Published:Updated:

கருணாநிதி அரசியல்: ஸ்டாலின் தயங்குவது ஏன்?- ஜெ.தீபா வேதனை ஏன்?- சாவர்க்கர் சர்ச்சை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 29
Listicle
Vikatan Highlights August 29

கருணாநிதி அரசியல்: ஸ்டாலின் தயங்குவது ஏன்?- ஜெ.தீபா வேதனை ஏன்?- சாவர்க்கர் சர்ச்சை|விகடன் ஹைலைட்ஸ்


1
கருணாநிதி, ஸ்டாலின்

கருணாநிதி பாணி அரசியல்: ஸ்டாலின் தயங்குவது ஏன்?

முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி தனது தந்தை கருணாநிதி குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! " எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டுள்ளபடி, கருணாநிதி அமைத்த படியில்தான் ஸ்டாலின் ஏறுகிறாரா..?

கருணாநிதி நிழலில் வளர்ந்த ஸ்டாலின்...

* 1977 ல் எம்.ஜி. ஆரிடம் ஆட்சியை இழந்து 1989 ல் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை ஏறக்குறைய சுமார் 13 ஆண்டுக் காலம் ஆட்சியில் இல்லாத சூழ்நிலையிலும், கட்சியைக் கட்டுக்கோப்புடன் வழி நடத்தியவர் கருணாநிதி.

* அதற்கு அவர் அண்ணா, பெரியாரிடம் பயின்ற அரசியலும், இயல்பாகவே இருந்த எழுத்தாற்றல் பேச்சாற்றல், ஏற்கெனவே வகித்த முதல்வர் பதவியின் அனுபவம் போன்றவை அவருக்குப் பெரிய பலமாக அமைந்தது.

* ஆனால், மு.க. ஸ்டாலினின் அரசியல் என்பது கருணாநிதியையொட்டியே அமைந்தது.

* மிசா காலத்து சிறை அனுபவம், திமுக இளைஞர் அணி, எம்.எல்.ஏ, சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என அவரது படிப்படியான அரசியல் வளர்ச்சியில், அவரது களப்பணியும் கடுமையான உழைப்பும் ஒருபுறம் இருந்தாலும், தந்தை கருணாநிதியின் செல்வாக்கும் அவரது வழிநடத்துதலும் ஸ்டாலினுக்குப் பக்கப் பலமாக அமைந்தது என்பதை மறுக்க இயலாது.

போட்டியில்லாத தலைமை

இந்த நிலையில்தான், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுக தலைவராக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, 'கருணாநிதி இல்லாத சூழ்நிலையில், ஸ்டாலினால் கட்சியை வழிநடத்திச் செல்ல முடியுமா... அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா..?' என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்ததைக் காட்டிலும், அவரது கட்சியினரிடமுமே இருந்தது.

ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தல், அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் எனத் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் கட்சிக்கு வெற்றித்தேடித் தந்து திமுக-வை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்தினார்.

* இன்றைய தேதியில் திமுக-வில் ஸ்டாலின் தலைமைக்கு போட்டியாளர் என்று யாருமில்லை.

* இன்னும் சொல்லப்போனால், இந்திய அளவில் அரசியல் கட்சி ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய பாதுகாப்பான தலைவர் என்றால் அது நிச்சயம் மு.க. ஸ்டாலின்தான். கூடவே முதல்வர் பதவி வேறு.

'கருணாநிதி பாணி அரசியல் இல்லை...'

இந்த அளவுக்கு சாதகமான சூழல் உள்ளபோதிலும், "தமிழக பிரச்னைகள் தாண்டி, அவர் தனது தந்தை கருணாநிதி போன்று தேசிய அளவிலான பிரச்னைகள், விஷயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதோ பேசுவதோ இல்லை" என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மருத்துவ உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27% இட ஒதுக்கீடு, மசோதா, புதியக் கல்விக் கொள்கை போன்ற பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்ட போதிலும், கருணாநிதி போன்று அன்றாட தேசிய பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல் கடந்து சென்று விடுகிறார்.

* கருணாநிதி ஒரு விஷயம் குறித்துப் பேசினால் அது தேசிய அளவில் நாளேடுகளில் செய்தியாகும். அதற்கான எதிர்வினைகள் உடனடியாக வெளிப்படும்.

* ஆனால், ஸ்டாலின் அதுபோல் செயல்படுவதில்லை. சில சமயங்களில் கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அது பெரும்பாலும் எடுபடுவதில்லை.

* விதி விலக்காக, இலவசங்கள் தொடர்பான சர்ச்சையில் நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் தெரிவித்த கருத்துகள் மட்டும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. இது மட்டுமல்லாது ஜிஎஸ்டி உள்ளிட்ட நிதித்துறை சார்ந்து அவர் தெரிவிக்கும் கருத்துகளும் கவனம் ஈர்க்கின்றன.

* இத்தனைக்கும் இலவசங்கள் தொடர்பாக ஸ்டாலின் தெரவித்த கருத்து ஏனோ தேசிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

தேசிய அரசியலில் அடக்கியே வாசிக்கிறார்

* இத்தனைக்கும் ஆட்சிக்கு வந்த புதிதில் தேசிய அளவிலும் தன்னை ஒரு முக்கியத்தலைவராக காட்டிக்கொள்ளும் விதமாக நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியது,

* பட்டாசு விற்பனை செய்வதற்கான தடையை நீக்கக்கோரி 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம் என சில நகர்வுகளை மேற்கொண்டார் ஸ்டாலின்.

* பின்னர் ஏனோ, கடந்த 10 மாதங்களாகவே, ஸ்டாலின் தேசிய அளவிலான அரசியலில் அடக்கியே வாசித்து வருகிறார். அவ்வப்போது பாஜக-வுக்கு எதிராக மட்டும் சில கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

அந்த எதிர்ப்பு கருத்துகளும், பிரதமர் மோடியுடன் அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது காட்டிய இணக்கமான போக்கு, டெல்லி சந்திப்பு, மோடி வருகையின்போது பாஜக-வினர் கிளப்பிய போஸ்டர் சர்ச்சையில் அந்தக் கட்சிக்கு இணக்கமாக நடந்துகொண்டது போன்றவை காரணமாக நீர்த்துப்போனதாகவே பார்க்கப்பட்டது.

பாஜக மீதான பயமா?

அண்டை மாநிலமான தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ், மோடியையும் பாஜக-வையும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். மோடி வந்தால் வரவேற்க செல்வதில்லை. மம்தாவும் இதே அதிரடியைத்தான் காட்டுகிறார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கிடுகிடுவென ஒவ்வொரு மாநிலமாக தனது கட்சியை வளர்த்து, மோடிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு விஸ்வரூபம் காட்டுகிறார்.

ஆனால், கருணாநிதியின் அடியைப் பின்பற்றி நடப்பதாக கூறும் ஸ்டாலின் ஏனோ, 40 ஆண்டுக் கால அரசியல் அனுபவம் இருந்தும் அவருக்குப் பின் அரசியலுக்கு வந்த அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே அளவுக்குக் கூட தேசிய அரசியல் குறித்த பிரச்னைகளில் அடக்கியே வாசிக்கிறார். இது பாஜக மீதான பயமா அல்லது தேசிய அரசியல் குறித்த ஸ்டாலினின் விருப்பமின்மையா என்பது தெரியவில்லை. ஆனால், இதன் தாக்கம் திமுக-வுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதைகாலம்தான் சொல்லும்!

அதே சமயம் மாநில அரசியலில் வழக்கம்போல் அடித்து ஆடுகிறது திமுக. அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகி உள்ள தகவல்கள் குறித்த முழுமையான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
தீபா - மாதவன்

``என் கணவர் டைவர்ஸ் கேட்டு டார்ச்சர் செய்கிறார்" - வேதனை பகிரும் ஜெ.தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தனது கணவர் மாதவன் தன்னை பிரிந்துவிடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
சாவர்க்கர்

"சாவர்க்கர் பறவையின்‌ இறக்கையில் தாய்நாடு வந்து செல்வார்" - பாடநூல் சர்ச்சையும் விளக்கமும்!

ர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னடப் பாடப்புத்தகத்தில் சாவர்க்கரைபற்றி இடம்பெற்றிருக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 1911-ம் ஆண்டு முதல் 1924-ம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்' என எழுதப்பட்டிருக்கிறது.

சர்ச்சையைக் கிளப்பி உள்ள இது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்: அதிக தொகை கடனாகப் பெற என்ன செய்ய வேண்டும்?

வீட்டை கடனில் வாங்கும்போது வீட்டின் மதிப்பில் 100% தொகைக்கும் கடன் கிடைக்காது. பொதுவாக, சொத்து மதிப்பில் 80% தொகைதான் கடனாகக் கிடைக்கும்.

இத்தகைய சூழலில் வீட்டுக் கடன் தொகையை அதிகமாகப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
கீர்த்தி சுரேஷ்

மிஸ்டர் மியாவ்: விஜய் படம்... கீர்த்தி சுரேஷ் வைக்கும் அன்பு கோரிக்கை!

'நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் இயக்கவிருக்கும் 'குற்றப் பரம்பரை' கதையை விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

மிஸ்டட் மியாவ் தரும் மேலும் பல சூடான சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...