Published:Updated:

Supreme Court நீதிபதிகளுக்கான ஓய்வு சலுகைகள்-வேலுமணிக்கு 'செக்'-ஒரு MLA-க்கு 20கோடி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 24
Listicle
Vikatan Highlights August 24

வணக்கம் வாசகர்களே... இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் உச்சம் தொட்டுள்ள நிலையில், ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சலுகைகள் தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை, ஆம் ஆத்மி MLA-க்களை இழுக்க ரூ. 20 கோடி பேரம் என்ற குற்றச்சாட்டு உள்பட பல செய்திகள் இன்றைய விகடன் ஹைலைட்ஸில்...


1
உச்ச நீதிமன்றம்

இலவச பங்களா... செக்யூரிட்டி, உதவியாளர்... உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு சலுகைகள் அறிவிப்பு!

த்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக பல்வேறு திருத்தங்கள் செய்து புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வு பெற்ற பின்னர் ஓராண்டுக்கு இலவச பங்களா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா

* உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வருகிற 26-ம் தேதியுடன் முடிவடைகிறது.

* உச்ச நீதிமன்றத்தின் 48- வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரமணா ஓராண்டு , நான்கு மாதங்களுடன்பணி ஓய்வு பெற உள்ளார்.

* இவரது பதவிக் காலத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து இவர் தெரிவித்த கருத்துகள் மற்றும் வழங்கிய தீர்ப்புகள் பாராட்டுகளையும் பெற்றுள்ளது, விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.

திமுக மீது விமர்சனம்

நேற்றைய தினம் கூட, அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதைத் தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தமது தரப்பு வாதத்தை வைக்க முன்வந்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "இந்த வழக்கில் நீங்கள் ஆதரவாக களமிறங்கும் திமுக மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டியுள்ளது. பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்" என்று மிக காட்டமாக கூறிய கருத்து மிகவும் பரபரப்பானது.

இலவசங்கள் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் அண்மையில் தெரிவித்த கருத்து பல்வேறு விவாதங்களைக் கிளப்பிய நிலையில், அதை குறிப்பிட்டே நீதிபதி ரமணா இவ்வாறு விமர்சித்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த விமர்சனம் திமுக-வுக்கு வைக்கப்பட்ட 'குட்டு' என பாஜக-வினர் விமர்சித்த நிலையில், அதற்கு எதிரான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான சலுகைகள்

இத்தகைய பரபரப்பான நிகழ்வுகளுக்கிடையே, வரும் 26-ம் தேதி நீதிபதி ரமணா ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு அடுத்தபடியாக புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பொறுப்பேற்க உள்ளார். அவரும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பொறுப்பில் இருப்பார்.

இத்தகைய சூழ்நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்து புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

* புதிய விதிகளின்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நாளில் இருந்து, அவருக்கு 6 மாத காலத்துக்கு டெல்லியில், வாடகை எதுவும் இல்லாத Type - VII இலவச பங்களா ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி,

* உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியருக்கு நிகரான டிரைவரையும், ஒரு உதவி செயலாளரையும் ஓராண்டு காலத்துக்கு பணியமர்த்திக் கொள்ளலாம்.

* இவர்களுக்கான ஊதியம், உச்ச நீதிமன்றத்தில் அதே ரேங்கில் பணியாற்றும் ஊழியருக்கு நிகரானதாக இருக்கும்.

* இது தவிர, ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, ஓராண்டு காலத்துக்கு பாதுகாப்புக்காக 24 மணி நேர செக்யூரிட்டி கார்டு மற்றும் வீட்டில் பாதுகாப்பு வசதி வழங்கப்படும்.

* மேலும் விமான நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் ஓய்வறைகளில் முன்னுரிமை மரியாதை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீண்ட நாட்கள் கோரிக்கை...'

இந்த திருத்தங்கள் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்திடமிருந்து வந்த இந்த கோரிக்கைகள் நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்தன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரமணா பொறுப்பேற்ற பின்னர் சட்ட அமைச்சகத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்ததார். அதனைத் தொடர்ந்தே பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு நேற்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தன.

கேட்டதும்... கிடைத்ததும்...

முன்னதாக உச்ச நீதிமன்றத்திடமிருந்து சட்ட அமைச்சகத்துக்கு வந்த கோரிக்கையில்,

* டிரைவர் மற்றும் உதவி செயலாளர் வசதி நீதிபதிகளின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டு காலத்துக்கு மட்டுமே அந்த வசதிகள் தற்போது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், டிரைவரும் உதவியாளர் வசதி, நீதிபதியின் மரணத்துக்குப் பின்னர் அவரது வாழ்க்கைத்துணைக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

* அதேபோன்று வாடகை இல்லா பங்களா வசதி ஓய்வுக்குப் பின்னர் மூன்றாண்டுகளுக்குக் கேட்கப்பட்டிருந்தது. அதுவும் 6 மாத காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இலவசங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் தற்போதைய சூழலில், நீதிபதிகளுக்கான சலுகைகள் தொடர்பாக வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் இன்னொரு விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், இலவசங்கள் தேவையா, இல்லையா என்கிற விவாதம் நாடு தழுவிய அளவில் உச்சம் தொட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கொன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதும், இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியிருப்பதுமே இந்தப் பிரச்னையின் அடிப்படை.

இலவசத் திட்டங்களை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் சொல்வது என்ன என்பது குறித்த விரிவான தகவல்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


2
வேலுமணி

முதல்வரிடம் ஸ்மார்ட் சிட்டி விசாரணை அறிக்கை... வேலுமணிக்கு செக்?!

மிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளில் முறைகேடுகள் அரங்கேறினவா என்பது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் கமிஷனை மார்ச் மாதம் அமைத்தார் ஸ்டாலின். 11 நகரங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுசெய்த டேவிதார், தனது அறிக்கையைக் கடந்த 20-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பவை குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தால், ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கியிருக்கும் வேலுமணிக்கு, இந்த கமிஷன் அறிக்கை மேலும் தலைவலியைக் கொடுக்கும் என்கிறார்கள். இது குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி

"ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.20 கோடி பேரம்; ஷிண்டேவாக மாற்ற பாஜக முயற்சி!" - குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருக்கிறது. அவர் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 5 பேர் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது மணீஷ் சிசோடியாவை ஏக்நாத் ஷிண்டேவாக மாற்ற பா.ஜ.க முயற்சி செய்வதாக அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கிசுகிசு

ஆளும் தரப்புக்கு நூல்விடும் மாஜி... பணிவானவரின் 'எரிச்சல்'

சின்ன தலைவிக்கு நிழலாக இருக்கும் விவேகமான வாரிசு, பிரகாச சேனலை மிஞ்சி இசைத்துறையின் ஜாம்பவானைத் தங்கள் சேனல் பக்கம் இழுத்து வந்தார். நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் பார்த்து வியந்துபோன சின்ன தலைவி, விவேகமான வாரிசுக்குக் கூடுதல் பொறுப்புகளை....

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள பல அரசியல் சீக்ரெட்ஸ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
தமன்னா

மிஸ்டர் மியாவ்: பிரகாச நடிகரின் மனைவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

புயல் காமெடி நடிகரை ஹீரோவாக்கி, படம் தயாரிக்கும் ஈழத்து நிறுவனம் படாதபாடுபடுகிறதாம்.

அசுர நடிகரின் சமீபத்திய படம் நற்கவனம் பெற்றதில் அவரைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. ஆனால், நடிகருக்கு மட்டும் கொஞ்சம்கூட நிம்மதி இல்லையாம். காரணம்...

மிஸ்டர் மியாவ் தரும் சுவாரஸ்யமான சினிமா தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...