Published:Updated:

பீகாரால் தெம்பான எடப்பாடி- OnlineRummy சர்ச்சை-பூலான் தேவி பக்கங்கள்-கமல் வாக்குறுதி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 10
Listicle
Vikatan Highlights August 10

பீகாரால் தெம்பான எடப்பாடி- OnlineRummy சர்ச்சை-பூலான் தேவி பக்கங்கள்-கமல் வாக்குறுதி|விகடன் ஹைலைட்ஸ்


1
எடப்பாடி பழனிசாமி

பீகார் அரசியல் மாற்றத்தினால் தெம்பான எடப்பாடி... ஏன்?

'தென்னை மரத்தில் தேள்கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்' என்ற பழமொழி போல பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம், நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பது நியாயமான விஷயம்தான் என்றாலும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமே 'அப்பாடா..!' என்று சொல்ல வைக்கும் அரசியல் மாற்றத்தை உருவாக்கி இருப்பதுதான் புதிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.

பீகாரில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி, முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருடன், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மகா பந்தன் எனப்படும் மெகா கூட்டணியை அமைத்தன. இதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், பாஜக அந்த மாநிலத்தில் தனித்துவிடப்பட்டுள்ளது.

பாஜக பின்னடைவுக்கு என்ன காரணம்?

பீகாரில் பாஜக-வுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு,

* கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு, போதிய அனுபவமும் பக்குவமும் இல்லாத இளம் தலைவர்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டு அமைச்சர்களாக்கப்பட்டதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நிதிஷ் ஆதரவாளர்கள் , " 2020 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே, இரு கட்சிகளுக்கும் இடையேயான முட்டல் மோதல்கள் தொடங்கிவிட்டன.

* நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தபோதிலும், பாஜக-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அவரை அவமதிக்கும் போக்குடன் நடந்து கொண்டனர்.

* இரு கட்சிகளும் சேர்ந்த கூட்டணி அரசையும் முதல்வரையும் அதில் இடம்பெற்றிருக்கும் பாஜக அமைச்சர்களே விமர்சித்தனர்.

இது முதல்வர்

* நிதிஷ் குமாருக்கு மிகுந்த மன வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்திய நிலையில், அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கான மூத்த தலைவர்கள் யாரும் பீகார் பாஜக-வில் இல்லாத நிலை காணப்பட்டது.

* முந்தைய கூட்டணி அரசில் துணை முதலமைச்சராக இருந்த சுஷில் மோடி, நந்த் கிஷோர் யாதவ், பிரேம் குமார் பாஜக மூத்த தலைவர்கள், நிதிஷ் குமாருடன் நல்ல இணக்கத்தைக் கொண்டிருந்தனர்.

மேலும்,

* இவர்கள் அனைவரும் பாட்னா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவர்கள் என்பது மட்டுமல்லாமல், ஜெயபிரகாஷ் நாராயணனின் புரட்சி அரசியலில் ஒன்றாக இயங்கியவர்கள் என்பதால் அவர்களிடம் நல்ல நட்பு நிலவியது. இதனால், கருத்துவேறுபாடுகள் எழுந்தாலும் அது அவ்வப்போது பேசி தீர்க்கப்பட்டது.

ஆனால்,

* இவர்கள் அனைவரையும் 2020 தேர்தலில் சீட் கொடுக்காமல் பாஜக தலைமை ஓரம் கட்டிவிட்டது.

இதனால்,

* தற்போதைய கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பாஜக அமைச்சர்களிடமோ, மாநில பாஜக தலைவர்களிடத்திலோ சுஷில் மோடி போன்றவர்களிடம் காணப்பட்ட அத்தகைய முதிர்ச்சித்தன்மை இல்லை.

* இந்த காரணத்தால், இருதரப்புக்கும் இடையே உரிய தகவல் தொடர்புகள் இல்லாமல் இடைவெளி ஏற்பட்டு, அதுவே கூட்டணி முறிவுக்கு காரணமாக அமைந்தது" எனக் கூறுகிறார்கள்.

பாஜக-வுக்கு என்ன பாதிப்பு?

இந்த நிலையில், பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் பாஜக-வுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்லாது, தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

* நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை மக்களவையில் பாஜகவுக்குப் போதுமான பெரும்பான்மை பலம் உள்ளபோதிலும், 237 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் அதன் பலம் பாதிக்கும் கொஞ்சம் மட்டும் கூடுதலாக உள்ளது. அதுவும் கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான்.

* 91 உறுப்பினர்களுடன் தனித்த பெரும் கட்சியாக உள்ள பாஜக, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது போன்ற விஷயங்களுக்கு 4 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக போன்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளையும், 18 எம்.பி.க்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற நடபுக் கட்சிகளையே பெரிதும் சார்ந்திருந்தது.

* தற்போது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பதால், பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதிமுக-வை தாஜா செய்யும் நிலை

இதனால், அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகளையும் நட்புக் கட்சிகளையும் தாஜா செய்து தக்க வைத்துக்கொள்ளும் நிலை பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால்,

* 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிக இடங்களில் போட்டியிடுவதற்கு ஏதுவாக எடப்பாடியையும், அதிமுகவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்திருந்த பாஜக-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

* அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து பன்னீர் செல்வத்துடன் ஏற்பட்ட மோதலில், டெல்லி மேலிடம் தனக்கு ஆதரவாக நடந்துகொள்ளவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார் எடப்பாடி.

* பாஜக உடனான கூட்டணியை முறிந்து போனாலும் பரவாயில்லை என்ற முடிவுக்குத்தான் வந்திருந்தார். ஆனால் டெண்டர் ஊழல் வழக்கு உள்ளிட்ட சில விஷயங்களில் டெல்லியின் தயவு தேவை என்பதாலேயே அவர் அடக்கி வாசித்தார்.

இந்த நிலையில், பீகார் அரசியல் மாற்றம் எடப்பாடிக்கு பாஜக-வுடன் பேரம் பேசும் துணிவைத் தந்துள்ளது என்பதால், நிதிஷ் குமாரால் தமிழக அளவிலும் பாஜக-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக-வுக்கே `பாயசம்' வைக்கும் வித்தையில் நிதிஷ் கெத்து காட்டியது எப்படி என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
#IndependenceDay2022

75 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்ட இந்தியா... எப்படிச் சாத்தியமானது? #IndependenceDay2022

கோவிட் பெருந்தொற்றால் கடந்த நாற்பதாண்டுகளில் முதல்முறையாக 2020-21-ம் நிதியாண்டில் பொருளாதாரம் 7.4% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் 2021-22-ம் ஆண்டு அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்தது. இனிவரும் ஆண்டு களிலும் இந்தியாவின் வளர்ச்சிப் போக்கு தொடரும் என நம்பப்படுகிறது.

இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ( ம.அரவிந்த் )

நீர்நிலையை ஆக்கிரமித்த சாஸ்த்ரா... 30 ஆண்டுகள் போராட்டம்! முடிவுக்கு வருமா?


4
பூலான் தேவி

கொள்ளைக் கூட்டம் டு அரசியல் தலைவர் - Bandit Queen பூலான் தேவியின் வாழ்க்கைப் பக்கங்கள்!

வாழ்வு எல்லா பக்கங்களிலிருந்தும் தனக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டு இருந்தபோதும், அந்த இருளில் தன் வாழ்வுக்கான வெளிச்சக் கீற்றை தானே ஒளிரச் செய்தவர்தான் பண்டிட் ராணி (Bandit Queen) என்றழைக்கப்படும் பூலான் தேவி. நம்மில் பெரும்பாலானோர் கிண்டல் கேலிக்குரிய ஒரு பாத்திரமாக இப்பெயரைக் கடந்து வந்திருக்க, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு அவர் வாழ்வில் மறைந்து கொண்டிருக்கிறது.

பூலான் தேவியின் வாழ்க்கைப் பக்கங்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
ஆன்லைன் சூதாட்டம் ( Representational Image )

'ஆன்லைன் சூதாட்டத்துக்கெல்லாமா கருத்துக் கேட்பு?' - விளக்கம் சொல்லும் திமுக!

ன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய குழு அமைத்ததோடு மக்களிடம் கருத்தும் கேட்டு வருகிறது. ஆனால், கால தாமதம் செய்யவே அரசு இதைச் செய்கிறதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ள நிலையில், திமுக அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
kamal haasan's father srinivasan exclusive interview at 1983

" கமல் காப்பாற்றத் தவறிய அந்த வாக்குறுதி..!" - கமலின் அப்பா பேட்டி

"ஆரம்ப காலத்துல கே.பி.-யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம். முடியுமாப் போயிடுச்சி. அப்புறம் கே.பி-யிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தது..."

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! - 29.05.1983 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான கமலின் தந்தை பரமக்குடி அட்வகேட் D.சீனிவாசனின் பேட்டியை முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம்.