விலை... மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி! 

த்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரித்தி துபே, ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுச் சிறுமி. சவிலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் கஷ்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

"மோடிஜி, பென்சில் விலை ஏறிவிட்டது..." என வருத்தத்தில் பிரதமருக்கு அந்த சிறுமி எழுதிய கடிதம் தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


5
வருமான வரி

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு என்ன பாதிப்பு..?

துவரை 5.5 கோடிக்கும் மேலானோர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் பலர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை. தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பலர் தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும், தாக்கல் செய்யாதவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


6
சந்தோஷ் நாராயணன், அறிவு

'என்ஜாயி எஞ்சாமி' பாடல்... பாடலாசிரியர் அறிவின் வருத்தமும் சந்தோஷ் நாராயணன் பதிலும்!

டந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இப்பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட வருத்தத்தை அறிவு பதிவு செய்திருந்த நிலையில், "வாங்கோ வாங்கோ ஒண்ணாகி" என அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதிலளித்து வெளியிட்டுள்ள பதிவைப் படிக்க க்ளிக் செய்க...


7
Actor Sivakumar's Marriage - 1974 Ananda Vikatan

"என் திருமண விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்!" - சிவகுமார்#AppExclusive

சிவகுமாரின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது?

“வெகு பிரமாதமாக இருக்கிறது. ஒரு குறையும் இல்லை. நான் கற்பனை செய்ததைவிட எல்லாமே நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறது!” என்றார் சிவகுமார்:

“எல்லா இளைஞர்களும் கற்பனை செய்வதைப் போல நானும் திருமணத்திற்கு முன்பு, எனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பேன். என் கற்பனைக்கு உருவம் கொடுத்த லட்சுமி, நான் யோசித்ததற்கும் மேலாகவே இருக்கிறாள்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 17.11.1974 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் தன் திருமண வாழ்வு குறித்து 48 ஆண்டுகளுக்கு முன் சிவகுமார் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...