Published:Updated:

இனி என்னவாகும் அல்-கொய்தா?- DMK - BJP கூட்டணிக்கு எது தடை?தமிழகத்துக்கு தண்டனை-|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 2
Listicle
Vikatan Highlights August 2

இனி என்னவாகும் அல்-கொய்தா?- DMK - BJP கூட்டணிக்கு எது தடை?தமிழகத்துக்கு தண்டனை-|விகடன் ஹைலைட்ஸ்


1
பின்லேடனுடன் அல்-ஜவாஹிரி

அல்-ஜவாஹிரிக்குப் பதில் யார்... இனி என்னவாகும் அல்-கொய்தா இயக்கம்?

சாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல்கொய்தா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று அந்த இயக்கத்தை நடத்தி வந்த அய்மன் அல்-ஜவாஹிரியையும் அமெரிக்கா தற்போது கொன்றுவிட்ட நிலையில், அந்த இயக்கம் இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தில் இதற்கு முன் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தி கொன்று, அவரது உடலைக் கடலில் வீசிவிட்டது. இதனையடுத்து பின்லேடனுக்கு மூளையாக இருந்ததாக கருதப்பட்ட அல்-ஜவாஹிரி, உடனடியாக இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

இந்த நிலையில், தற்போது அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டு விட்ட நிலையில், 2011 ல் நடந்தது போன்று அந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பை உடனடியாக ஏற்கும் அளவுக்கான தலைவர்கள் யாரும் இல்லாத அளவுக்கு, அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளையெல்லாம் அமெரிக்கா வரிசையாக தீர்த்துக்கட்டிவிட்டது. தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவரையும் விட்டு வைப்பதில்லை என்பதில் தீவிரமாக இருக்கும் அமெரிக்காவின் கண்காணிப்பிலிருந்து, அல்-கொய்தா இயக்கம் தப்பி பிழைத்து இனி மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டதாகவே பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வலுவான தலைவர் இல்லாதது மற்றும் அல்-கொய்தா-வுக்கு மாற்றாக உருவெடுத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் வளர்ச்சி போன்றவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், தங்கள் இயக்கம் தளர்ந்துவிடவில்லை என்றும், அல்-ஜவாஹிரியின் இடத்தை எகிப்தைச் சேர்ந்த சையிஃப் அல் - அதேல் என்ற நபர் கைப்பற்றுவார் என்று அந்த இயக்கத்தின் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அல்-கொய்தா இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 2001 ஆம் ஆண்டிலிருந்து அந்த இயக்கத்தில் இருப்பவரும், அமெரிக்க உளவு அமைப்பால் மிகத் தீவிரமாகத் தேடப்பட்டு வருபவர்தான் சையிஃப்.

1960-ல் பிறந்த இவர், சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் நெட் ஒர்க்கில் தொடர்புடைய மிகுந்த அனுபவம் வாய்ந்த தீவிரவாதி என்றும், இவரது உண்மையான பெயர் முகமத் ஷாலா அல் -தின் ஜாய்தான் என்றும், புனைப்பெயராக சையிஃப் அல் - அதேல் ( 'நீதியின் வாள்' என அர்த்தம்) என்று வைத்துக்கொண்டதாகவும் அந்த இயக்கத்தின் பின்னணியைத் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இவர் சில காலம் எகிப்து ராணுவத்திலும் பணியாற்றி உள்ளார்.

1988 இல் எகிப்தை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, 1984 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-ஜவாஹிரி ஆகியோரால் நிறுவப்பட்ட மக்தாப் அல்-கிதாமத் என்ற அமைப்பில் சேர்ந்தார். அப்போதைய சோவியத் ரஷ்யா படையுடன் அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்ட முஜாஹிதீன் அமைப்பினருக்கு போர் பயிற்சி அளித்தவர். இந்த இயக்கம்தான் அல்-கொய்தாவின் முன்னோடியாக இருந்தது. ஏனெனில் அதன் நெட்வொர்க்தான் 1990 களில் பயங்கரவாதக் குழுவின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், பழைய நிலைமை இப்போது இல்லை. இன்று, அந்த அமைப்பு பிளவுபட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வரை உலகம் முழுவதும் கிளைகள் மற்றும் துணை அமைப்புகளைக் கொண்டிருந்த போதிலும், அந்தக் குழுக்கள் உள்ளூர் மோதல்களில் கவனம் செலுத்துமா அல்லது மேலும் உலகளாவிய லட்சியங்களுக்காக ஒன்றிணையுமா என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

" அல்-கொய்தா இப்போது தலைமை பொறுப்புக்கான கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அல் - கொய்தாவின் மூத்த தலைவர் சையிஃப் அல் - அதேல் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரிசையில் இருக்கும்போதிலும், அவர் தற்போது ஈரானில் உள்ளார். இது கடந்த காலத்தில் அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியதால், அவரது தலைமையை மற்றவர்கள் ஏற்பது சந்தேகம்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 2005 -ல் லண்டனில் 52 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, சமீபத்திய ஆண்டுகளில் அல்-கொய்தா எந்த பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தவில்லை. 2019 டிசம்பரில் புளோரிடாவில் உள்ள அமெரிக்கத் தளத்தில் மூன்று அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டது, அதே ஆண்டு லண்டன் பாலம் அருகே, அல் கொய்தாவின் முன்னாள் தீவிரவாதி ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவத்தைத் தவிர, அந்த இயக்கத்தின் தாக்குதல்கள் பெரிய அளவில் இல்லை.

அல்-ஜவாஹிரி உயிருடன் இருந்தபோதே இந்த நிலை என்றால், இனி அந்த இயக்கத்துக்கு அஸ்தமனம்தான்... அது மனிதகுலத்துக்கான நல்ல விஷயம்" என்றும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வாளர்கள்.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்காவால் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்த பரபரப்பான விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
அண்ணாமலை

தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு தடையாக இருப்பது எது? - அண்ணாமலை பேட்டி

"யாருடனும் கூட்டணிவைத்து வளர வேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க-வுக்குக் கிடையாது. நாங்களாக தனித்தன்மையுடன் வளர்ந்து வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது'' என சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் திமுக - பாஜக கூட்டணிக்குத் தடையாக இருப்பது எது என்பது குறித்தும் தெரிவித்த அண்ணாமலையின் பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
நாடாளுமன்றம்

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு இப்படி ஒரு தண்டனையா..?

ற்போது 543-ஆக இருக்கும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1,000-ஆக அதிகரிக்க பா.ஜ.க அரசு திட்டம் வகுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஆண்டு கூறினர். அதையடுத்து, இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதமாக எழுந்தது. தற்போது, மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதால், தென்னிந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், இது ஒருவகையில் தமிழகத்துக்கான தண்டனையாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


4
சசிகலா - பண்ருட்டி ராமச்சந்திரன்

'ராஜதந்திரி' பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த சசிகலா... அதிமுக-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

.தி.மு.க-வை மீட்கப்போவதாக, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் சசிகலா. அதன் ஒரு பகுதியாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், கட்சியைவிட்டு விலகி நிற்கும் மூத்த நிர்வாகிகள், அதிருப்தித் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.

அப்படித்தான் பண்ருட்டி ராமச்சந்திரனைச் சந்தித்துள்ளார் சசிகலா. அவரது இந்த சந்திப்பு அதிமுக-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த விரிவான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


5
அன்புச்செழியன், தாணு

மீண்டும் ஐ.டி ரெய்டில் சிக்கிய அன்புச்செழியன்..! -கலைப்புலி தாணு வீடுகளிலும் சோதனை...

ருமான வரித்துறை அதிகாரிகள் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் மதுரை காமராஜர் நகரில் இருக்கும் வீடு, அவரின் திரையரங்கம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.

ஐ.டி ரெய்டு வளையத்தில் அன்புச்செழியன் மட்டுமல்லாது தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்களும் சிக்கினர். அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை தொடர்பான முழு விவரங்களைப் படிக்க க்ளிக் செய்க...


6
இங்கிலாந்து அணி | UEFA ( Alessandra Tarantino | AP )

UEFA Euro Cup Football: இங்கிலாந்து ஆண்கள் அணியால் செய்ய முடியாததைச் சாதித்த பெண்கள் அணி!

‘It's coming home…’ இங்கிலாந்துக் கால்பந்து ரசிகர்களின் 56 ஆண்டுக்கால ஏக்கத்தை மெய்ப்பித்திருக்கின்றது அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணி. அதுவும் 8 முறை ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தி வாகை சூடியிருக்கின்றனர்.

இங்கிலாந்து ஆண்கள் அணியால் செய்ய முடியாததைச் சாதித்த பெண்கள் அணி தொடர்பான விரிவான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


7
சுருதி பெரியசாமி

"எனக்கான அங்கீகாரம் மாநிற பெண்களுக்கான வெளிச்சம்..!" - 'பிக் பாஸ்' பிரபலம் சுருதி பெரியசாமி

"கலரா இல்லையேங்கிற ஏக்கம் சின்ன வயசுல ரொம்ப இருந்திருக்கு. ஆனா, அப்போ எதை என்னோட மைனஸ்னு நினைச்சேனோ, அதுதான் இப்போ ப்ளஸ்ஸா மாறியிருக்கு. எத்தனையோ அவமானங்களைக் கடந்து எனக்குக் கிடைச்ச இந்த அங்கீகாரம், மாநிற பொண்ணுங்களுக்கான வெளிச்சமா இருக்கும்'' - பெருமையாகப் பேசுகிறார் சுருதி பெரியசாமி. ‘பிக் பாஸ்’ பிரபலம், மாடல், தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை என பல அடையாளங்களைக் கொண்டவர்.

'பிக் பாஸ்' பிரபலம் சுருதி பெரியசாமியின் வெற்றிப் பயணத்தை விரிவாக வாசிக்க க்ளிக் செய்யவும்...