Published:Updated:

நிதிஷ் பிரதமர் வேட்பாளரா? ராஜினாமா பின்னணி-இதுவா திராவிட மாடல் அரசு?ரஜினி திருமண கதை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 9
Listicle
Vikatan Highlights August 9

நிதிஷ் பிரதமர் வேட்பாளரா? ராஜினாமா பின்னணி-இதுவா திராவிட மாடல் அரசு?ரஜினி திருமண கதை|விகடன் ஹைலைட்ஸ்


1
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

பிரதமர் வேட்பாளரா நிதிஷ் குமார்? மோடி - அமித் ஷாவுக்கு 'ஷாக்' கொடுத்த ராஜினாமா பின்னணி...

காராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட 'ஆபரேஷன் லோட்டஸ்' வெற்றிகரமாக அமைந்து, முழு அமைச்சரவையே இன்றுதான் பதவியேற்றது.

இந்த நிலையில், அதே மகாராஷ்டிரா பாணி அரசியலை கையிலெடுத்து பாஜக-வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் பீகார் முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ள நிதிஷ்குமார்.

தொடக்கத்திலிருந்தே முட்டல் மோதல்...

பீகாரில் 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க-வுக்கு 77 இடங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, நிதிஷ் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கான அத்தனை அரசியல் சூட்சுமங்களையும் பாஜக அரங்கேற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், குறைவான இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு விட்டுக்கொடுத்தது பாஜக.

நிதிஷ் குமாரின் அச்சம்

ஆனாலும், இரு கட்சிகளுக்கும் இடையேயேயான மோதல் நீடித்து வந்தது.

* மற்ற மாநிலங்களில் நடந்தது போன்று தனது கட்சியையும் பாஜக காலி செய்து விடும் என்ற அச்சத்துடனேயே நாட்களை நகர்த்தி வந்த நிதிஷ் குமாருக்கு, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

* இதனாலேயே இனியும் பாஜக கூட்டணியில் நீடிப்பது தனது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.

யோசிக்க வைத்த லாலு கட்சி

மேலும்,

* 2020 தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 இடங்களில் வெற்றி பெற்றது.

* தேர்தலின்போது லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பு, அவருக்கான எதிர்கால செல்வாக்கை உணர்த்துவதாக இருந்தது.

* அந்த தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக உடன் அதிருப்தியிலிருந்த நிதிஷ் கட்சி, அக்கூட்டணியிலிருந்து வெளியேறி லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும் என்றும் அப்போது அரசியல் வல்லுநர்கள் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.

அதிகாரத்தை இழந்த பாஜக

இந்த நிலைமையில்தான், அப்போது செய்யத் தவறியதை தற்போது செயல்படுத்த முடிவு செய்தே, நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியிலிருந்து வெளியேறியதாக தெரிகிறது.

* காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நிதிஷுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், பீகாரில் பாஜகவுக்கு ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

'ஆபரேஷன் லோட்டஸ்' -க்கான தோல்வியா?

இது ஒரு வகையில்,

* தற்போதைய பாஜக-வின் முகங்களாக அறியப்படும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஏற்பட்ட பின்னடைவாகவும்,

* 'ஆபரேஷன் லோட்டஸ்' நடவடிக்கையின் தோல்வியாகவும் கருதப்படுகிறது.

'வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக பாஜக-வை ஆட்சியில் அமர்த்திவிட்டோம். இனி தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக-வை ஆட்சியில் அமர்த்துவதற்கான 'ஆபரேஷன் லோட்டஸ்' ஐ தீவிரமாக செயல்படுத்த வேண்டும்' எனக் கடந்த ஜூலை மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், பீகாரில் தற்போது நடந்துள்ள அரசியல் மாற்றம், அதன் சாத்தியங்களைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இனி மாநில கட்சிகள் சுதாரிக்கும்

இனி,

* செல்வாக்குள்ள மாநில கட்சிகள் பாஜக உடன் வருங்காலத்தில் கூட்டணி வைக்க யோசிக்கக்கூடும்.

* அப்படியான ஒரு சூழலில் கூட்டணிக்கு மறுக்கும் கட்சிகளிலிருந்து பல 'ஷிண்டே'க்கள் உருவாகலாம். ஆனால், எல்லா காலத்துக்கும் இந்த உத்தி பாஜக-வுக்கு கை கொடுக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

பிரதமர் வேட்பாளர் நிதிஷ் குமார்?

இந்த நிலையில், நிதிஷ் குமார் 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஒருபுறம் பேச்சு எழுந்துள்ளது.

* "எதிர்க்கட்சிகள் தரப்பில் 'மிஸ்டர் க்ளீன்' முகமாக பிரதமர் வேட்பாளருக்கு யாரும் இல்லை.எனவே நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களைப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும். காங்கிரஸும் பலவீனமாக இருப்பதால், அந்தக் கட்சிக்கும் வேறு வழியில்லை. எனவே பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியே வாருங்கள்" என பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரும் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் பேசி சம்மதிக்க வைத்ததன் பின்னணியிலேயே இந்த அதிரடியை நிதிஷ் நிகழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது 2024 தேர்தலுக்கான மாற்றத்தின் விதையாக அமையலாம்.

நிதிஷின் நம்பகத்தன்மை

அதே சமயம் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிதிஷ் குமார் தொடர்ந்து அடித்து வரும் அரசியல் பல்டிகள் அவர் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி விட்டதாகவும், அவரது அரசியல் வாழ்வு இதோடு முடிந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதையும் காலம்தான் தீர்மானிக்கும்!

இந்த நிலையில், நிதிஷ் குமாரின் ராஜினாமா, அடுத்த முதல்வர் யார் என்பது உள்ளிட்ட பீகார் அரசியலின் இன்றைய பரபரப்பான நிகழ்வுகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
வட மாநிலத்தவர்களை வாழ வைக்கிறதா திராவிட மாடல் தி.மு.க அரசு!

வட மாநிலத்தவர்களை வாழ வைக்கிறதா திராவிட மாடல் அரசு?!

தி.மு.க., தனது சொல்லுக்கு மாறாக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு, வட இந்தியர்களுக்கு வாய்ப்பளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு என்ன காரணம், குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
பன்னீர் செல்வம் - பழனிசாமி

பன்னீர் ஸ்கெட்சை முறியடிக்க எடப்பாடி போடும் மெகா திட்டம்! - அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?!

கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் எடப்பாடி தரப்பு, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தங்களது செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையிலும், அதிமுக எனும் கட்சி தங்களுடையதுதான் என்று க்ளைம் பண்ணும் விதமாகவும் மிகப்பெரும் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

பன்னீர் ஸ்கெட்சை முறியடிக்க எடப்பாடி போடும் மெகா திட்டம் உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
அன்பில் மகேஸுக்காக நிறுத்தப்பட்டதா ஆம்புலன்ஸ்?

அமைச்சர் அன்பில் மகேஸுக்காக நிறுத்தப்பட்டதா ஆம்புலன்ஸ்?! - நடந்தது என்ன?

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்றார். அப்போது அணைக்கரைப் பாலத்தை அமைச்சர் கடந்து செல்வதற்காக எதிரே வந்த ஆம்புலன்ஸைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் நிறுத்திவைத்திருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான குற்றச்சாட்டை திமுக தரப்பில் மறுத்துள்ள நிலையில், நடந்தது என்ன என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
மூலிகை ரகசியம்

இதயத்திற்கு இதம், நரைக்குத் திரை- செக்கச் சிவந்த மருத்துவர் செம்பரத்தை!

லர்களைப் பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா? அதுவும் வண்ணமயமான மலர்களுக்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருந்தால், அம்மலர்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன. அப்படிப்பட்ட மலர்களில் ஒன்றுதான், நாம் பார்க்கப்போகும் செம்பரத்தை!

செம்பருத்தி என்றும் அழைக்கப்படும் செம்பரத்தையின் பல்வேறு மருத்துவ பயன்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
Rajinikanth and Latha Rajinikanth in Marriage ( Ananda Vikatan Archives - 1981 )

'நான் சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினா..!' - கல்யாண கதை சொல்லும் ரஜினி #AppExclusive

90s கிட்ஸுக்கு ரஜினி கல்யாணத்தப்ப நடந்ததுலாம் தெரியாதே.. அவரே சொல்றார்!

மாலை 7 மணி. போயஸ் கார்டனில் ரஜினியின் புது வீட்டுக்குப் போயிருந்தபோது, வீட்டில் அவர் மனைவி லதா இல்லை. தாஜ் ஹோட்டலில் நடக்கவிருந்த திருமண வரவேற்புக்கு, தன் கல்லூரித் தோழிகளை அழைக்கச் சென்றிருந்தார். ரஜினி, மாடியில் குளித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

சற்று நேரத்தில் இன்ட்டிமேட்டின் நறுமணம் சுகமாகக் காற்றில் பரவி வந்தது. ரஜினி இறங்கி வந்தார்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! -

திருமணத்தில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் 22.03.1981 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான ரஜினியின் பேட்டியை, இங்கே க்ளிக் செய்து விகடன் App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.