Published:Updated:

அவசரப்பட்டாரா எடப்பாடி?- -கணவர்களை எச்சரிக்கும் தீர்ப்பு-|சாதித்த வாரிசு நடிகை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 17
Listicle
Vikatan Highlights August 17

அவசரப்பட்டாரா எடப்பாடி?- -கணவர்களை எச்சரிக்கும் தீர்ப்பு-|சாதித்த வாரிசு நடிகை|விகடன் ஹைலைட்ஸ்


1
எடப்பாடி பழனிசாமி

இனி சோதனைக் காலம்தான்... அவசரப்பட்டாரா எடப்பாடி?

"அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லாது; அ.தி.மு.க.வில் ஜூன் 23 ம் தேதிக்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அந்த நிலையே இனி தொடர்ந்து நீடிக்கும்" என சென்னை உயர் நீதிமன்ற வழங்கி உள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்குப் பெருத்த பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தற்போதைய நிலைக்கு அவசர அவசரமாக அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளே காரணமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த கால கச்சிதமான 'மூவ்'

* 2021 ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே அதிமுக-வை மெல்ல மெல்ல தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தார் எடப்பாடி.

* முதலமைச்சராகவும் இருந்ததால், அதிகாரம், பணபலம் உள்ளிட்டவற்றைக் கொண்டு கட்சி நிர்வாகிகளின் தேவைகளை உடனுக்குடன் அவர் செய்து கொடுத்ததால்,

* ஒன்றியம், வட்டம், மாவட்டம் என கட்சியின் சகல பிரிவுகளிலும் உள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர்.

எடப்பாடியின் இந்த கச்சிதமான' மூவ்' அப்போதே கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு பதற்றத்தைக் கொடுக்கத் தொடங்கியது.

பலவீனப்பட்ட பன்னீர்

இதனால்,

* அவ்வப்போது எடப்பாடியுடன் முரண்டு பிடிப்பதும், பின்னர் எடப்பாடி கூப்பிட்டுப் பேசிய பின்னர் சமாதானமாவதுமாகவும் அவர் இருந்ததால், அவரது நிலைப்பாடு மீது ஆதரவாளர்களுக்கே சந்தேகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

* இதன் காரணமாகத்தான், பன்னீர் செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின்போது அவரது பக்கம் நின்ற கட்சியின் மூத்த நிர்வாகிகளில் பலர் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர்.

இப்படி பன்னீர் செல்வம் படிப்படியாக பலவீனம் அடைந்த நிலையில்தான்,

* 2021 தேர்தலில் அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியையே நிறுத்தும் முடிவுக்குச் சம்மதம் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பொய்த்துப்போன ஆருடங்கள்

அதே சமயம் பா.ஜ.க உடனான கூட்டணி, 10 ஆண்டுக்காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் இயல்பாகவே மக்களிடம் காணப்பட்ட எதிர்ப்பலை போன்றவற்றால், தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடையும் எனச் சொல்லப்பட்டது.

ஆனால், அத்தகைய அனைத்து அரசியல் ஆருடங்களையும் நொறுக்கித்தள்ளிவிட்டு,

* 2021 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதில் அ.தி.மு.க மட்டும் 65 இடங்களைக் கைப்பற்றியது எடப்பாடியே எதிர்பாராத ஒன்றாகத்தான் இருந்தது.

* அதே சமயம், அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் பெரும்பாலானாவை கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்கள் என்பதால், இந்த வெற்றியின் பெரும் பங்கு தன்னையே சாரும் என்று நினைத்தார் எடப்பாடி.

* மேலும் அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பன்னீர் செல்வத்துக்கு செல்வாக்கான மாவட்டங்களாக சொல்லப்பட்ட இடங்களிலும் அ.தி'மு.க-வுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வி, அவரது இமேஜை படு பாதாளத்துக்குத் தள்ளியது.

எடப்பாடி போட்ட கணக்கு

இவற்றையெல்லாம் கணக்குப்போட்டுத்தான், அ.தி.மு.க-வில் தனது ஆதரவாளர்கள் மூலம் 'ஒற்றைத் தலைமை ' கோஷத்தை எழுப்ப வைத்தார் எடப்பாடி. இதனைத் தொடர்ந்தே எடப்பாடிக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி எழுப்பினார் ஓ.பி.எஸ். ஆனால், நிலைமை அதற்குள் அவரது கைமீறிச் சென்றுவிட்டது. '

* ' கேட்டதை கொடுத்து' கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளைத் தன்பக்கம் வளைத்து விட்டார் எடப்பாடி.

* இந்தச் சூழ்நிலையில்தான், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி ஆதரவாளர்களால் ஓ.பி.எஸ் அவமானப்படுத்தப்பட்டதால், கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டதோடு, ஓ.பி.எஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

சறுக்கியது எங்கே?

'இந்த இடத்தில்தான் எடப்பாடி அவசரப்பட்டு சறுக்கினார்' என்கிறார்கள் அவரது ஆதரவு வட்டத்தில் இருப்பவர்கள். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "

* அ.தி.மு.க-வில் மொத்தமுள்ள 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் 2532 உறுப்பினர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

* இந்த அளவுக்கு பெரும்பான்மையான நிர்வாகிகளைத் தனது பக்கம் இருக்கும்போது, கட்சியின் ஒற்றைத் தலைமையைத் தேர்தல் மூலம் முடிவு செய்யலாம் என ஓ.பி.எஸ்-ஸிடம் வலியுறுத்தி, அவரை அதற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும்.

* தனக்குத்தான் கட்சியில் அதிக ஆதரவு என்று ஓ.பி.எஸ் சொல்வாரானால், அவரும் தேர்தலுக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது.

* ' இப்போதுள்ள இரட்டைத் தலைமையே நீடிக்கட்டும், ஒற்றைத் தலைமை எதற்கு?' என அப்போது ஓ.பி.எஸ் பதறியதிலிருந்தே, அவருக்குப் போதுமான செல்வாக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்துபோய்விட்டது. எனவே, எடப்பாடி போராடி, தேர்தலை நடத்த வைத்திருக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், கட்சி விதிகள் தனக்கு சாதகமாக இல்லாததை உணர்ந்து அவசரப்பட்டு ஓ.பி.எஸ்-ஸை கட்சியிலிருந்து நீக்கி இருக்கக்கூடாது. மேலும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகவும் தன்னை அறிவிக்க வைத்திருக்கக்கூடாது.

* இதைச் சுட்டிக்காட்டித்தான் ஓ.பி.எஸ் வழக்குத் தொடர்ந்து, தற்போது பொதுக்குழு கூட்ட முடிவுகளையே செல்லாது என நீதிமன்றத்தின் மூலம் சொல்ல வைத்துவிட்டார்" என்கிறார்கள்.

இனி என்ன நடக்கும்?

* இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லக்கூடும்.

* ஆனால், அங்கும் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

* மேலும் தேர்தல் கமிஷனில் வேறு எடப்பாடியின் முறையீடு நிலுவையில் உள்ளது.

* அதே சமயம் பொதுக்குழுவைக் கூட்டி தனது ஆதரவை அவர் நிரூபிக்கலாம். ஆனால், பொதுக்குழுவைக் கூட்ட ஓ.பி.எஸ் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

* ஓ.பி.எஸ் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் தங்களை நாடலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ள போதிலும், அது தீர்ப்பு, அப்பீல் என இழுபறிக்கே வழிவகுக்கும்.

* இவை எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லியின் கரிசனப்பார்வை எடப்பாடி மீது இல்லை.

* அ.தி.மு.க பிளவுபட்டால் அது 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு தமிழ்நாட்டில் சாதகமாக இருக்காது என்பதால், இருதரப்புக்குமிடையே சமரசம் செய்வதற்கான முயற்சிகளையே பா.ஜ.க மேற்கொள்ளும்.

* சரிப்படாவிட்டால் சசிகலா - தினகரனை உள்ளுக்குள் இழுக்கவும் தயங்காது.

சோதனைக் காலம்

சசிகலாவுடன் சமரசமாக செல்ல தான் தயார் என்பதை ஓ.பி.எஸ் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், டெண்டர் ஊழல் வழக்கு, கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு என எடப்பாடியின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது கத்தி.

இவையெல்லாவற்றையும் மீறி எடப்பாடி தனது நிலையில் உறுதியாக இருப்பார் என்றால், அவர் வரும் நாட்களில் பல்வேறு சோதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும். அப்படியான ஒரு சூழலில், கட்சியில் இப்போது அவரை ஆதரிக்கும் நிர்வாகிகள் தொடர்ந்து அவர் பக்கம் நிற்பார்களா என்பதும் கேள்விக்குறிதான்..!

மொத்தத்தில் எடப்பாடிக்கு இனி சோதனை காலம்தான்..!

இந்த நிலையில், 'எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச்செயலாளராகதேர்வு செய்யபட்டது செல்லாது' என பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


2
ஓ. பன்னீர் செல்வம்

"கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்!'' - ஓ.பி.எஸ்

"அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லாது" என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்தை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
குடும்ப வன்முறை ( மாதிரிப் படம் )

"குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை, வீட்டை விட்டு வெளியேற்றலாம்!" - பரபரப்பு தீர்ப்பு

குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை வீட்டிலிருந்து வெளியேற்றுவது மட்டுமே குடும்ப அமைதியை உறுதிப்படுத்தும் எனில், அந்த கணவனை வீட்டை விட்டு கணவனை வெளியேற்ற நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்' என சென்னை நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


4
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு... பந்தாடப்படும் துணைவேந்தர்கள்!


5
All India Football Federation

தடையினால் தள்ளாடும் இந்தியக் கால்பந்து! - தீர்வுதான் என்ன?

கில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிற்கு FIFA அமைப்பு விதித்திருக்கும் தடையால் அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பைத் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பதுமே சந்தேகமாகியுள்ளது.

இது குறித்த முழு தகவல்களையும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
அதிதி ஷங்கர்

மிஸ்டர் மியாவ்: சங்க நடிகரின் மனதை ஈர்த்த வாரிசு நடிகை!

"பிரமாண்ட இயக்குநரின் மகள் நடிக்க முடிவெடுத்தவுடனேயே, சங்க நடிகரின் பெயரைத்தான் ஆசையாகச் சொன்னாராம். ஆனால்..."

மிஸ்டர் மியாவ் தரும் சுவாரஸ்யமான சினிமா தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...