Published:Updated:

'ஆம் ஆத்மி' அலறல் பின்னணி-காவல்துறைக்கு என்னாச்சு?-Whats app பிரைவசி-விஜயகாந்த் கதை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 25
Listicle
Vikatan Highlights August 25

வணக்கம் வாசர்களே.. ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டால் பரபரத்துக் கிடக்கிறது டெல்லி மாநில அரசியல்... இதன் பின்னணி, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை, கழுகார் அப்டேட்ஸ், திருச்சிற்றம்பலம் விமர்சனம் உள்பட பல செய்திகள் இன்றைய விகடன் ஹைலைட்ஸில்...


1
அரவிந்த் கெஜ்ரிவால்

மோடியைச் சீண்டிய கெஜ்ரிவால்... 'ஆபரேஷன் லோட்டஸ்' பின்னணி காரணங்கள்..!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில், கலால் கொள்கை ஊழல் தொடர்பாக அண்மையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோதே, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான ' ஆபரேஷன் லோட்டஸை' பாஜக கையில் எடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரம் பரபரத்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கட்சியை உடைத்துவிட்டு வெளியேறினால் தனக்கு எதிரான வழக்குகளை கைவிடுவதாக பாஜக, தன்னிடம் பேரம் பேசியதாக சிசோடியா குற்றம் சாட்டினார். ஆனால், அவரது இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்தது.

'40 எம்.எல்.ஏ-க்களை இழுக்க திட்டம்'

இந்த நிலையில், அடுத்த அதிரடியாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க தங்கள் கட்சியைச் சேர்ந்த

* 40 எம்.எல்.ஏ-க்களை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ஒரு எம்.எல்.ஏ-க்கு 20 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் ,

* பாஜக-வின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிப்பது குறித்து விவாதிப்பதற்கான தனது இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.எ-க்களின் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார் கெஜ்ரிவால்.

* 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில், அந்தக் கட்சிக்கு மொத்தம் 62 எம்.எல்.ஏ-க்கள் உள்ள நிலையில், அவர்களில் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று காலையிலிருந்து தகவல்கள் பரபரத்தன.

* இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு தற்காலிக நிம்மதியைக் கொடுக்கும் விதமாக அவர் இன்று கூட்டிய கூட்டத்தில் 53 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இருப்பினும் பாஜக-வின் ஆபரேஷனில், இவர்கள் வீழ்ந்துவிடாமல் கடைசி வரை தன்னுடன் உறுதியாக இருப்பார்களா என்ற சந்தேகம் கெஜ்ரிவாலுக்குமே இருக்கிறது. இதனால் அவர் ஏக டென்ஷனில் இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைக்கும் ஆயுதம்

* பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைக்க பாஜக கையில் எடுக்கும் ஆயுதம் பொருளாதார குற்றங்கள்தான்.

* மேற்குவங்கத்தில் பாஜக-வுக்கு கடுமையாக போட்டியைக் கொடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இதே ட்ரீட்மென்ட்தான் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கட்சியின் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் உட்பட பலர் ஊழல் வழக்கில் கைதாகினர்.

* பொதுவாக எல்லா கட்சிகளிலுமே கடந்த காலம் அல்லது தற்போதைய பதவிக் காலத்தில் ஏதாவது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் கணிசமானோர் உள்ளனர்.

* அப்படியானவர்கள் யார் யார் என்பதை மத்திய அரசின் கண்ணசைவில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் கண்காணித்து தகவல்களைத் திரட்டுகின்றன. ஆபரேஷனுக்கான உத்தரவு வந்ததும் அதிரடி ரெய்டுகள் ஆரம்பமாகின்றன.

மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் இதே உத்திதான்

மகாராஷ்டிராவிலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முன்னர்,

* சிவசேனா எம்.எல். ஏ-க்கள் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் வந்து கைது செய்யப்பட்டனர்.

* அதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான நவாப் மாலிக், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டார்.

* மேலும் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சஞ்சய் ராவத்தும்மும்பை குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கூறப்பட்ட புகாரில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

* கர்நாடகாவிலும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி புள்ளிகள் இப்படித்தான் கைதாகினர்.

' ஆபரேஷன் லோட்டஸ்ஸின்' மூன்று உத்திகள்...

இந்த நிலையில், தற்போது பாஜக-வின் ஆபரேஷனில் தற்போது டெல்லி குறிவைக்கப்பட்டுள்ளது. 'இத்தகைய

* ரெய்டு மூலம் சம்பந்தப்பட்ட கட்சிக்கு முதலில் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது,

* பின்னர் ஊழல் முத்திரைக் குத்தி கட்சியின் இமேஜை காலி செய்வது,

* அதைத் தொடர்ந்து கைது செய்து மீடியாக்களில் பரபரப்பாக பேசவைப்பது ஆகிய மூன்று உத்திகள்தான் ' ஆபரேஷன் லோட்டஸ்ஸின்' மையமாக உள்ளது.

ஆம் ஆத்மி குறிவைக்கப்பட்டது ஏன்?

பாஜக-வைப் பொறுத்தவரை கெஜ்ரிவால் அரசை இத்தன நாட்களும் வெகுவாக கண்டுகொள்ளாமல்தான் இருந்தது. ஆனால்,

* என்றைக்கு டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்ததோ அப்போதே பாஜக உஷாராகிவிட்டது.

* அதற்கேற்ப கெஜ்ரிவாலும் பஞ்சாப் மட்டுமல்லாது கோவா சட்டசபை தேர்தலில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கும் பல்வேறு இலவச திட்டங்கள், வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினார்.

இதுதான் டெல்லி மேலிடத்தை சீற்றம் கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது. குஜராத்தில் ஆட்சியை இழந்தால், அது தங்களுக்கான மிகப் பெரிய அவமானகரமான விஷயம் என்பதாலேயே, மோடி - அமித் ஷா கூட்டணி ' ஆபரேஷன் லோட்டஸை' கையில் எடுத்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, "ஆம் ஆத்மியை வீழ்த்த ரூ.800 கோடிக்கு 40 எம்எல்ஏ-க்களை இழுக்க முயற்சி" என பாஜக-மீது கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பான் விரிவான செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
தமிழ்நாடு காவல்துறை

சட்டம்-ஒழுங்கை பேணுவதில் கோட்டை விடுகிறதா காவல்துறை?!

டந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கொடூரக் கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ``மக்களை பாதுகாக்கவேண்டிய காவலர்களுக்கே உரியப் பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு காவல்துறை?" என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

சட்டம்-ஒழுங்கை பேணுவதில் கோட்டை விடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?! இது தொடர்பான விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: செல்லூர் ராஜூவின் அமைதி முதல் பாஜக நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம் வரை!

ப்போதும் 'எகிடு தகிடாகப்' பேசும் செல்லூர் ராஜூவோ சமீப நாள்களாக வார்த்தைகளை அளந்து பேசுகிறார். ஓ.பி.எஸ்-ஸை ஒரு வார்த்தைகூட விமர்சித்துப் பேசவில்லை. இது எடப்பாடி தரப்புக்கு...

கழுகார் தரும் மேலும் விறுவிறுப்பான அரசியல் அப்டேட்ஸ்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
விஜயகாந்த்

களத்துக்கு வந்த புரட்சி நாயகன்... நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த கதை!

ளுமைமிக்க தலைகள் யாருமில்லாத, தமிழக அரசியல் மைதானத்தில், ஆளாளுக்கு ஸ்கோர் செய்ய நினைக்க, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் இருக்கும்போதே களத்தில் இறங்கி அடித்து ஆடியவர் நடிகர் விஜயகாந்த்.

2000-ம் ஆண்டிலேயே, தன் மன்றத்துக்கென, தனிக்கொடியை உருவாக்கிய விஜயகாந்த், முழுமையாக அரசியலுக்கு வந்த கதையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

மீபத்தில்தான் UPI மூலம் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பும் சேவையும் வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்டது. இப்படி அவ்வப்போது அப்டேட்ஸ் கொடுப்பதால்தான் போட்டிகள் பல இருந்தாலும் இன்றும் ராஜாவாக இருக்கிறது வாட்ஸ்அப். அப்படி சில சுவாரஸ்யமான புதிய அப்டேட்கள் இந்த மாதம் வாட்ஸ்அப்புக்கு வருகின்றன.

இது குறித்த விவரங்களை விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
தனுஷ்

சினிமா விமர்சனம்: திருச்சிற்றம்பலம்

மிழ் சினிமாவில் எப்போதாவது தான் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்ந்தார்போல் ஒரு ஜனரஞ்சகப் படம் வெளியாகும். அப்படியொரு நெகிழ்ச்சி அனுபவம்தான் 'திருச்சிற்றம்பலம்'.

தனுஷ் நம்மை சிரிக்கவும் நெகிழவும் ரசிக்கவும் வைக்கிறார். பால்யத்தில் ஆண்கள் பேசத் தயங்கிய க்ரஷின் உயிராய் உலவுகிறார்...

முழுமையான விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...