Published:Updated:

ரயில்வே,CUET தேர்வு..தவிக்கும் தமிழக மாணவர்கள் - அண்ணாமலை ஆவேசம்-ஆள் பிடிக்கும் OPS|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 1
Listicle
Vikatan Highlights September 1

ரயில்வே, CUTE தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கான காரணங்கள், பாஜக தலைவர் அண்ணாமலையின் திடீர் ஆவேசம், கழுகார் அப்டேட்ஸ், இந்திய அணி சரிசெய்ய வேண்டியது என்ன என்பது உள்பட பல செய்திகள்


1
ரயில்வே துறை

'ஆந்திராவில் ரயில்வே EXAM, லட்சத்தீவில்  CUET தேர்வு, இந்தியில் கேள்வித்தாள்...' - தவிக்கவிடப்படும் தமிழக மாணவர்கள்!

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே, அஞ்சல் துறை, வருமான வரித்துறை எனப் பல்வேறு மத்திய அரசு பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசு அது குறித்து சிறிதும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில், 'தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தவிக்கட்டும்' என்ற நோக்கத்திலேயே மத்திய அரசின் கடந்த ஒரு வார கால நிகழ்வுகள் உணர்த்துவதாக கொந்தளிப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

நிகழ்வு - 1

* மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மாணவர் லோகேஸ்வர். இவர் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக 'கியூட்' (CUET) எனப்படும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தார்.

* இரண்டு முறை விண்ணப்பித்தும் அவருக்கான தேர்வு மையமாக லட்சத்தீவு தலைநகர் கவரட்டியில் உள்ள மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 30 -ம் தேதியன்று நுழைவுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக கிடைக்கப்பெற்ற இந்தத் தகவலால் அந்த மாணவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

கடிதம் எழுதிய சு.வெங்கடேசன்...

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக அந்த மாணவர், தனது தந்தையுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனைச் சந்தித்து முறையிட்டனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக,

* ஒதுக்கப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல. எனவே அவருக்கான மையத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் " என வலியுறுத்தி, மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் கே.சஞ்சய் மூர்த்திக்கு கடிதம் அனுப்பினார்.

அவரது இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை செயலாளரின் உத்தரவின் பேரில், தேசிய தேர்வு முகமை மற்றும் திருவாரூர் பல்கலைக்கழகத்திலிருந்து, மாணவர் லோகேஸ்வருக்கு வந்த தகவலில்,

* தேர்வு மையத்தை மதுரை மாவட்டம் நாகமலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வு -2

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3,769 காலியிடங்களை நிரப்ப Group D தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டத்தேர்வு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட தேர்வு கடந்த 26 -ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து, மூன்றாவது கட்ட தேர்வு வரும் 8 முதல் 19-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தேர்வை எழுத

* தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அந்த மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* உதாரணத்துக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்ற மாணவர் சேலம் அல்லது சென்னை பகுதியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், அவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பா தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு கடும் போட்டி நிலவும் தற்போதைய சூழலில், தேர்வு மையம் எங்கு போடப்பட்டாலும் அங்கு சென்றாக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாக அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், தேர்வை நல்லபடியாக எழுதினாலும், கடந்த காலங்களில் ரயில்வே வேலைகளில் தமிழக இளைஞர்கள் வஞ்சிக்கப்பட்டதுபோன்று, இந்த முறையும் நடக்குமோ என்ற அச்சமும் அவர்களிடையே நிலவுகிறது.

நிகழ்வு - 3

"செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம்" (PM Young Achievers Scholorship Award Scheme for Vibrant India) பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு இம்மாதம் 11 -ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இது 9 வது வகுப்பு 11வது வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும்.

இந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என "திட்ட தகவல் அறிக்கை" மற்றும் "பொது அறிவிக்கை" யில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னையிலும் தலையிட்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்-க்கு கடிதம் எழுதியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, "கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,

* "அடித்தள மாணவர்கள் பயன் பெற என ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித்தாள் தருவேன் என்பது என்ன நியாயம்?

* கிராமப்புற மாணவர்கள் - அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவர்களோடு போட்டி போடுவார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம். அநீதி.

* கடந்த ஆண்டு இதே போன்ற பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்காதா?

* உங்கள் இந்தி வெறி தணியாதா?

* இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தவிக்கட்டும் என்று எண்ணுகிறீர்களா? " என அந்தக் கடிதத்தில் அவர் மிகக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மாணவர்களைத் தொடர்ந்து தவிக்கவிடும் போக்கை மத்திய அரசும், அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள தேர்வு முகமைகளும் என்றுதான் கைவிடப்போகின்றனவோ..?


2
அண்ணாமலை

" நான் இயேசுநாதர் அல்ல; திருப்பி அடிப்பேன்!" - அண்ணாமலை

மதுரை செருப்பு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

இருவரிடையே மோதலின் உச்சமாக, "தமிழ்நாட்டின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு" என பி.டி.ஆர் போட்ட ட்வீட்டுக்கு, "என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை" என அண்ணாமலை பதிலளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் இயேசுநாதர் அல்ல; திருப்பி அடிப்பேன்!" என மீண்டும் திரி கொளுத்தி உள்ளார். அதனை விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: அதிகாரமில்லாத அண்ணாமலை...ஆள்பிடிக்கத் தொடங்கிய ஓ.பி.எஸ்!

டப்பாடிக்கு ஆதரவாக இருந்த பலரும் இப்போது ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாவட்ட நிர்வாகிகளைவிட திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க-வினர்தான் அதிக அளவில் ஓ.பி.எஸ்-ஸைச் சந்திக்க வருகிறார்களாம்...

கழுகார் தரும் பல பரபரப்பான அரசியல் அப்டேட்ஸ்-களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
ஹேக்கிங்

சட்டவிரோதமாக விற்கப்பட்ட ரூ.28 கோடி ரயில் டிக்கெட்டுகள்! - அதிரவைத்த சாஃப்ட்வேர் ஹேக்கிங்

ந்திய ரயில்வேயின் வலைதளமான, இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) போர்ட்டலிலிருந்து, சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை, சட்டவிரோத மென்பொருளைப் (software) பயன்படுத்தி வாங்கி, பயணிகளுக்கு அதிக தொகைக்கு விற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இது தொடர்பான அதிரவைக்கும் விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
IND vs HKG

IND vs HKG: ராகுலிடம் இல்லாத இன்டென்ட்டை வெளிப்படுத்திய ஹாங்காங்; இந்தியா சரிசெய்ய வேண்டியது என்ன?

ந்திய ஏபிடி சூர்யக்குமாரின் பேட் ஹாங்காங் பந்துவீச்சை சூறையாடி, சூப்பர் 4-க்குள் இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், லீக் சுற்றில் இரண்டு போட்டிகளையுமே இந்தியா வென்று, அதிரடியாக சூப்பர் 4-ல் நுழைந்துள்ளது.

இத்தகைய சூழலில் இந்தியா சரிசெய்ய வேண்டியது என்ன என்பது குறித்த ஒரு விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
மொய்விருந்து

மொய்விருந்து: விழிபிதுங்கும் சம்சாரிகள்!

டந்த வாரம் தமிழகத்தில் பேசுபொருளானது, பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் ரூ.10 கோடி மொய் வாங்கிய விவகாரம். அதென்ன மொய்விருந்து..? இப்படிக் கேட்டால், " 'சின்னக்கவுண்டர்' படத்தில் சுகன்யா நடத்துமே, விஜயகாந்த்கூட விருந்து சாப்பிட்டு இலைக்குக்கீழே பணம் வைத்துவிட்டுச் செல்வாரே... அதுதானே" என்பார்கள் சிலர். ஒருகாலத்தில் உறவுகளுக்குள் நடந்துவந்த இந்த மொய்க் கலாசாரம் இன்று ஜாதி, மதம் கடந்து பந்தமாக விரிவடைந்திருக்கிறது.

இந்த மொய்விருந்தில் சாதகங்களும் இல்லாமல் இல்லை என்றாலும், ஆடி, ஆவணி என்றில்லாமல் வருடம் முழுக்க நடத்தப்படும் மொய்விருந்துகளால் சம்சாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இது குறித்த விரிவான தகவல்ளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
Cobra Review | கோப்ரா விமர்சனம்

'கோப்ரா' விமர்சனம்

ணித அறிவை வைத்து தடயமே இல்லாமல் கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும் பாம்பு - கீரி யுத்தமே இந்த `கோப்ரா'. அப்பாவி கணக்கு வாத்தியார், பல கெட்டப்கள் போட்டு சர்வதேச அளவில் கொலைகள் செய்யும் கொலைகாரன், மற்றுமொரு சர்ப்ரைஸ் (!) பேக்கேஜ் என விக்ரமின் நடிப்பு ஆர்வத்துக்கு இது மெகா சைஸ் விருந்து...

'கோப்ரா' விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...