Published:Updated:

திமுக கூட்டணி:கார்த்தி சிதம்பரத்தால் கலகமா?எடப்பாடியிடம் அதிமுக- பெருமித விக்ராந்த்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 2
Listicle
Vikatan Highlights September 2

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கலகத்தை உண்டுபண்ண நினைக்கிறார் என கொதிக்கிறது கதர்கட்சி வட்டாரம்... அதற்கான காரணம் என்ன..? எடப்பாடிக்கு சாதகமாக வந்த தீர்ப்பினால் ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்... அண்ணாமலை Vs பிடிஆர் மோதலில் நடப்பது என்ன..? INS விக்ராந்த் கப்பலின் சிறப்புகள் என்ன...


1
கார்த்தி சிதம்பரம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி: கலகத்தை ஏற்படுத்துகிறாரா கார்த்தி சிதம்பரம்?

ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கட்சிக்கு ஓரளவு ஆக்சிஜன் அளித்துக்கொண்டிருப்பது தமிழகம், கேரளா போன்ற தென்மாநிலங்கள்தான்.

தமிழக காங்கிரஸின் நிலை

அதே சமயம் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய அளவுக்கு அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதும், திமுக-வின் கூட்டணி தயவில்தான் 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் கணிசமான இடங்களைப் பெற முடிந்தது என்பதும் காங்கிரஸ் கட்சியினரே ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.

இதனாலேயே,

* தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது திமுக கூட்டணியிலிருந்து கழற்றிவிட வைக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொள்வதாகவும் செய்திகள் வெளியானது உண்டு.

* 'காங்கிரஸைக் கழற்றிவிட்டால் உங்கள் ஆட்சிக்கு சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்' என சில தூதர்கள் மூலம் திமுக மேலிடத்துடன் பாஜக டீல்' பேசியதாகவும், ஆனால் அதை ஏற்க திமுக தலைமை மறுத்துவிட்டதாகவும் கூட 2021 சட்டசபை தேர்தலையொட்டித் தகவல் வெளியாகி இருந்தன.

வெளியேறும் அதிருப்தி தலைவர்கள்

இந்த நிலையில்தான், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைகளை பாஜக தொடங்கிவிட்டது. தற்போதைக்கு அதற்கு சவாலாக இருப்பது மாநில கட்சிகள்தான் என்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

* அதற்கு ஏற்றாற்போல் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுத்து வருவதால், காங்கிரஸ் கட்சியினரிடையே கட்சியின் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கை தலைதூக்கி உள்ளது.

* தலைமை மீதான அதிருப்தியில் கபில்சிபல், குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர்.

தந்தை அமைதி... தனயன் கலகம்

இவ்வாறு அதிருப்தியில் இருக்கும் தலைவர்களில் முன்னாள் மத்திய நிதியமைச்சரான தமிழகத்தின் ப.சிதம்பரமும் ஒருவர் என்றாலும், அவர் சோனியா காந்தி குடும்பத்தினர் மீதான தனிப்பட்ட மரியாதை காரணமாக கட்சித் தலைமைக்கு எதிராக வெளிப்படையாக எதுவும் பேசாமல் உள்ளார்.

ஆனால், அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் அவ்வாறு இல்லை. கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் விமர்சனங்களைப் பதிவிடுவது உண்டு.

* இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதற்கான தேர்தல் முடிவுகள் வெளியானபோது, "நெட்பிளிக்ஸ்-ல் பார்க்க ஒரு நல்ல படத்தை பரிந்துரை செய்யுங்களேன்..." எனச் சொந்த கட்சியையே கலாய்த்து ட்வீட் போட்டிருந்தார் கார்த்தி சிதம்பரம்.

காங்கிரஸார், திமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

இது அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்,

* " தந்தையின் செல்வாக்கில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி போட்டியிட்டு ஜெயித்தால் இப்படித்தான் ட்வீட் போடத்தோணும்" என அவரது ட்விட்டர் பக்கத்திலேயே வந்து சொந்த கட்சியினரே கடுமையாக சாடி இருந்தனர்.

* அதேபோன்று, திமுக ஆதரவாளர்களும், " இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் இடம் ஒதுக்க வேண்டும்" எனக் கொதிப்புடன் கருத்து தெரிவித்திருந்தனர்.

பாஜக-வுடன் நெருக்கமா?

இத்தகைய சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டத்தில், கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா மறுத்த வீடியோ, இணையத்தில் வைரலானது. ' மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் உங்கள் தேசபக்தி இவ்வளவுதானா..?' என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்த நிலையில்,

* ஜெய் ஷாவுக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்தும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், நேற்று கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை சென்றார் கார்த்தி சிதம்பரம். அதே விமானத்தில் கேரளா செல்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்திருந்தார்.

* அப்போது அண்ணாமலையுடன் விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம், ட்விட்டரில் வைரலானது.

கலகத்தை ஏற்படுத்திய கருத்து

அத்துடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம்,

* " தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் உள்ளது. ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் எங்களுக்கு இடம் இல்லை. ஆனால் ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம்.

* மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும். ஆனால் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் அதை பற்றி பேச முடிவது இல்லை. சுதந்திரமாக பேச முடிவது இல்லை" எனக் கூறினார்.

'பாஜக-வின் ஸ்லீப்பர் 'செல்'லா?'

இதைத் தொடர்ந்து, கடந்த கால நிகழ்வுகள் தொடங்கி நேற்றைய நிகழ்வுகள் வரை குறிப்பிட்டு, " பாஜக-வில் சேர்வதற்கான முன்னோட்டமா... நீங்கள் பாஜக-வின் ஸ்லீப்பர் 'செல்'லா... தமிழகத்தின் குலாம் நபி ஆசாத்..." என்றெல்லாம் அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலிருந்தே விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

மேலும், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் கலகத்தை உண்டுபண்ணுகிறார், பாஜக-வின் அஜெண்டாவை சிறப்பாக செயல்படுத்துகிறார்..." என்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக திமுக ஆதரவாளர்களும் காட்டமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.


2
எடப்பாடி பழனிசாமி

அதிமுக: எடப்பாடிக்கு எதிரான தீர்ப்பு ரத்து; மீண்டும் கைக்கு வந்த அதிகாரம்!

"அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது" எனத் தனி நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்குப் பெரும் பின்னடவையும், ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு குதூகலத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு மூலம், கட்சியின் அதிகாரம் மீண்டும் எடப்பாடி தரப்புக்கு வந்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
பன்னீர் செல்வம்

" உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!" - பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஓபிஎஸ்

டந்த சில ​நாள்களாகத் தனது சொந்த ஊரான தேனி மாவட்ட​ம், பெரியகுளத்தில்​ தங்கி ஆதரவாளர்களைச் சந்தித்து வந்த பன்னீர்செல்வம்​, அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் இன்று அவருக்குப் பாதகமான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து​ இன்று​ மதியம்​ சென்னைக்குப் புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்க​ளைச் சந்தித்த அவர், ``இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" எ​ன்றார்.இது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


4
பி.டி.ஆர் Vs அண்ணாமலை

பி.டி.ஆர் Vs அண்ணாமலை - பொதுவெளியில் முற்றும் மோதல்... என்ன நடக்கிறது?!

மீபகாலமாக, பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இணக்கமான உறவைப் பேணிவருகிறார். இந்த நேரத்தில், தி.மு.க அரசுமீது கடும் விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுப்பிவரும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.

கடந்த மாதம் மதுரையில் நடந்த காலணி வீச்சு சம்பவத்துக்குப் பிறகு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே தொடங்கிய வார்த்தைப் போர், தற்போது தீவிரமடைந்திருக்கிறது. இது குறித்த தகவல்களை விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்...


5
விக்ராந்த்

18 மாடி; ரூ.20,000 கோடி; 2 கால்பந்து மைதானத்தின் நீளம் - வியக்க வைக்கும் `விக்ராந்த்' போர்க்கப்பல்!

ஐ.என்.எஸ் விக்ராந்த் - முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பல். இந்தக் கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

20,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கப்பலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
சமந்தா

" நான் மோடியின் ஆதரவாளர்..." - சமந்தா-வின் திடீர் வைரல் வீடியோ... 

'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா...' பாடலின் ஹிட்டிற்குப் பிறகு நடிகை சமந்தாவின் கருத்துகள் பலவும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், "நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று சமந்தா கூறும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை எப்போது, எங்கே, எதனால் பேசினார் என்பதை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...