Published:Updated:

'ஸ்டாலினால் முடியும்..ராகுலால் முடியாதா?'-அர்ச்சகர் தீர்ப்பு- ஒதுக்கப்பட்டசிரஞ்சீவி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 22
Listicle
Vikatan Highlights August 22

வணக்கம் வாசகர்களே... காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டதால் அக்கட்சியில் காணப்படும் குழப்பம், காங்கிரஸ் மூத்த தலைவர்களின் மனவோட்டம், எடப்பாடி பழனிசாமிக்கு தற்போதுள்ள ஆப்ஷன்கள், சுய தொழிலுக்கான அரசு உதவி உள்பட பல செய்திகள் இன்றைய விகடன் ஹைலைட்ஸில்...


1
ராகுல் காந்தி

'ஸ்டாலினால் முடியும்போது ராகுல் காந்தியால் ஏன் முடிவதில்லை..?'

காங்கிரஸ் கட்சி ஒரு நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. தலைவர் பதவியை தானோ அல்லது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ ஏற்கப்போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறிவிட்டார். அப்படி ஒரு வேளை சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றால், அவரால் கட்சிக்குப் புத்துயிர் அளிக்க முடியுமா அல்லது இருப்பதையும் இழந்துவிடுமா என்ற விவாதம் அக்கட்சியினரிடையே மிகத் தீவிரமாக எழுந்துள்ளது.

தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுப்பது ஏன்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக தொடங்கி இருக்கின்றன.

* இந்த நிலையில், கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க மறுப்பதால், பிரியங்கா காந்தியை கட்சித் தலைமையை ஏற்க கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வற்புறுத்திய நிலையில், அதற்கும் தடை போட்டுவிட்டார் ராகுல் காந்தி.

* பாஜக-வும் மோடியும் தொடர்ந்து காங்கிரஸ் மீது வைக்கும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டும், ராகுல் காந்தியின் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

தலைமை பதவிக்கு வேறு யார்?

இந்த நிலையில், கட்சித் தலைவர் பதவிக்கு

* ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், மீரா குமார், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், நாடு முழுவதும் கட்சி கலகலத்துப்போய் உள்ள தற்போதைய சூழ்நிலையில், இவர்களில் யார் பதவிக்கு வந்தாலும் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டு வருவது என்பது மிகச் சவாலான காரியமாகத்தான் இருக்கும்.

கட்சியின் தற்போதைய நிலைமை

தற்போதைய நாடாளுமன்றத்தில்,

* மக்களவையில் இடம்பெற்றுள்ள பாஜக எம்.பி-க்களில் 30-க்கும் அதிகமானோர் முன்னாள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

* கடந்த 2105 ல் தொடங்கி இதுவரை நாடு முழுவதும் சுமார் 130-க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக பக்கம் தாவி உள்ளனர்.

இது குறித்துப் பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், " 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது வீசிய மோடி அலையினால் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

காங்கிரஸ் செய்த தவறுகள்...

* 2014 தேர்தலுக்கு முன்னதாக, மோடியைக் குறைத்து மதிப்பிட்டது காங்கிரஸ் தலைமை.

* மோடிக்கு ஆதரவாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்ததைச் சரியாக உணரத்தவறியது.

* ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து அண்ணா ஹசாரே போன்றவர்களை முன்னிறுத்தி பாஜக மேற்கொண்ட தந்திரமான பிரசாரங்களின் பின்னால் உள்ள சூட்சுமங்களை முன்கூட்டியே அறியாமல்போனதும்தான் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் சறுக்கலாக அமைந்தன.

தாமதமான புரிதல்...

* இன்றும் பங்குச் சந்தை ஊழல், 5ஜி ஏலம் ஊழல் எனக் குற்றச்சாட்டுகள் கிளம்பத்தான் செய்கின்றன. ஆனால் இப்போது அண்ணா ஹசாரேக்கள் எங்கே என்ற கேள்வி எழுந்தபோதுதான், அண்ணா ஹசாரேவின் பின்னாலும் பாஜக இருந்ததை காங்கிரஸ் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டது.

* அதேபோன்றுதான் 2014 தேர்தலில், பெரிய அளவில் பேசப்பட்ட மோடியின்' குஜராத் மாடல்' பிம்பம் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதை 2014 லிலேயே காங்கிரஸ் அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், செய்யத்தவறிவிட்டது.

வாரிசு அரசியல் குற்றச்சாட்டு எடுபடுகிறதா?

மேலும், " மோடி முன்வைக்கும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டெல்லாம் ஒன்றுமே இல்லை. அப்படி வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்,

* ஒடிசாவில் நவீன் பட்நாயக் எப்படி தொடர்ந்து அம்மாநிலத்தின் முதலமைச்சராக நீடிக்கிறார்..?

* உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பீகாரில் தேஜஸ்வி யாதவ் போன்றவர்களெல்லாம் எப்படி இப்போதும் பாஜக-வுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..?

* பீகாரில் ஆட்சி மாற்றத்தையே நடத்திக் காட்டிவிட்டார் தேஜஸ்வி யாதவ்.

* ஆந்திராவில் ஏறக்குறைய 10 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி.

* அதேபோன்று தமிழகத்தில் 10 ஆண்டுக்காலம் திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையில், மிகச் சோதனையான நாட்களை எதிர்கொண்டு, ஆட்சியைப் பிடித்துக் காண்பித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ராகுல் காந்தியால் ஏன் முடியாது..?

இவர்களாலெல்லாம் முடிகிற விஷயம் ஏன் ராகுல் காந்தியால் முடிவதில்லை.

* காரணம் அவர் தொடர்ந்து களத்தில் இருப்பதில்லை.

* இவர்களை விடுங்கள்... ராகுல் காந்தியின் குடும்பத்திலேயே அவரது தந்தை ராஜீவ் காந்தி, ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

* அவ்வப்போது ராஜீவ் காந்தி ஏழைகளின் குடிசை வீட்டிற்குச் சென்று வந்ததெல்லாம் அப்போது மீடியாவில் ஒருபுறம் கேலி கிண்டல்களுக்கு உள்ளானாலும், மக்களுடனான அவரது தொடர்பையும் கட்சியையும் உயிர்ப்புடனும் வைத்திருக்க அது உதவியது" என்று சொல்லும் அவர்கள்,

* நம்பிக்கையுடன் உழைத்தால் நிச்சயம் காங்கிரஸ் தனது இழந்த பெருமையைப் பெற முடியும் என்பதோடு, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடியும்"என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

ஜி-23 தலைவர்கள் நினைப்பது என்ன?

அதே சமயம், " 1990 களில் இருந்த நிலைமை வேறு. இப்போது நிலைமை வேறு. சோனியா காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் கட்சித் தலைமைக்குத்தான் வரட்டுமே. என்னதான் நடக்கிறது எனப் பார்ப்போம். சரிப்பட்டு வராவிட்டால், அப்போதைய நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளலாம்" என்கிறார்கள் சோனியா குடும்பத்தலைமைக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய ஜி-23 தலைவர்கள்..!

மொத்தத்தில், கட்சித் தலைமையைத் தீர்மானிக்கப்போகிற வரப்போகும் இந்த 10 தினங்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலையெழுத்தைத் தீர்மானிப்பதாக அமையும்!

காங்கிரஸ் கட்சியின் நிலைமை இதுவென்றால், அ.தி.மு.க-வும் அதேபோன்றதொரு தலைமை பிரச்னையில்தான் சிக்கித் தவித்து வருகிறது. இப்போதைக்கு நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் ஓ.பி.எஸ் கை ஓங்கி உள்ள நிலையில், எடப்பாடியிடம் எஞ்சியுள்ள ஆப்ஷன்கள் என்னென்ன என்பதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
அர்ச்சகர் நியமனம்

'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்' வழக்கில் அதிரடித் தீர்ப்பு!

மிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 - ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரங்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
யுபிஐ ( UPI )

யு.பி.ஐ சேவைக்கு கட்டணமா..? நிதி அமைச்சகம் விளக்கம்

வ்வொரு யு.பி.ஐ பண பரிவர்த்தைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பங்குதாரர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக வெளியான செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதனைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


4
சிறுதொழில் நிறுவனங்கள் ( vikatan )

சிறுதொழில் தொடங்க ஆர்வமா..? - உதவக் காத்திருக்கும் அரசு!

சொந்தமாக சிறு தொழில் நிறுவனம் தொடங்க பலருக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதை ஆரம்பிப்பது எப்படி, எங்கு பதிவு செய்வது, எப்படி நிதி உதவி பெறுவது என்கிற பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்து, உங்கள் தொழில் கனவை நிஜமாக்க முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கலாம்.

இப்படித் தடுமாறி நிற்பவர்களுக்கு உதவுவதற்காகவே எட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. இது குறித்த முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
பிரீமியர் லீக் - Premier League ( Marc Atkins )

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, இது புது பிரீமியர் லீக் பாஸ்!

பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது கேம் வீக் பல அதிர்ச்சிகரமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, நியூகாசிள் யுனைடட் அணியுடன் டிரா செய்தது.

பிரீமியர் லீக் தொடர் குறித்த விரிவான அலசல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
சிரஞ்சீவி ( Vikatan Archives )

ஓரமாக நிற்கச் சொன்ன ஏற்பாட்டாளர்கள்... என்ன செய்தார் சிரஞ்சீவி?

சினிமாவில் சேர நினைத்த சிரஞ்சீவியிடம் அவரது தந்தை "சினிமா வேண்டாம்!" என்று கண்டிப்போடு சொல்லி, 'காஸ்ட் அக்கௌண்டன்ஸி' படிக்க சென்னைக்கு ரயிலேற்றினார்...

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! - "டெல்லியில் என்னை ஒதுக்கினார்கள் - சிரஞ்சீவி என்ற தலைப்பில் 27.09.1992 தேதியில் ஆனந்த விகடன் இதழில் வெளியான பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...