Published:Updated:

வோடஃபோன் 'லீக்'கால் அதிர்ச்சி!-முந்தும் OPS- கேலிக்கூத்தான திமுக நிலை -நிலைப்பாடு|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights August 30
Listicle
Vikatan Highlights August 30

வணக்கம் வாடிக்கையாளர்களே... வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள்'லீக்' செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள அதிர்ச்சி தகவல்கள் குறித்த பின்னணி, எடப்பாடி அணி உடைக்கப்படுகிறதா, கிரிக்கெட்டர் பாபா இந்திரஜித்தின் பேட்டி உள்பட பல செய்திகள் இன்றைய விகடன் ஹைலைட்ஸில்...


1
வோடஃபோன் & ஐடியா

வோடஃபோன்: 30 கோடி Call records உள்ளிட்ட தகவல்கள் 'லீக்'... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனங்களின் ஒன்றான வோடஃபோன் ஐடியா ( Vi ) நிறுவனத்தின் சுமார் 30 கோடி வாடிக்கையாளர்கள் குறித்த முக்கியமான மற்றும் ரகசியமான தனிப்பட்ட தரவுகள் 'ஹேக்' செய்யப்பட்டு இணையதளங்களுக்கு 'லீக்' செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்தி, அதன் வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது.

கோட்டைவிட்ட வோடஃபோன் ஐடியா நிறுவனம்

சண்டிகாரைச் சேர்ந்த பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CyberX9 என்ற நிறுவனம், இந்த பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டி குழு இது தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், வோடஃபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு காணப்பட்ட பல முக்கியமான பாதுகாப்பு பாதிப்புகளைக் கண்டறிந்தது.

என்னெவெல்லாம் லீக் ஆகின..?

சைபர் தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடு ஒன்றை, வோடஃபோன் இந்தியா ( Vi) கவனிக்காமல் இருந்ததன் காரணமாக,

* கிட்டத்தட்ட 301 மில்லியன் ( 30.1 கோடி) வாடிக்கையாளர்களின் அழைப்புப் பதிவுகள் ( எந்த தேதி/நேரம், எந்த போனுக்கு பேசப்பட்டது, பேசிய கால அளவு உள்ளிட்ட Call records),

* call logs,அனைத்து எஸ்.எம்.எஸ் பதிவுகள், இண்டர்நெட் பயன்பாடு விவரம், லொக்கேஷன் விவரம்,

* வாடிக்கையாளரின் முழுப்பெயர், வோடஃபோன் எண், வீட்டு முகவரி, மாற்று தொலைபேசி எண்,

* பில் செலுத்தியதற்கான பரிவர்த்தனை விவரம், பிளான் விவரம் பல மாத பில் விவரங்கள், கிரெடிட் லிமிட் உட்பட

* வாடிக்கையாளரின் முக்கியமான மற்றும் ரகசியமான தனிப்பட்ட தரவுகள் கடந்த 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த இணைய தளங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கிருந்து 'ஹேக்' செய்யப்பட்டது?

இதில் சுமார் 20 மில்லியன் போஸ்ட்பெய்டு Vi வாடிக்கையாளர்களும் அடங்குவர்.

* Vi நிறுவனத்தின் பில்லிங் சிஸ்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடு அல்லது கவனக்குறைவு காரணமாகவே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவை மட்டுமல்லாது அவர்களது உயிர்களுக்குக்கூட அச்சுறுத்தல் இருந்துள்ளது.

இதை தாங்கள் கண்டுபிடித்து பொறுப்புடன் புகாரளித்த பின்னரே, வாடிக்கையாளர்களின் தரவுகள் லீக் ஆவதை Vi நிறுவனம் சரி செய்ததாக CyberX9 நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தங்களது பில்லிங் தகவல்தொடர்பு அமைப்பில் இருந்த குறைபாட்டை ஒப்புக்கொள்வதாகவும், இருப்பினும் தங்களது கவனத்துக்கு வந்தவுடன் அந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் Vi நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதற்காக அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த தணிக்கைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடைக்கப்படுகிறதா எடப்பாடி அணி?

இத்தகைய பரபரப்புகளுக்கு மத்தியில், அதிமுக-வைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான போட்டியில், எடப்பாடி அணி உடைக்கப்படுவதாக சமீபத்திய சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
எ.வ.வேலு, முதலமைச்சர் ஸ்டாலின்

8 வழிச்சாலை விவகாரம்: கேலிக்கூத்தான திமுக-வின் நிலைப்பாடு | A-Z என்ன நடந்தது?

"எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலை திட்டத்தை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்த தி.மு.கவினர், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பேச்சை மாற்றி, 'நாங்கள் சொல்லவேயில்லை' என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டானின் கருத்துக்கு நேர்மாறாக அமைச்சர் எ.வ. வேலு பேசுகிறார் என நான்கு பக்கங்ளிலும் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பலைகள் வீசுகின்றன.

உண்மையில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச்சாலை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்தது? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னதான் பேசினார்? முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்? இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம்... ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கை தாக்கல் - அடுத்து கட்டம் என்ன?

டந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, கட்சிக்குள் பிளவுக்கும் வழிவகுத்தது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. `ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியிடப்படும்' என்று திமுக, தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


4
பாபா இந்திரஜித்

"மறுக்கப்பட்ட இந்தியா A வாய்ப்பு; தோனி சொன்ன அந்த அறிவுரை!" - பாபா இந்திரஜித் எக்ஸ்க்ளூசிவ்

மிழக கிரிக்கெட் அணியைப் பின்தொடர்ந்து வரும் ஒவ்வொருவரும் நன்கு அறிந்த பெயர் பாபா இந்திரஜித். இவ்வாண்டு நடந்த ரஞ்சி கோப்பையில் தமிழக அணியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர் என்றால் அது இவர்தான். இந்நிலையில் செப்டம்பர் மாதம் இந்திய A அணி நியூசிலாந்து A அணியுடன் விளையாட உள்ளது. ஆனால் அந்த அணியில் இந்திரஜித்திற்கு இடம் கிடைக்காதது ஒரு பேசுபொருள் ஆகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேசும்போது...

இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் விகடனுக்காக அளித்த பேட்டியில் பாபா இந்திரஜித், தன் கரியர் குறித்தும், இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடும் தன் கனவு இதுவரை நிறைவேறாதது குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவர் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
சினேகா

"எதிர்பார்ப்புல மட்டுமே கரையுது எங்க வாழ்க்கை!" - 'பேரழகன்' சினேகாவின் கண்ணீர்க் கதை

றுமை, பால்யத்திலேயே கற்பகத்துக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வீடே கதியாய் முடங்கியவருக்கு, முகவரி கொடுத்தது சினிமா உலகம். 'பேரழகன்' திரைப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், 'சினேகா' கதாபாத்திரம் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்தி உட்பட பல மொழிகளிலும் 30-க்கும் அதிகமான படங்களில் நடித் திருந்தாலும், பொருளாதார சவால் இன்றுவரை கற்பகத்தை விடாமல் துரத்துகிறது.

சென்னை, வியாசர்பாடி தினசரி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கற்பகத்தின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். வீட்டு வாசற்படியிலுள்ள சிறிய நடைபாதையில் அமர்ந்து வியாபாரத்தைக் கவனித்தவாறே தன் கதையை விவரித்தார். அதனை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...