Published:Updated:

IT துறையில் வேலை இழப்பு ஏற்படுமா?-IFS மோசடியில் போலீஸார்'கிலி' ஏன்?MGR தனிச்சிறப்பு|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 23
Listicle
Vikatan Highlights August 23

வணக்கம் வாசகர்களே... அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், US Federal Reserve வங்கியின் வட்டி உயர்வு இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, ஐடி துறையில் எத்தகைய பாதிப்பு ஏற்படும், திமுக-மீது உச்சநீதிமன்றம் கோபம் ஏன் என்பது உள்பட பல செய்திகள் இன்றைய விகடன் ஹைலைட்ஸில்...


1
ஐடி துறை

அமெரிக்க பணவீக்கம்: ஐடி துறையில் வேலை இழப்பு ஏற்படுமா?

டந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடையும் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி இந்தியாவுக்கு சவாலான சூழலை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் இந்தியாவுக்கு மேலும் சிக்கலைக் கொண்டு வந்துள்ளது.

ஏற்றுமதி பாதிப்புகளோடு, இந்திய இளைஞர்களுக்கு கணிசமான வேலை வாய்ப்பை அளிக்கும் ஐடி துறையும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருப்பது, அந்தத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சரிந்த சரக்கு ஏற்றுமதி

* கடந்த 2021 -22 நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதியாண்டில் காணப்பட்ட 330 பில்லியன் டாலரைக் காட்டிலும் கூடுதலாக, 422 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது.

* இதன் அடிப்படையில், 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.

* ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் சரக்கு ஏற்றுமதிகள், முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

* இதனால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியுமா என்ற கேள்விக்குறியான நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் & பாதிப்புகள்

* உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, ஏற்றுமதி - இறக்குமதி விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான சீர்குலைவு மற்றும் சீனாவில் ஏற்பட்ட மந்தநிலை போன்றவை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது.

* இந்த நிலையில், இந்திய ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள இந்த மந்த நிலை, இந்தியாவின் உற்பத்தித் துறையின் செயல்திறனை வெகுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக 2022 -ம் நிதியாண்டில் நல்ல வளர்ச்சியைக் கண்ட இந்திய உற்பத்தித் துறையானது, 2023 -ம் நிதியாண்டில், வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்படும் சரிவால் பாதிக்கப்படும் என்று இந்த வாரத்துக்கான இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும்

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளாக திகழ்பவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்தான். இந்த நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி, அந்த நாட்டின் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 1981 ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னர், 2022 ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 9.1 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, இயற்கை சீற்றம் காரணமாக அதிகரித்த உணவுப் பொருட்களின் விலை மற்றும் கோவிட்டினால் ஏற்பட்ட விநியோக பாதிப்பு போன்றவையே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவையொட்டி, இந்திய ரிசர்வ வங்கியும் தனது வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும். இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும்.

ஐடி துறையில் வேலை இழப்பு ஏற்படுமா?

இதுவும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும் சேர்ந்து இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும்.

* இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியில் 18 சதவீதமும், ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த ஏற்றுமதியில் 60 சதவீதமும் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்தே உள்ளன.

* இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ஜிடிபி வளர்ச்சியில் 50 சதவீத பங்களிப்பது சேவை துறைகள்தான்.

இந்த நிலையில், அந்த சேவை சார்ந்த ஏற்றுமதி பாதிப்படும்போது, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாது,

* கடந்த 2009 ல் ஐடி துறையில் காணப்பட்ட ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மூடல், வேலை இழப்பு போன்ற அபாயம் ஏற்படலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே சமயம் இந்திய ஐடி துறையின் பிரதிநிதியாக விளங்கும் 'நாஸ்காம்' தரப்பிலிருந்து இன்னும் இது குறித்த அதிகாரபூரவ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரச் சீரழிவுக்கு அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளும் முக்கிய காரணம் என, அதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்பட்டபோது, திமுக-வை மிகக்கடுமையாக சாடியது உச்ச நீதிமன்றம். இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
ஜெயலலிதா

முடிவுக்கு வருகிறதா ஜெயலலிதா மரண வழக்கு?!

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கட்சிக்குள் பிளவுக்கும் வழிவகுத்தது. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது’ எனப் பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி ஆணையம் 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் ஆமை வேகத்திலேயே செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

ஐ.எஃப்.எஸ் மோசடி:  அரசியல்வாதிகள், போலீஸாருக்கு 'கிலி' ஏன்?

சுமார் ரூ.50,000 கோடியுடன் தலைமறைவாகியிருக்கும் ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் தப்பித்து ஓடும் வரை பொறுமையாக இருந்துவிட்டு, தற்சமயம் `தேடுகிறோம்’ என்ற பெயரில் `பாவலா’ காட்டிக்கொண்டிருக்கிறது தமிழக காவல்துறையின் ஓர் அங்கமான பொருளாதாரக் குற்றப்பிரிவு. ஜூனியர் விகடன், நாணயம் விகடன் இதழ்களில் ஜூலை மாத தொடக்கத்திலிருந்தே ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்த கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவு அதிகாரிகள், ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, செபி போன்ற மத்திய அரசின் அமைப்புகளையும், தமிழக அரசையும் உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்கக்கூடும் எனத் தெரிகிறது.

இதனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கிலியில் உள்ளனர். இது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...


4
அமித் ஷா ( ட்விட்டர் )

பாஜக-வில் இணைகிறாரா ஜூனியர் NTR... அமித் ஷாவுடனான சந்திப்பின் பின்னணி என்ன?

ந்திரா, தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு. கடந்த ஞாயிறன்று தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமித் ஷாவைச் சந்தித்தார் ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் தனியாகப் பேசிக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. `

இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...


5
M.G.Ramachandran ( Vikatan Archives )

எம்.ஜி.ஆரின் தனிச் சிறப்பே இதுதான்!

ம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் நாள்தோறும் ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

“நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்…” என்ற தலைப்பில் 1988 ல் விகடனில் வெளியான இக்கட்டுரையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...