Published:Updated:

'டேட்டா' விற்பனை...சர்ச்சையில் IRCTC - சென்னையில் ஊர் பெருமை ஏன்?- 'ரசகுல்லா சாய்'-|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 19
Listicle
Vikatan Highlights August 19

வணக்கம் வாசகர்களே... வழக்கமான அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று IRCTC - யின் டெண்டர் அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அது எதனால், குஜராத் விவகாரத்தில் நீதித்துறை விமர்சிக்கப்படுவது, சென்னையில் ஊர் பெருமை பேசுவது குறித்த அலசல்... போன்றவை இன்றைய விகடன் ஹைலைட்ஸில்...


1
IRCTC

பயணிகளின் 'டேட்டா' விற்பனைக்கு... சர்ச்சைக்குள்ளான IRCTC டெண்டர்...

ன்றைய தேதிக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையம் தொடங்கி, கூகுள், ஃபேஸ்புக், பயணம், பொழுதுபோக்கு, பணப்பரிமாற்றம், வங்கிப் பயன்பாடு என பல்வேறு சேவைகளுக்காக நம்மை பற்றி பகிரும் தகவல்களுக்கு எந்த ஒரு பிரைவைசியோ அல்லது பாதுகாப்போ இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. நமது மொபைல் எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட மேலும் பல தகவல்களுக்கும் இதே நிலைதான்.

திருடப்படும் 'டேட்டா'க்கள்...

* நம் 'டேட்டா'வை யார் வைத்திருக்கிறார்கள், அதை வைத்து என்ன செய்கிறார்கள், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மக்களிடையே பெரிய அளவில் விழிப்பு உணர்வு இல்லை.

* நாம் ஒரு நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துவதற்காக, அவர்கள் கேட்கும் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், இன்னும் சொல்லப்போனால் வங்கி கணக்கு விவரங்களைக் கூட தருகிறோம்.

* ஆனால், அதை பெறும் நிறுவனங்கள் அத்தகைய டேட்டாக்களை முறையாக கையாள்கின்றனவா, திருடப்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனவா என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்அப் தன்னுடைய தகவல்களை, ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்தபோது எழுந்த சர்ச்சையும், இதன் பின்னணியில் உள்ள பிசினஸ் மோட்டிவ் என்ன என்பதும் அப்போது பெரும் விவாதத்துக்குள்ளானது.

லாபம் பார்க்கும் பெரு நிறுவனங்கள்

சுருக்கமாக சொன்னால், நம்முடைய டேட்டாவை எத்தனையோ பெரு நிறுவனங்கள் பங்குபோட்டுக்கொண்டு லாபம் பார்க்கின்றன என்பதுதான் உண்மை. உதாரணமாக ஒரு வங்கிக்கு லோன் வேண்டும் எனக் கேட்டு நாம் நம்மை பற்றிய தகவல்களைக் கொடுத்தால், லோன் கிடைக்கிறதோ இல்லையோ... அடுத்த சில தினங்களுக்கு ' லோன் வேண்டுமா..?' எனக் கேட்டு ஒரு நாளைக்கு குறைந்தது 10 அழைப்புகளாவது வரும். இதே கதைதான் ஆன்லைன் ஷாப்பிங்கிலும். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு சட்டையை வாங்க வேண்டும் என நாம் தேடி இருந்தால், அடுத்து ஒரு மாதத்துக்கு நாம் பிரவுசிங் செய்யும்போதெல்லாம் ஆடைகள் தொடர்பான விளம்பரங்கள்தான் வரிசையாக அணி வகுக்கும்.

இவற்றையெல்லாம் கண்காணித்துக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு நம் நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் வலுவாக இல்லையா அல்லது அத்தகைய மீறல்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லையா என்பதே இன்னும் பெரும் விவாதமாக நீண்டு கொண்டிருக்கிறது.

சர்ச்சையைக் கிளப்பிய IRCTC டெண்டர்

இத்தகைய சூழ்நிலையில் தான், ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்காக ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்

* பயணிகளின் விவரங்களை, தனியாருடன் பகிர்ந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ள ஐஆர்சிடிசி ( IRCTC) எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், இது தொடர்பான டெண்டர்களைக் கோரியுள்ளது.

* அதாவது பயனாளர்களின் பெயர், வயது, முகவரி, மொபைல் எண் உட்பட அனைத்து விவரங்களையும் தனியாரிடம் விற்று பணமாக்க திட்டமிட்டுள்ளது எனலாம்.

பயனர்களுக்கு என்ன ஆபத்து?

* " இந்த தகவல் பகிர்வின் மூலம், சுமார் 1000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதே இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள குறிக்கோளாகும்" என Internet Freedom Foundation (IFF) எனப்படும் இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

* " இவ்வாறு தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் பயணிகளைப் பற்றிய விவரங்கள், சரக்கு மற்றும் பார்சல் வணிகத்தின் தரவுகள் மற்றும் இந்திய ரயில்வேயின் பயன்பாடுகளிலிருந்து கிடைக்கும் விற்பனையாளர் தொடர்பான எந்த ஒரு தரவுகளையும் படிக்க முடியும்.

இதன் மூலம்,

* வாடிக்கையாளரின் பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல் முகவரி, பயணிகளின் எண்ணிக்கை, பயண வகுப்பு, கட்டண முறை, Login/Password,பணம் செலுத்தும் & முன்பதிவு செய்யும் முறை, ஒரு மாதத்தில் அல்லது வருடடத்தில் எத்தனை முறை பயணிக்கிறார் என்பது போன்ற தரவுகளை விரிவாக ஆய்வு செய்து, ஒவ்வொரு பயனர்களின் தேவைகளை இந்த நிறுவனம் மதிப்பீடு செய்து, அதன் மூலம் பிசினஸ் புரமோஷன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இத்தகவல்கள் வழங்கப்படும்" என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தொல்லை தரும் நோட்டிஃபிகேஷன்கள்...

* உதாரணத்துக்கு நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு ஆன்லைன் உணவகத்தில் ஆர்டர் செய்தீர்கள் என்றால், அடுத்தமுறை நீங்கள் பயணத்திற்கான டிக்கெட் புக் செய்யும்போதோ அல்லது பயணம் செய்யும்போதோ சில ஆன்லைன் உணவகங்களிலிருந்து உங்களுக்கு 'உணவு வேண்டுமா..?' எனக் கேட்டு தொல்லைக் கொடுக்கும் விதமான நோட்டிஃபிகேஷன்கள் வரலாம்.

* அதேபோன்று நீங்கள் இறங்கும் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்வதற்கான 'கேப்' புக்கிங்கிற்கும் நோட்டிஃபிகேஷன்கள் வரலாம்.

'டெல்லி கலவரம்' சொல்லும் பாடம்

இவை தவிர, கடந்த காலங்களில் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு சில மாநிலங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக பேசுவது, மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

* மேலும் 2020 ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் VAHAN டேட்டாபேஸில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரையும், அவர்களது சொத்துகளையும் குறிவைத்து தாக்க பயன்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய சூழலில், IRCTC பகிரும் பயணிகளின் தரவுகள் பத்திரமாக இருக்குமா...? அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதா..? பிரைவசி பாதிக்கப்படாதா என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மத்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது..?

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கசிந்துள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிரவைக்கும் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
நீதித்துறை

குஜராத்: "11 குற்றவாளிகள் விடுதலைக்காக விமர்சிக்க வேண்டாம்!" - நீதிபதி 

டந்த 2002-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 11 குற்றவாளிகளை, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. அரசின் இந்த முடிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், விடுதலையான 11 பேரை ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கூடவே நீதிமன்றத்துக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இத்தகைய சூழலில் நீதித்துறையை விமர்சிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள நீதிபதி யார், விடுதலைக்கான காரணமாக அவர் சொல்லி இருக்கும் விளக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கேரள சவாரி திட்டம்

ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ்: 321 ஆட்டோ, 228 கார், 22 பெண் டிரைவர்கள்... அசத்தும் கேரளா அரசு!

ந்தியாவில் முதன் முறையாக ஒரு மாநில அரசே நேரடியாக நடத்தும் ஆன்லைன் டாக்ஸி சேவை திட்டம் கேரளாவில் தொடங்கி வைக்கப்படுள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆன்லைன் டாக்ஸி சேவையில் பெருமளவு கோலோச்சுகின்றன. இந்த நிலையில் கேரளா அரசு சார்பில் ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ் தொடக்க விழா திருவனந்தபுரம் கனகக்குந்நு கொட்டார வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதற்கு மக்களிடம் பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கேரள அரசின் இந்த ஆன்லைன் டாக்ஸி சேவை தொடர்பான விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
சென்னை சென்ட்ரல்

பிழைக்க வைத்தது சென்னை; பேசுவது ஊர்ப்பெருமை... ஏன்? - #MadrasDay2022

சென்னை ஒருவகையில அமெரிக்கா மாதிரி... அமெரிக்காவில் பிழைக்க வராத நாட்டினரே இல்லைன்னு சொல்வாங்க.

அவங்கவங்க அறிவுக்குத்தக்க, உழைப்புக்குத்தக்க, சென்னை எல்லாருக்கும் படி அளந்துகிட்டேதான் இருக்கு. ஆனாலும், சாப்பிட்டுக்கொண்டிருக்கிற தட்டை எட்டி உதைக்கிற குழந்தைகளின் அறியாமையாக வாழவைக்கும் சென்னையைக் குறைத்து விமர்சிப்பதுதான் ஆகப் பெரும் வேதனை...

இது குறித்த விரிவான அலசல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
Tea

டிரெண்டாகி வரும் 'ரசகுல்லா சாய்'... காம்பினேஷனே இடிக்குதே!

வெவ்வேறு சுவைகளில் உள்ள உணவுகளை ஒன்றாகக் கலந்து சில உணவுகள் தயாரிக்கப்படும். அப்படித் தயாரிக்கப்படும் உணவுகளின் சுவை நம்முடைய நாடி நரம்புகளைக் கட்டிப்போட்டு விடும். ஆனால் சிலவற்றின் சுவை, `தேனில் ஊறவைத்த மசால் வடை போல' மாறிவிடும். அப்படி ஒரு வித்தியாசமான கலவை தான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது வேறெதுவும் இல்லை... ரசகுல்லா 'டீ' தான். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங்

“ஒரே படத்தில் 40 ப்ளாஷ்பேக்!”

டந்த 2013-ம் ஆண்டு வெளியான பல படங்களில் 'விடியும் முன்' கூடுதல் கவனம் பெற்றது. அதன்பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து, இப்போது 'கொலை' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலாஜி குமார்.

" எல்லோரும் சாதாரணமா 'கொலை'ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துறோம். ஆனா..."

இயக்குநர் பாலாஜி குமாரின் விரிவான பகிர்தலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...