Published:Updated:

சீனாவுக்கு இனி இந்தியாவின் பதிலடி தைவான்? - சர்ச்சையில் சபரீசன்- வாணிஸ்ரீ பதில்கள்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 3
Listicle
Vikatan Highlights August 3

சீனாவுக்கு இனி இந்தியாவின் பதிலடி தைவான்? - சர்ச்சையில் சபரீசன்- வாணிஸ்ரீ பதில்கள்|விகடன் ஹைலைட்ஸ்


1
இந்தியா - சீனா ( Aleksandar Mijatovic )

சீனாவுக்குப் பதிலடி: அமெரிக்க பாணியில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக மாறுமா தைவான்?

மெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசிவின் தைவான் வருகைக்கு எதிராக சீனா கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க, அமெரிக்க பாணியில் தைவான் துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகையை சீனா ஏன் எதிர்க்கிறது..?

* தைவானை தனது நாட்டிலிருந்து பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா,

* தைவான் தங்களது ஆளுமைக்கு உள்பட்ட பிரதேசம் என்றும் கூறி வருகிறது.

ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலில் தைவான் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும், ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதியுமான நான்சி பெலோசி தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானையும் சேர்த்துக் கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது சீனா.

ஆனால், சீனாவின் எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றார்.

அமெரிக்க விமானப் படையின் 5 போர் விமானங்கள் நான்சியின் விமானத்துக்கு பாதுகாப்பாக சென்றன.

* தைவான் போர் விமானங்களும் அவருக்கு பாதுகாப்பு அளித்த நிலையில், சீனாவின் போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் போர்ப்பயிற்சியைத் தொடங்கிய சீனா, தைவான் மீது பல பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

இந்த நிலையில், நான்சியின் வருகையையொட்டி சீனா வெளிப்படுத்திய எதிர்ப்புகள் அளவுக்கு மீறிய செயல் என்றும், இது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல் என்றும் பல்வேறு நாடுகளின் அயலுறவுத் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலையில், கட்டுப்பாட்டை மீறி எந்த நிகழ்வும் நடந்துவிடவில்லை.

* தைவான் அதிகாரபூர்வமாக தன்னை சுதந்திர நாடாக அறிவித்தாலோ அல்லது அப்படி ஒரு வியூகத்தை நோக்கி அமெரிக்கா நகர்ந்தாலோ மட்டுமே சீனா தாக்குதல் நிலையை மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாகும்.

*ஆனால், தைவான் அரசாங்கம், தைவான் ஜலசந்தியில் தற்போதைய நிலையைத் தொடர விரும்புவதாக பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளது.

எனவே, நான்சி பெலோசிவின் தைவான் வருகையை ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக சீனா கருதத் தேவையில்லை.

1997 ல் கூட அமெரிக்கா சபாநாயகர் நியூட் கிங்ரிச்சும் தைவானுக்கு விஜயம் செய்துள்ளதைப் பார்க்கும்போது, தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகளின் வருகைகள் வழக்கமான ஒன்றாகவே இருந்துள்ளன.

ஐரோப்பிய யூனியன் துணைத் தலைவர் நிக்கோலா பியரும் இந்த ஆண்டு ஜூலை மாதம் தைவான் சென்றிருந்தார். எனவே நான்சியின் தற்போதைய வருகையையும் வழக்கமான ஒன்றாகத்தான் சீனா கருத வேண்டுமே தவிர, இந்த நிகழ்வைப் பயன்படுத்தி தைவானின் தற்போதைய நிலையை மாற்றி, தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கக் கூடாது என்றும் பல்வேறு நாடுகள் கருதுகின்றன.

இந்தியாவுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு தைவான்

இந்த நிலையில், தைவான் விஷயத்தைத் தனது கெளரவ பிரச்னையாக சீனா கருதுவது, இன்னொரு கண்ணோட்டத்தில் அதன் பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்திய எல்லையில் அடிக்கடி அத்துமீறும் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க, அமெரிக்க பாணியில் இந்தியாவும் தனது உயரதிகாரியை தைவானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.

"சீனா இந்தியாவிடம் வாலாட்டினால் அதற்கான பதிலடியாக தைவான் துருப்புச் சீட்டை இந்தியா கையிலெடுத்து, தைவானுடனான எங்கள் தொடர்பை மேம்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை சீனாவுக்கு உணர்த்த வேண்டும். அந்த துருப்புச் சீட்டை எடுத்து விளையாடுவதற்கு பொருத்தமான நேரத்தை இந்திய வெளியுறவுத் துறை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள், சசி தரூரின் யோசனை சாத்தியமான ஒன்றுதான் எனக் கருதுவதால், வரும் நாட்களில் 'தைவான்' இந்தியாவின் துருப்புச் சீட்டாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..!

இந்த நிலையில், தைவான் பிரச்னையை முன்வைத்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான நேரு, வாஜ்பாயோடு மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
குரங்கு அம்மை ( மாதிரி படம்)

குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

ந்தியாவில் குரங்கு அம்மைத் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் செய்ய வேண்டியவை என்னென்ன, செய்யக் கூடாதவை என்னென்ன போன்ற தகவல்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் குரங்கு அம்மையால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்து படிக்கவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
திருச்செந்தூர் - சபரீசன் -

திருச்செந்தூர்: சபரீசனுக்காக கெடுபிடிகளுடன் சபரீசனுக்காக நடந்த சிறப்பு யாகத்தால் சர்ச்சை...

நேற்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தன் நண்பரான தொழிலதிபர் வெங்கட்டுடன் வந்தார். மூலவர், உற்சவர் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலின் வெளிப் பிரகாரத்திலுள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதியில் 10 நிமிடங்கள் கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.

கோயில் வளாகத்தில் வள்ளிக்குகைக்குச் செல்லும் நடைபாதையில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டு, வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், சபரீசனின் வருகையையொட்டி காலை 6 மணி முதல் வள்ளிக்குகைக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக வெடித்த சர்ச்சை குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


4
ஆவின் பால்

ஆவின் மீதான குற்றச்சாட்டுகள்: பால் முகவர்கள் சொல்வதென்ன?

க்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள துறைகளில் முக்கியமானது பால்வளத்துறை. பல்வேறு தனியார் பால் நிறுனங்கள் இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்கு இருக்கும் மதிப்பு இன்னும் குறையவில்லை. எனினும், இந்தத்துறையில் நடக்கும் நிகழ்வுகள் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் வித்தியாசமாகவே இருக்கின்றன.

இதற்கு முன்பாக ஆவினில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், விவகாரங்கள் குறித்துப் பல கட்டுரைகள் ஜூ.வி-யில் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சூழலில், சமீபத்தில் ஆவின் பால் எடை குறைவாக இருப்பதாக ஒரு நாளிதழிலும், சமூக வலைதளங்களிலும் படத்துடன் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் மீது பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அது குறித்து பால் முகவர்கள் தெரிவித்த கருத்துகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்ஸுக்கு சாதகமாகச் செல்கிறதா அதிமுக பொதுக்குழு வழக்கு?!

திமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தங்களது தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் நிலையில், `தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும், பொதுக்குழு நடத்தியதே செல்லாது என உத்தரவு வரும்' என ஓ.பி.எஸ் தரப்பினர் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இது தொடர்பான முழுமையான விவரங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
ரெட்டை வால் குருவி

ரெட்டை வால் குருவி: 'ராஜராஜ சோழன் நான்' - ராகதேவனும் பாலு மகேந்திராவும் கொடுத்த மாஸ்டர் பீஸ்!

‘ரொமான்டிக் காமெடி’ என்கிற வகையறாவில் ஹாலிவுட்டில் ஏராளமான, விதம்விதமான திரைப்படங்கள் உள்ளன. தமிழிலும் இந்த வகைமை இருந்தாலும் அவை வழக்கமான தமிழ் சினிமாக்களின் கலவையாகவே இருக்கும். அதற்குள் ஆக்ஷன், சென்டிமென்ட் என்று பல விஷயங்கள் தவிர்க்க முடியாமல் இருக்கும். இவ்வாறு இன்றி அயல் சினிமா பாணியில் நூல் பிடித்தாற் போல் கோர்வையாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்ட ஒரு 'Rom-Com’-தான் ‘ரெட்டை வால் குருவி'.

நடுத்தரவர்க்க மக்களின் வீடு கட்டும் கனவை அதற்குண்டான வலிகளுடன் பதிவு செய்யவும் பாலு மகேந்திராவிற்குத் தெரியும். அதைப் போலவே மனித உறவுகளுக்கு இடையே, குறிப்பாக ஆண் – பெண் உறவுச் சிக்கலில் நிகழும் மனரீதியான சிடுக்குகளை வைத்தும் திரைப்படம் இயக்கத் தெரியும். அதே சமயத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவைத் திரைப்படங்களையும் இவருக்கு உருவாக்கத் தெரியும். இந்த வரிசையில் 'ரெட்டை வால் குருவி' மற்றும் 'சதி லீலாவதி' ஆகிய இரண்டு படங்களும் முக்கியமான நகைச்சுவைப் படங்கள்...

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் இடம்பெற்றுள்ள ‘ரெட்டை வால் குருவி’ குறித்த சுவாரஸ்யமான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
Actor Vanisri's Exclusive Interview

'அப்போது எனக்கு இந்தப் பெயரே பிடிக்கவே இல்லை; ஆனால்..?!' - வாணிஶ்ரீ பதில்கள் #AppExclusive

"ஸ்விம்மிங் ஸூட், ஜீன்ஸை திரைப்படங்களில் நுழைய விட்டதே தவறு என்று நினைக்கிறேன்.! "

தீபாவளிக்கு என்ன புடவை வாங்கினீர்கள்? என்ன நிறம்?

வெள்ளையில் ஜரிகை போட்ட பட்டுப் புடவை.

உங்களுக்கு ரேஸுக்குப் போகும் பழக்கம் உண்டா?

ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். ரேஸ் ஆட அல்ல; 'ஆயிரம் பொய்' வெளிப்புறக் காட்சி ஒன்றை அங்கு படமாக்கினார்கள். அதற்காகப் போனேன்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 1969 ல் விகடனுக்குப் பேட்டி அளித்த வாணிஸ்ரீ -யின் சுவாரஸ்யப் பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...