Published:Updated:

'கைது ஸ்கெட்ச்': ராகுலின் ஆவேச பின்னணி-எடப்பாடிக்கு சிக்கல்- மோசமாகும் குரங்கு அம்மை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 5
Listicle
Vikatan Highlights August 5

'கைது ஸ்கெட்ச்': ராகுலின் ஆவேச பின்னணி-எடப்பாடிக்கு சிக்கல்- மோசமாகும் குரங்கு அம்மை|விகடன் ஹைலைட்ஸ்


1
ராகுல் காந்தி

மத்திய அரசு போட்ட 'கைது ஸ்கெட்ச்'... ராகுல் காந்தி ஆவேசத்தின் பின்னணி!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி, டெல்லியில் போராட்டம் என மத்திய பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் ஆவேசம் கடந்த சில நாட்களாக மிகத் தீவிரமாக காணப்படுகிறது.

ஆக்ரோஷ காங்கிரஸ்...

விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உள்பட பல்வேறு மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்,

* டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, போலீஸாரின் தடுப்புக் கம்பியைத் தாண்டிக் குதித்து பிரியங்கா காந்தி வெளிப்படுத்திய ஆக்ரோஷம்,

* மோடி தலைமையிலான அரசை ஹிட்லர் அரசுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி

போன்ற எல்லாவற்றுக்கும் வேறு ஒரு பின்னணியும் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அமலாக்கத் துறையின் அதிரடி

இந்த நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். சோதனை நிறைவு பெற்ற அடுத்த நாளான புதன்கிழமையன்று,

* நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகமான 'யங் இந்தியா' அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

அதுமட்டுமல்லாது

* சோனியா காந்தி வீட்டின் முன்பாகவும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அத்துடன்

* காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

* மேலும், கட்சி தலைவர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டதோடு, அங்கும் தடுப்புகள் அமைத்து வழிகள் அடைக்கப்பட்டன.

'கைதுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச்'

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையெல்லாம் சோனியா மற்றும் ராகுல் காந்தியைக் கைது செய்ய திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், ஆனால், அப்படி அவர்களைக் கைது செய்தால், அது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே, கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு தந்த துணிச்சல்

இதனிடையே சோனியாவை கைது செய்யக்கூடிய அளவுக்கு மத்திய அரசு துணிந்ததற்கு, பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை உறுதிசெய்து, உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு தான் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

* "பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்யவும், கைது செய்யவும், பறிமுதல் செய்ய வும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.

* கைது நடவடிக்கை யின்போது முறைகேடு புகார்கள் தொடர்பாக தகவல்களை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது மிக ஆபத்தானது என்று அவர்கள் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே எதிர்க்கட்சிகளை அடக்கவும், பழிவாங்கவும் அனைத்து ஏஜென்சிகளையும் ஏவிவிடும் மத்திய அரசுக்கு, இந்தத் தீர்ப்பு மேலும் வலுச்சேர்க்கும் அளவுக்கு அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

அணி திரண்ட 16 எதிர்க்கட்சிகள்

இந்த நிலையில், 2002-ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (பிஎம்எல்ஏ), நிதிச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு செய்த திருத்தங்களை நிலை நிறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நீண்ட கால தாக்கங்கள் குறித்த தங்களின் அச்சத்தை தெரிவித்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கேரள காங்கிரஸ், ராஷ்ட்டிரிய லோக்தளம், சிவசேனா, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மதிமுக, ஆம் ஆத்மி, ஐயூஎம்எல், ஆர்எஸ்பி ஆகிய 16 கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்டு கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளன.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விரைவில் முறையிடப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில்தான், நாடு சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதாகவும், ஜனநாயகம் செத்துவிட்டதாகவும் ராகுல் காந்தி காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில் இன்று அளித்த பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க...


2
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்திய நீதிமன்ற உத்தரவு..!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு, முழுமையாக இன்னும் ஒரு மாதம்கூட ஆகாதநிலையில், சட்டரீதியான பல நெருக்கடிகளை அவர் சந்தித்துவருகிறார்.

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எடப்பாடிக்கு மேலோட்டமாக சாதகமாக பார்க்கப்பட்டாலும், அதில் உள்ள சிக்கல்கள் என்ன, வழக்கின் விவரம் உள்ளிட்டவற்றை விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
குரங்கு அம்மை

குரங்கு அம்மை பரவல்: நிலைமை மேலும் மோசமாகிறதா..?

லகம் முழுவதும் குரங்கு அம்மையின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் 9 பேருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி இத்தொற்றின் விளைவாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், குரங்கு அம்மையால் ஆண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதொரு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ)வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
வீட்டுக்கடன் ( vikatan )

மீண்டும் உயரும் வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி... என்ன காரணம்?

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அக்டோபர்-டிசம்பர் காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.4 சதவிகிதமாகவும், ஜனவரி-மார்ச் காலத்தில் இது 5.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பால் மீண்டும் வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
கொலைசெய்யப்பட்டவர்கள்

கச்சநத்தம் கொலை வழக்கு: 27 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!

மிழகத்தையே அதிர வைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை என பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மதுரையில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விவரம், இதில் தொடர்புடைய 27 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உள்ளிட்டவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
வட்டம் - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்: 'வட்டம்'

சிபி சத்யராஜுக்கு அலட்டல், ஆர்ப்பாட்ட மில்லாத சிம்பிளான கதாபாத்திரம். கடத்தல் காட்சிகளில்கூட பதற்றம் தேவைப்பட்டிராத ரிலாக்ஸான ரோலை எளிதாகக் கையாண்டிருக்கிறார். ஆண்ட்ரியாவின் கதாபாத்திரமும் நடிப்பும் அழுத்தம்.

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...