Published:Updated:

இனி தனியார் மின்சாரம்தான்!-உடைகிறது பாஜக கூட்டணி-கதறும் ஹரி நாடார்-MGR பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan highlights August 8
Listicle
Vikatan highlights August 8

இனி தனியார் மின்சாரம்தான்!-உடைகிறது பாஜக கூட்டணி-கதறும் ஹரி நாடார்-MGR பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
தனியாரிடம் போகும் மின்சாரம்

எகிறப்போகும் மின்சாரக் கட்டணம்... மொபைல் சேவை பாணியில் தனியாரிடம் போகும் மின்சாரம்!

திர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்.

மின்சாரச் சட்டம் 2003 ல் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்ட வரைவைத் தயாரித்த மத்திய அரசு, அது குறித்த மக்களின் கருத்தைக் கேட்பதற்காக கடந்த 2020 ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி அதனை மத்திய அரசு வெளியிட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்...

* மின்சார துறை தனியாரிடம் சென்றுவிடும் என்றும்,

* காலபோக்கில் அவர்கள் நிர்ணயித்ததுதான் கட்டணம் என்ற நிலை உருவாகும் என்றும்,

* இதனால் ஏழை மற்றும் சாமான்ய மக்களோடு, விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அப்போதே எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

எதிர்ப்புக்கிடையே தாக்கலான மசோதா

இந்த நிலையில், வேளாண் மசோதாவுக்கு எழுந்த எதிர்ப்பு, கொரோனா பேரிடரால் ஏற்பட்ட சூழ்நிலை போன்றவற்றைத் தொடர்ந்து இந்த மசோதா தாக்கலாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் இருந்தது.

அதன்படி, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதாவைத் தாக்கல் செய்த மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படும்?

இந்த மசோதாவினால்,

* மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தை கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் போன்ற மாநிலங்களின் கட்டமைப்புகள் தனியாரிடம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால்,

* தமிழகம் போன்ற மாநிலங்களில் இலவச மின்சாரத்தை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

இனி எல்லோருக்கும் ஒரே கட்டணம்தான்...

தமிழகத்தை பொறுத்தவரை வீட்டு உபயோகத்துக்கான மின்சார கட்டணத்தில் பயன்பாட்டைப் பொறுத்து வெவ்வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அதேபோன்று வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை. அதே போன்று, விசைத்தறி தொழிலாளர்களுக்கு 500 யூனிட்கள், குடிசை தொழிலுக்கு 100 யூனிட்கள் வரை கட்டணம் இல்லை. இதை ஈடு செய்ய வர்த்தக பயன்பாட்டுக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், தனியாரிடம் மின்சாரம் செல்லும்போது, அனைவருக்கும் ஒரே விதமான கட்டணமே வசூலிக்கப்படும்.

இலவச மின்சாரத்துக்கும் முற்றுப்புள்ளி?

* மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை இந்த மசோதா கட்டுப்படுத்தாது என மத்திய அரசு சொன்னாலும், அதுவும் காலபோக்கில் தனியாரின் அதிக கட்டணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அதிக நிதிச் சுமை எனக் காரணம் காட்டி மாநில அரசுகள் அதை கைவிட நேரலாம்.

* மானியத்தைக் கணக்கில் கொள்ளாமல் மின்கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம் எனும்போது, சமையல் எரிவாயுக்கான மானியம் எப்படி இப்போது ஏறக்குறைய காணமாலே போய்விட்டதோ, அதேபோன்று மின்சாரத்துக்கான மானியமும் காணாமல் போகலாம்.

* அதாவது வீடுகளுக்கான தற்போதைய 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான கட்டணத்தை முதலில் கட்டிவிட்டு, பின்னர் மானியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சுருக்கமாக சொன்னால் இந்த மசோதாவினால்,

* தொலைபேசி, மொபைல் மற்றும் இணைய சேவைகளில் தற்போது தனியார் நிறுவனங்கள் போட்டிப்போடுவது போல மின்சார துறையிலும் போட்டிப்போடும்.

* வாடிக்கையாளரே தனது விருப்பம்போல் நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம். இதனால், வாடிக்கையாளரை ஈர்க்க விலைகுறைப்பு போன்ற கவர்ச்சியான அம்சங்களை நிறுவனங்கள் அமல்படுத்தும்.

* ஆனால், காலப்போக்கில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 'சிண்டிகேட்' அமைத்துக் கொண்டு மொபைல் போன் சேவையில் செய்தது போன்றே, மின்சார கட்டணத்தையும் உயர்த்தி விடுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

தனியார் ஆதிக்கம்

சுருக்கமாக சொன்னால், இந்தச் சட்டத்திருத்தம் அமலானால், ஒரு மாநிலத்தின் மின் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு பங்கிட்டு தர அந்த மாநிலத்தின் ஒப்புதல் தேவையில்லை. மின்கட்டணங்களை இனி தேசிய ஆணையமே முடிவு செய்யும். மின் விநியோகம் தனியாரிடம் தரப்படும்.

'மின் பிரச்னை மேலும் மோசமடையும்...'

இந்த நிலையில், இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

* "இம் மசோதா மிக ஆபத்தானது. இதனால் ஒரு சில தனியார் மின் நிறுவனங்கள்தான் பயனடையும். இதன் மூலம், நாட்டில் மின் பிரச்னை மேம்படுவதற்கு பதிலாக, மேலும் மோசம் அடையும். மக்களின் துன்பம் அதிகரிக்கும்.

எனவே இதை அவசர அவசரமாக கொண்டு வர வேண்டாம்" என்று மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

'பறிபோகும் மாநில உரிமை'

அதேபோன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,

* " இது மாநிலங்களின் உரிமைகள் மீதான மற்றொரு தாக்குதல். மாநிலங்களை மத்திய அரசு பொம்மைகளாகக் கருதக் கூடாது" என்று கூறியுள்ளார்.

ஆனால், மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால், மின் கட்டண உயர்வையும் சமாளிக்க பொதுமக்கள் தயாராக வேண்டியதுதான்!

அதே சமயம், இந்த மசோதாவை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எழும் எதிர்ப்புகள் பாஜக-வுக்கு கடும் தலைவலியாக மாறலாம் என்றால்,

பாஜக கூட்டணியில் மோதல்

இன்னொருபுறம் பாஜக கூட்டணியிலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேறலாம் என்ற நிலை, அந்தக் கட்சிக்கு இன்னொரு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. வட மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ள இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
உச்ச நீதிமன்றம்

'உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது!' - கபில் சிபலின் அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் சமீபத்திய தீர்ப்புகள்மீதான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
ஹரி நாடார்

"நிர்வாண டார்ச்சர்; மனைவியுடன் மோதல்... மலேசிய பெண்ணுடன் உறவு"- 64 பக்க கடிதத்தில் கதறிய ஹரி நாடார்

பெங்களூரு சிறையிலிருக்கும் ஹரி நாடார், சிறைக் கண்காணிப்பாளர் வழியாக அவர் மனைவி ஷாலினிக்கு 64 பக்கங்கள்கொண்ட கடிதத்தைக் கைப்பட எழுதியிருக்கிறார். அதில், சிறையில் தனக்கு நேர்ந்த நிர்வாண டார்ச்சர், மலேசிய பெண்ணுடனான உறவு, ஷாலினியை திருமணம் செய்துகொண்டது என அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹரி நாடாரின் 64 பக்க கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள தகவலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் சிக்கலின்றி வேகமாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் பாதி உண்மையான தகவல்களைக் கொடுத்து இன்ஷூ ரன்ஸ் கம்பெனியிடம் க்ளெய்ம் கோரும் சமயத்தில், க்ளெய்ம் கிடைப்பது கால தாமதம் ஆகலாம் அல்லது க்ளெய்ம் முற்றிலும் மறுக்கப்படலாம்.

இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் க்ளெய்மை சிக்க லின்றி வேகமாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
குருதி ஆட்டம்

சினிமா விமர்சனம்: 'குருதி ஆட்டம்'

ஒரு ராவான கேங்ஸ்டர் துரோகக் கதையை பேப்பரில் ஸ்கெட்ச் போட்டுவிட்டு, திரையில் அதற்கு உயிர்கொடுக்கும்போது கமெர்ஷியல் ரூட்டே பிரதானம் என்று தடம் மாறியிருக்கிறது திரைக்கதை...

'குருதி ஆட்டம்' விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
MGR talks about Sivaji Ganesan

"நானும் சிவாஜியும் சேர்ந்தால் இதுதான் நடக்கும்!" - எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்!

பிரபலமானவர்களைப் பற்றிப் பரவலாகவும் பலவிதமாகவும் அபிப்பிராயங்கள் ஏற்படுவது சகஜம். அவற்றைப் பற்றி சம்பந்தப்பட்ட நபரிடமே நேருக்கு நேர் கேட்டு, பதில் பெறும்போது சுவையும் தெளிவும் ஏற்படாதோ?

இதோ, எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 1972-ல் நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்துகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...