Published:Updated:

பி.டி.ஆர்: திகைப்பில் திமுக தலைமை!-OPS அழைப்பு-மீண்டும் அழகிரி-பா. இரஞ்சித் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 18
Listicle
Vikatan Highlights August 18

பி.டி.ஆர்: திகைப்பில் திமுக தலைமை!-OPS அழைப்பு-மீண்டும் அழகிரி-பா. இரஞ்சித் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

'முதல்வர் வேட்பாளர் பி.டி.ஆர்..!'-திகைத்துப்போன திமுக தலைமை!  

லவச திட்டங்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் பேச்சும், அது தொடர்பான பொதுநலன் வழக்கும் நாடு முழுவதும் அது குறித்த விவாதத்தைப் பெரிய அளவில் கிளப்பி உள்ளது.

இலவச திட்டங்கள் குறித்த விவாதம்

இந்த நிலையில், இது தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை விமர்சித்துக் கொடுத்த பதிலடி, நேற்று இரவிலிருந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்று, இலவச திட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டடுள்ளதை முன்வைத்து நேற்று இரவு நடத்திய விவாதத்திற்கு பி.டி.ஆரை அழைத்திருந்தது. அப்போது அவரிடம் நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர், " இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். இலவசங்கள் காரணமாக திறன் வளராது என்று மோடி கருதுகிறாரே..?" எனக் கேள்வி எழுப்பினார்.

விளாசித்தள்ளிய பி.டி.ஆர்

இதனையடுத்து பி.டி.ஆர், 'இந்த வாய்ப்பைத்தான் எதிர்நோக்கி இருந்தேன்...' என்பதுபோல, மத்திய அரசுக்கு எதிராக சரமாரியான கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

* " இலவச திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? எந்த அடிப்படையில் இந்த கருத்தைக் கூறுகிறது?

* அரசியலமைப்பு சட்டத்தில் அப்படிக் கூறப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அதனை நாங்கள் கேட்கிறோம்.

* இலவசங்கள் வேண்டாமென நீங்கள் சொல்ல, அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை இருக்கிறதா? - இல்லை.

* நீங்கள் நிதி நிபுணரா? - இல்லை. பொருளாதாரத்தில் இரட்டை பி.எச்.டி பட்டம் பெற்றவரா? - இல்லை.

* நோபல் பரிசு பெற்றவரா? - இல்லை. எங்களைவிடச் சிறப்பாக செயல்படுகிறீர்களா? - எதுவும் இல்லை!

* அல்லது உங்கள் திட்டங்களால் நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து நாட்டின் கடனைக் குறைத்தீர்கள், தனிநபர் வருமானத்தை அதிகரித்தீர்களா?

* அல்லது வேலைகளை உருவாக்கியுள்ளீர்கள் என்ற செயல்திறன் சாதனைப் பதிவு ஒன்றாவது உங்களிடம் இருக்க வேண்டும்.

* இவை எதுவுமே இல்லாதபோது நாங்கள் ஏன் உங்கள் கருத்தைக் கேட்க வேண்டும்?

அடுக்கடுக்கான கேள்விக்கணைகள்...

தமிழ்நாடு உங்களைவிடப் பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கிறது. நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் எங்களுக்கு நீங்கள் 33 பைசாவைத்தான் திரும்பக் கொடுக்கிறீர்கள் அறுபத்தேழு பைசாவை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம்.

எங்கள் வேலையை நாங்கள் சரியாகச் செய்கிறோம். இப்படி இருக்கையில், இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என எந்த பொருளாதார நிபுணத்துவத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்..?" என வரிசையாக அடுக்கிய கேள்விக்கணைகளால் நெறியாளர் வாயடைத்துப்போனார்.

சமூக வலைதளங்களில் வைரல்

அவ்வளவுதான்,

* பி.டி.ஆரின் இந்த பதிலடி வீடியோ காட்சிகள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்றிரவிலிருந்தே வைராலாகத் தொடங்கியது.

* கூடவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் பி.டி.ஆரை டேக் செய்து பாராட்டிய நிலையில்,

* இன்று காலை முதல் வட மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு எதிரான மன நிலையில் உள்ள ட்விட்டர்வாசிகளும் இதை தங்களது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டும், ரீ ட்வீட் செய்தும் தங்கள் பங்கிற்கு பாராட்டினர்.

கொண்டாடிய தி.மு.க-வினர்

அண்மையில் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக-வினர் மீது கடுங்கோபத்தில் இருந்த திமுகவினருக்கு, இது கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

" பி.டி.ஆர் எழுப்பிய கேள்வி ஒவ்வொன்றும், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி" என்று குறிப்பிடு, அவர்கள் இதை மேலும் வைரலாக்கினர். இதனால் ட்விட்டரில் #PTRPalanivelThiagarajan என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.

பா.ஜ.க கொடுத்த பதிலடி

அதே சமயம், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்துக்கு பா.ஜ.க தரப்பிலிருந்தும் பதிலடி வராமல் இல்லை. பிரபல எரிசக்தி நிபுணரும், ஆலோசகருமான பா.ஜ.க-வைச் சேர்ந்த நரேந்தர் தனேஜா, பி.டி.ஆரின் பேச்சைக் குறிப்பிட்டு,

* " இது 'அறிவு அகந்தை' ( intellectual arrogance) எனக் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும்,

* " தமிழகத்தின் கடன் சுமை ரூ. 6,54,000 கோடியாக உள்ள நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இலவசங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?

* மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே சுயமாக நிறைவேற்றிக்கொள்ளத்தக்க வகையில், அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதை விட்டு, அவர்களைத் தொடர்ந்து அரசாங்கத்திடம் கையேந்த வைத்துக் கொண்டிருக்கிறீர்களே.. ?

* இது ஒட்டுக்காக செய்யப்படும் மலிவான தேர்தல் தந்திரம் மட்டுமல்லாது, இலவச திட்டங்கள் மூலம் ஊழல் செய்வதற்கான வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறீர்கள்...

* இப்படியே போனால், இலங்கை நிலைமைதான் இந்தியாவுக்கு ஏற்படும்..." என்றெல்லாம் பா.ஜ.க தரப்பில் பதிலடி கருத்துகள் பதிவிடப்பட்டன.

'வருங்கால முதல்வர் வேட்பாளர்'

ஆனாலும், "எங்களை இலவசங்களைக் கொடுக்கக்கூடாது எனத் தடுக்க அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் உள்ளதா?" என்றும், "எங்களைவிட நீங்கள் பொருளாதாரத்தில் எதை சாதித்துவிட்டீர்கள்..?" என்று பி.டி.ஆர் எழுப்பிய கேள்வி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களையும் மத்திய அரசுக்கு எதிராக உசுப்பேற்றி உள்ளது.

இவற்றையெல்லாம் குறிப்பிட்டு,

* சமூக வலைதளங்களில் பி.டி.ஆரைக் கொண்டாடும் தி.மு.க-வினர், அவரை தங்கள் கட்சியின் 'வருங்கால முதல்வர் வேட்பாளர்' என்ற என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

'இதென்ன புது தலைவலி..?' என்ற ரீதியில் இந்த விவகாரம், தி.மு.க தலைமையிலும், உதயநிதி ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினரிடையேயும் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

பி.டி. ஆருக்கு எதிரான விமர்சனங்கள்...

அதே சமயம்,

* " ஆங்கில அறிவும் பொருளாதார அறிவும் மட்டுமே ஒரு கட்சியின் தலைவருக்கான தகுதியாகி விடுமா..? களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

* பி.டி.ஆர் போன்ற மேட்டுக்குடி ரகத்தினருக்கு அதெல்லாம் ஒத்து வராது. இவரது கெடுபிடிகளால்தான் அரசு ஊழியர்கள் தி.மு.க ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்.

* மேலும் தேர்தலின்போது அறிவித்த பெண்களுக்கான உரிமைத்தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளாமல் இருக்கிறார். இதை குறிப்பிட்டு அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்புவதால் கட்சிக்கு சங்கடமான நிலை..." என்றெல்லாம் இன்னொரு பிரிவு தி.மு.க ஆதரவாளர்களிடமிருந்தும் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.

ஆர்வக்கோளாறா... கலகத்திற்கான விதையா?

தி.மு.க-வைப் பலவீனபடுத்துவதற்கான அத்தனை வியூகங்களையும் பா.ஜ.க மிகத் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், வரும் நாட்களில் அந்தக் கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகரிக்கும்.

ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் இன்னொரு 10 ஆண்டு காலத்துக்காவது முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் இருப்பார் எனத் திமுக-வினர் நம்புகின்றனர்.

இத்தகைய சூழலில், 'தி.மு.க-வினரிடையே 'அடுத்த முதல்வர் வேட்பாளர் பி.டி.ஆர்' என்ற கருத்து வெளிப்பட்டிருப்பது ஆர்வக்கோளாறா அல்லது இன்னொரு கலகத்திற்கான விதையா என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும்!

இந்த நிலையில், தி.மு.க-வில் தனக்கும் பதவி கேட்டு ஸ்டாலினுடன் மல்லுக்கட்டி, பின்னர் ஓய்ந்து ஒதுங்கி இருந்த அவரது மூத்த சகோதரர் மு.க. அழகிரி, தற்போது ஸ்டாலினைச் சந்திக்க உள்ளாராம். இது தொடர்பாக கழுகார் தரும் லேட்டஸ்ட் அப்டேட்ஸைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

'சமரசம்.. கூட்டுத்தலைமை" - பன்னீர் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் தனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து உற்சாகத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

அதே உற்சாகத்தில், கட்சியில் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக சசிகலா, டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இன்றைய செய்தியாளர் சந்திப்பின் மூலம் அழைப்பு விடுத்தார்.

இதற்கு எடப்பாடி காட்டிய ரியாக்சனை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
நெல்லை கண்ணன்

'தமிழ் மீது தீராப் பற்று... கருணாநிதியை எதிர்த்து போட்டி...'- நெல்லை கண்ணன் நினைவலைகள்

ட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள் என முழங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியப் பேச்சு என்றாலும் சரி, ஆன்மிக மேடை என்றாலும் சரி, இவரது பேச்சுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு...

நெல்லை கண்ணனின் நினைவலைகளை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
சல்மா அல்-ஷெஹாப்

பெண்ணுரிமை ட்வீட்; 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ட்விட்டரில் சமூக ஆர்வலர்களைப் பின்தொடர்ந்து, ட்வீட்செய்த சவுதி பெண்ணுரிமை ஆர்வலருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
வினோத் காம்ப்ளி

"பென்ஷன் போதவில்லை..!"- வினோத் காம்ப்ளி உருக்கமான வேண்டுகோள்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சச்சினின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி, "நான் ஓய்வூதியத்தில்தான் வாழ்ந்துகொண்டு வருகிறேன். எனக்கு ஒரு வேலை வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான காம்ப்ளியின் உருக்கமான பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
இரஞ்சித்

"இளையராஜாவோடு சேர என்ன தடை?" - பா.இரஞ்சித் உடன் ஓர் உரையாடல்

ந்தே படங்களில் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவரின் 'அட்டகத்தி' வெளிவந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

சந்தோஷ் நாராயணனுடன் பிரிவு, இளையராஜாவோடு சேர என்ன தடை எனப் பல விஷயங்களைப் பேசும் பா. இரஞ்சித் உடனான உரையாடலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...