Published:Updated:

அன்பில் மகேஷுக்கு ராஜினாமா நெருக்கடி?எடுபடுமா மோடி முழக்கம்-ஸ்ரீதேவியின் வேதனை வலி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 16
Listicle
Vikatan Highlights August 16

அன்பில் மகேஷுக்கு ராஜினாமா நெருக்கடி?எடுபடுமா மோடி முழக்கம்-ஸ்ரீதேவியின் வேதனை வலி|விகடன் ஹைலைட்ஸ்


1
அன்பில் மகேஷ்

'கள்ளக்குறிச்சி டு கல்வி டிவி வரை சொதப்பல்..!' - அன்பில் மகேஷுக்கு ராஜினாமா நெருக்கடி?

பொதுவாக ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு பிரச்னை அல்லது விவகாரத்தை தவறாக கையாண்டலோ அல்லது பணியில் சொதப்பினாலோ அவரை ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் தான் குரல் எழுப்புவார்கள். ஆனால் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக திமுக ஆதரவாளர்களிடமிருந்தே #Resign_AnbilMahesh என ட்விட்டரில் கொந்தளிப்பு குரல்கள் எழுந்திருப்பதுதான் அந்தக் கட்சித் தலைமையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சர்ச்சையைக் கிளப்பிய கல்வி டி.வி நியமனம்

* விவகாரத்துக்கு அடிப்படை காரணம், தமிழ்நாடு அரசு கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக (CEO) மணிகண்ட பூபதி என்பவர் நியமனம் செய்யப்பட்டதுதான்.

இந்த நியமனம் குறித்த அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்னர் வெளியானபோதே,

* இது குறித்த முணுமுணுப்புகள் திமுகவினரிடையே, குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களிடமிருந்து எழுந்தது.

* " மணிகண்ட பூபதி ஒரு தீவிர வலதுசாரி ஆதரவாளர். கடந்த காலங்களில் அவர் தனது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பல வழிகளில் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் திமுக-வுக்கு எதிராகவும் பேசி உள்ளார்.

* கூடவே இவர் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவான கருத்தியலைக் கொண்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வலதுசாரி ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டே நடத்தும் யூ டியூப் சேனலுக்கு எல்லாமுமாக இருப்பவர்.

* இவரை எப்படி திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக கூறுபவர்கள், கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக நியமித்தார்கள்..?

வேறு திறமை வாய்ந்தவர்கள் இல்லையா?

* இந்த பதவிக்கு திறமை வாய்ந்த வேறு பலர் விண்ணப்பித்த நிலையில், அவர்களை நேர்காணலுக்குக் கூட அழைக்காமல், எந்த தகுதியின் அடிப்படையில் மணிகண்ட பூபதி நேரடியாக நியமிக்கப்பட்டார்?

* தமிழக அரசின் கல்விக் கொள்கைக்கு ஆதரவான திறமையான ஒருவர் கூடவா இந்தப் பதவிக்கு நியமிக்க தகுதி இல்லாதவர்களாக உள்ளனர்? மொத்தத்தில் தமிழக அரசின் எல்லா முக்கியத் துறைகளிலும் வலதுசாரி ஆதரவாளர்கள் ஊடுருவி வருகின்றனர்.

இதற்காகவா நாங்கள் தேர்தல் நேரத்தில் பாஜக உள்ளிட்ட வலதுசாரியினருக்கு எதிராக களமாடி திமுக ஆட்சியைப் பிடிக்க துணை போனோம்..?

'ஆரம்பம் முதலே சொதப்பல்'

'அன்பில் மகேஷைப் பொறுத்தவரை அவர் கல்வி அமைச்சராக பதவியேற்றபோது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தலைமைக்கு நெருக்கமானவர். அதனால் உடனுக்குடன் பேசி, வேண்டிய திட்டங்களை விரைவாக செயல்படுத்துவார். பள்ளிக்கல்வித் துறையில் காணப்பட்ட தேக்க நிலைக்குத் தீர்வு ஏற்படும். அரசு பள்ளிகளின் தரம் மேம்படும்' என்றெல்லாம் எதிர்பார்த்தோம்.

ஆனால்,

* அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் ரீதியில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறாரே தவிர, அமைச்சருக்கான செயல்பாட்டில் பெரிய பெர்ஃபாமென்ஸ் எதையும் காட்டவில்லை.

அதுதான் போகிறது... பிரச்னையில்லாமாலாவது செயல்படுகிறாரா என்றால் அதுவும் இல்லை.

* பல அரசு பள்ளிகளில் இன்னும் பாடப்புத்தகங்களே கொடுக்கப்படவில்லை. 'இல்லம் தேடி கல்வி திட்ட'த்திலும் சொதப்பினார்.

* கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் அவர் செயலற்றுப்போய் இருந்தது அரசுக்கு எத்தகைய நெருக்கடியைக் கொண்டு வந்தது என்பது ஊருக்கே தெரியும்.

இதோ...

* இப்போது கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ நியமனத்திலும் திமுகவினரின் மனம் புண்படும்படி நடந்துகொண்டுள்ளார்..." என்றெல்லாம் கொதிப்புடன் கருத்துகளைப் பதிவிட்டனர்.

கொதிப்பில் தள்ளிய விளக்கம்

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அன்பில் மகேஷ்,

* " ஒருவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது முக்கியம் இல்லை. அவரின் செயல்பாடுகள் மூலமாகதான் பார்க்கவேண்டும்.

* இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டபோது கூட இது மாதிரியான பல சர்ச்சைகள் எழுந்தது அதையெல்லாம் தகர்த்து தற்போது அந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது" என்றார்.

அவ்வளவுதான் கொதிப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர் திமுக ஆதரவாளர்கள். " இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா..? முதலமைச்சர் அடிக்கடி சொல்லும் சமத்துவமும், சமூகநீதியும் மணிகண்ட பூபதி போன்றவர்களின் தலைமையின் கீழ்தான் மலரப்போகிறதா..? கல்வி துறையும் ,செய்தி மற்றும் ஔிபரப்பு துறை போன்றவையெல்லாம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது.

ட்ரெண்டான #Resign_AnbilMahesh

பாண்டேவிடம் கருத்துகேட்குமளவுக்கு தமிழக கல்வி அமைச்சர் திறமையற்று இருப்பது தமிழகத்திற்கு மிகவும் ஆபத்து. அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இது விஷயத்தில் தலையிட வேண்டும்..." என்பது போன்ற கருத்துகளுடன் #Resign_AnbilMahesh என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் இன்று ட்ரெண்டானது.

* இந்த ஹாஷ்டேக்கை ட்ரெண்டாக்கியது திமுக ஆதரவாளர்கள் ஒருபுறம் என்றால், தீவிர திமுவினரும் இதில் பங்கேற்றதாகத்தான் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் போக்கை அவதானிப்பவர்களும், பல்வேறு கட்சிகளின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.

* பொதுவாக ஒரு ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது என்றால், அது யாரால் அதிகம் பகிரப்படுகிறது என்பதை கட்சிகளின் ஐடி விங்கில் இருப்பவர்கள் எளிதில் கண்டறிந்துவிடுவார்கள். திமுக ஆதரவாளர்களின் கருத்துகள் ட்விட்டர் தளத்தில் பகிரங்கமாகவே காணப்படுகிறது.

நிறுத்தப்பட்ட நியமனம்

இவையெல்லாம் திமுகவுக்கு மிகுந்த தர்மசங்கடமான, நெருக்கடியான நிலையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல்கள், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி (CEO) நியமனம் நிறுத்தி வைக்கப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியானது. மேலும், பதவியேற்க வேண்டாம் என மணிகண்ட பூபதிக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதிலெல்லாம் சமாதானமாகாத திமுக ஆதரவாளர்கள், " நியமனத்தை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது... ரத்து செய்யவேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக-வைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் அரசியலை எதிர்கொண்டு சமாளித்து விடும். ஆனால், கொள்கைக்கு மாறான அரசியலை நோக்கித் திரும்பும்போது திமுக ஆதரவாளர்களே அந்தக் கட்சியை பின்னியெடுப்பதுதான் திமுகவுக்கே இருக்கும் பிரத்யேக நெருக்கடி!

இத்தகைய சூழலில், மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம், திமுக - பாஜக இடையேயான மோதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
பொதுக்குழு மேடை

சசிகலா படம் மிஸ்ஸிங் டு 'கம கம' பிரியாணி வரை - டி.டி.வி.தினகரனின் அமமுக பொதுக்குழு ஹைலைட்ஸ்!

டப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர் செல்வம் மோதலால், அதிமுக யார் கையில் என்ற குழப்பத்திலேயே அந்தக் கட்சியின் தொண்டர்கள் இருக்கின்றனர். இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த அதே வானகரம் ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அமமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

மண்டபத்துக்கு லைவ் விசிட் அடித்ததில் கண்ட காட்சிகள் எல்லாம் அம்மாடியோவ் ரகம்... அவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
பிரதமர் மோடி

வாரிசு அரசிமோடியின்  பழைய முழக்கம் எடுபடுமா?!

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், அவர் இறுதியாகக் கூறிய ஊழல், குடும்ப அரசியல் ஆகிய இரண்டு வார்த்தைகள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன.

இது மக்களிடையே எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
Dominos

`ஓ... இப்படித்தான் பீட்சா தயாரிக்கிறாங்களா': டோமினோஸுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

பெரிய உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் சுவையை மட்டும் கொண்டாடித் தீர்க்கிறவர்கள், அந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில், பிரபலமான பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸுக்கு எதிராக ட்விட்டரில் எதிர்ப்பு கருத்துகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன், எதனால் என்பதை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
உதயநிதி, கிருத்திகா

" இப்பதான் தமிழ் கத்துக்கிட்டிருக்கேன்.. வசனங்களை தங்கிலீஷ்லதான் எழுதுவேன்!" - கிருத்திகா உதயநிதி

நான்கு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின் 'பேப்பர் ராக்கெட்' என்கிற இணையத் தொடரை இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிற உற்சாகத்தில் அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ள கிருத்திகா உதயநிதியிடம் பர்சனல் வாழ்க்கை குறித்துப் பேசினோம். அதனை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
Actress Lakshmi writes about Sridevi

'அந்தப் பக்குவம்தான் ஶ்ரீதேவியை பாலிவுட் ராணியாக்கியது!' - லட்சுமி #AppExclusive

80, 90-களில் தமிழ் ரசிகர்களின் கனவுகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த பிரபல ஹீரோயின்களின் வலி மிகுந்த ரகசிய பக்கங்களை, அதிக சத்தமில்லாமல் படித்துக் காட்டுகிறார் நடிகை லட்சுமி..

"அன்று ஷீட்டிங். இப்போது ஸ்ரீதேவிக்குப் பத்து வயசு. அந்தச் சிறுமி ஒரு பெண்ணாக மலரத் துவங்கியிருந்தாள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. ஸ்ரீதேவியை ஒரு டவுசர் மட்டும் மாட்டி, ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும்..."

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 26.05.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் லட்சுமி பகிர்ந்த ரகசிய பக்கங்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...