Published:Updated:

கூட்டணி: வாஜ்பாய்- மோடி என்ன வித்தியாசம்?- ரஜினி சந்திப்பு எதனால்?- OPS-ன் மறுப்பு|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highllights August 11
Listicle
Vikatan Highllights August 11

கூட்டணி: வாஜ்பாய்- மோடி என்ன வித்தியாசம்?- ரஜினி சந்திப்பு எதனால்?- OPS-ன் மறுப்பு|விகடன் ஹைலைட்ஸ்


1
அமித் ஷா, மோடி

கூட்டணி: வாஜ்பாய்க்கும் - மோடிக்கும் என்ன வித்தியாசம்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கூட இல்லாத நிலையில், பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், பாஜக போட்டு வைத்த அரசியல் கணக்குகளையெல்லாம் தலைகீழாக மாற்றியுள்ளது. பீகார் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வட மாநிலம் ஒன்றில் ஆட்சியை இழந்திருப்பது அந்தக் கட்சியைப் பொறுத்த வரை அதிர்ச்சியான ஒன்றுதான்.

பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

அதே சமயம், பாஜக தலைமை தனது கட்சியை அழிக்கும் வேலையைச் செய்ததால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக குற்றம் சாட்டி உள்ளார் ஐக்கிய ஜனதா தளக்கட்சித் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார்.

இதே குற்றச்சாட்டைத்தான் முன்னர் பாஜக உடன் கூட்டணி வைத்த சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் முன்னர் குற்றம் சாட்டி இருந்தன.

* " ஒன்று, கூட்டணிக் கட்சிகளை பாஜக விழுங்கிவிடுகிறது அல்லது அழித்து விடுகிறது" என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு.

* " பஞ்சாப்பில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிப் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைத்த முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று அரசியலில் காணாமல் போய்விட்டார்.

அதே நிலைதான் பிரகாஷ் சிங் பாதலுக்கு.

* பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சியின் இன்றைய பரிதாப நிலை அனைவரும் அறிந்ததுதான்.

* உத்தரபிரதேசத்தில் ஒரு காலத்தில் பாஜக உடன் கூட்டணி வைத்த மாயாவதிக்கும் அதே நிலைதான்..."

என வரிசையாக பட்டியலிடும் நிதிஷ் குமார் ஆதரவாளர்கள், " அதே நிலை எங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் சுதாரித்துக்கொண்டு முன்கூட்டியே கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்" என்கிறார்கள்.

மோடி Vs வாஜ்பாய்: என்ன வித்தியாசம்?

" அதே சமயம்,

* வாஜ்பாய் காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்தபோது, அவர் எங்களை மரியாதை உடன் நடத்தினார். அமைச்சரவையிலும் முக்கியமான பொறுப்புகளை வழங்கினார்.

* ஆனால், இப்போதைய மோடி - அமித் ஷா தலைமையிலான பாஜக அப்படி இல்லை. கூட்டணி கட்சிகளை உறவாடியே அழித்து, அப்படியே அதனைக் கபளீகரம் செய்ய நினைக்கிறது" எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

* பாஜக-வைப் பொறுத்தவரை கடந்த இருபது ஆண்டுகளில், குறிப்பாக வாஜ்பாய் காலத்துக்குப் பின்னர் அந்தக் கட்சியின் வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாததாகி விட்டது.

* 1996 ம் ஆண்டு மக்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், மற்ற கட்சிகள் அதை பலமற்றதாக கருதியதால், அதனால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

அதிமுக-வால் கற்றுக்கொண்ட பாடம்

பின்னர் 1998 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 182 தொகுதிகளில் வென்றது. பெரும்பான்மை இல்லாத நிலையில், பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா, பிஜு ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தது. வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

* சில கோரிக்கைகளை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுத்ததால் அரசுக்கு அளித்த ஆதரவை அதிமுக விலக்கிக்கொண்டது.

கடந்த முறை 13 நாட்களே நீடித்த அவரது ஆட்சி, இந்த முறை 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

பின்னர் 1999 ம் ஆண்டு 1999-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 20 கட்சிகள் ஒன்றிணைந்து வாஜ்பாயை மூன்றாவது முறையாக பிரதமராக்கினர்.

* அதிமுக-வினால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், இந்த முறை வாஜ்பாய் தனது கூட்டணி கட்சிகளை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதில் மிக கவனமாக இருந்தார். அப்படி மோடியும் அமித் ஷாவும் ஏன் தங்களை நடத்துவதில்லை என்று கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

'மோடி - அமித் ஷாவிடம் அது நடக்காது!'

ஆனால், " அதெல்லாம் வாஜ்பாய் காலத்தோடு முடிந்து போய்விட்டது. மேலும் அதிமுக-வால் ஏற்பட்ட அனுபவத்தைப் போன்று மீண்டும் ஒரு கட்சியிடமிருந்து அத்தகைய அனுபவத்தைச் சந்திக்க இப்போது நாங்கள் தயாராக இல்லை. பாஜக-வின் வலுவான சக்தியாக உள்ள இன்றைய மோடி - அமித் ஷா இரட்டையர்களிடம் அது நடக்காது. அப்படியெல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது.

2014, 2019 என அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று இருப்பதால், கூட்டணி கட்சிகள் தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல் போனால், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்.

'உத்தவ் தாக்கரே கதிதான் நிதிஷ் குமாருக்கும்..!'

நிதிஷ் குமார் இப்போது வேண்டுமானால் மீண்டும் முதல்வராக பதவியேற்றிருக்கலாம். ஆனால், பாஜக இதை இலேசில் விட்டுவிடாது.

* மகாராஷ்டிராவில் எப்படி இரண்டரை வருடங்கள் காத்திருந்து உத்தவ் தாக்கரேவின் கதையை பாஜக முடித்ததோ, அதே நிலை நிதிஷ் குமாருக்கும் நிச்சயம் ஏற்படும்" என்கிறார்கள் அந்தக் கட்சியின் டெல்லி தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

வரும் நாட்களில் இன்னும் என்னென்ன அரசியல் களேபரங்களெல்லாம் அரங்கேறப் போகிறதோ..?!

-----------------------------

இந்த நிலையில், தற்போதைய அரசியல் களேபரங்களுக்கு வித்திட்ட பீகாரில், தவிர்க்க முடியாத சக்தி ஆகிறாரா லாலு மகன் தேஜஸ்வி என்ற கேள்வி அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க..


2
ஆளுநர் ரவி - ரஜினி

"அதனால்தான் ஆளுநரைச் சந்திக்க ஓடுகிறார் ரஜினி..!" - அனல் கிளப்பும் விமர்சனங்கள்

ளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய சந்திப்பு, அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. "எங்கள் சந்திப்பில் அரசியலும் பேசினோம்" என எண்ணெயை ஊற்றிப் பரபரப்பை மேலும் எகிறவைத்திருக்கிறார் ரஜினி.

இது குறித்த பாஜக வட்டாரம் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள், எழுந்துள்ள கடுமையான விமர்சனங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்: கீதா ஜீவன் - தம்பி மோதல் முதல் ஆபீஸ் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ஓ.பி.எஸ் வரை..!

" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும், அவருடைய தம்பியும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயருமான ஜெகனுக்கும் இடையே 'டேர்ம்ஸ்' சரியில்லையாம். காரணம்... "

மேலும், நாமக்கல் புதிய பேருந்து நிலைய இடத்தேர்வின் அடடே பின்னணி, பாஜக கபடி போட்டி தொடர்பான வசூல் புகார், திமுக-வினர் கைவிடாத பேனர் கலாசாரம் என கழுகார் அப்டேஸ்-களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்

நரசிம்ம ராவ் + மன்மோகன் சிங் கூட்டணி: இந்தியா மறுஜென்மம் எடுத்த 1991... #IndependenceDay2022

ந்தியாவின் பொருளாதாரம் 1991-க்குப் பிறகு கண்ட மாற்றங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருந்தன. இன்றைக்கு இந்திய உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணம், அந்த ஆண்டில் நடந்த சில முக்கியமான விஷயங்கள்தான்.

நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் கூட்டணியில் இந்தியா மறுஜென்மம் எடுத்தது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
தண்ணீர் பாட்டில்

RO தண்ணீர் நல்லதா..?

ன்று தண்ணீர் என்றால் RO தண்ணீர்தான் என்றாகி விட்டது. மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் கேன் வாட்டர், பானைத் தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர், ஃப்ரிட்ஜ் தண்ணீர், செம்புப் பாத்திரத் தண்ணீர்... இவற்றில் எது நல்லது?

இது குறித்து 'ஆரோக்கியம் ஒரு பிளேட்' தொடரில் இடம் பெற்றுள்ள தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
Thengaai Srinivasan's Interview from 1972

'திருப்பதியிலிருந்து திரும்பியதும் காத்திருந்த அதிர்ச்சி!' - தேங்காய் சீனிவாசன்

வருக்கு 'தேங்காய்' பட்டத்தைக் கொடுத்தவர் யார் தெரியுமா?

நகைச்சுவையைப் பொறுத்தவரை தங்கள் 'குரு' யார்?

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 'தேங்காய் சீனிவாசன் பேசுகிறார்' என்ற தலைப்பில் 26.11.1972 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த அவரது பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும். முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.