Published:Updated:

TATA-வின் 'மாந்த்ரீகம்:சுவாமி ட்வீட் ஏன்?-திமுக-வினரின் ஆவல்-தயாராகும் விஜய் மகன்!|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 5
Listicle
Vikatan Highlights September 5

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு மாந்த்ரீகத்தையும் ரத்தன் டாடாவையும் தொடர்புபடுத்தி சுப்பிரமணியன் சுவாமி போட்ட சர்ச்சை ட்வீட், 'துர்கா' கோயிலில் திமுக-வினர் குவிய காரணம் தரும் கழுகார் அப்டேட்ஸ், பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் யார்?


1
சைரஸ் மிஸ்த்ரி

சைரஸ் மிஸ்த்ரி-யின் மரணத்துக்கு TATA-வின் 'மாந்த்ரீகம் காரணமா?' - சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை ட்வீட்!

பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு டாடா குழுமத்தின் மீதும் ரத்தன் டாடா மீதும் என்ன கோபமோ தெரியவில்லை.

சாலை விபத்தில் மரணமடைந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும், கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி-யின் மரணம் தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புபடுத்தி அவர் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தும்... 'சீட் பெல்ட்'டும்!

டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும், கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்தின் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி நேற்று மும்பை அருகே பால்கர் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். சைரஸ் மிஸ்த்ரி மரணம் தொழில் துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

விபத்துக்குள்ளான கார்

சைரஸ் மிஸ்த்ரி விபத்தில் உயிரிழந்ததற்கு, பயணத்தின்போது மிஸ்த்ரி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே முக்கிய காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனந்த் மஹிந்த்ராவின் அட்வைஸ்

இந்த நிலையில், இது தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள

* பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் 'சீட் பெல்ட்'டின் அவசியத்தை வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில்,

* "காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும், எப்போதும் சீட் பெல்ட்டை அணியத் தீர்மானித்துள்ளேன்.

* நாம் அனைவரும் நமது குடும்பங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம்.

* எனவே பின் இருக்கையில் இருந்தாலும் 'சீட் பெல்ட்' அணிவதாக என்னைப் போன்றே உறுதிமொழி எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா போன்றே மேலும் பலரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

சுவாமியின் சர்சை ட்வீட்

இந்த நிலையில், சைரஸ் மிஸ்த்ரி மரணத்தின் பின்னால் 'சதி' இருப்பது போன்று சந்தேகம் தெரிவித்தும், ரத்தன் டாடாவை விமர்சித்தும் பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள கருத்து அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

சைரஸ் மிஸ்திரிக்கும் 'டாடா'வுக்கும் என்ன பிரச்னை?

* சைரஸ் மிஸ்திரி, கடந்த 2012 -ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக பதவி வகித்தார்.

* டாடா ( TATA) வின் குடும்ப வாரிசு அல்லாத இரண்டாவது நபராக இப்பதவியை வகித்த சைரஸ் மிஸ்திரிக்கு நிர்வாக ரீதியாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு அப்பதவியிலிருந்து தானாக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

* ஆனால், அவர் பதவியில் இருந்து விலகாத நிலையில், நிர்வாக குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அப்போது சர்ச்சையும் பரபரப்பும் ஏற்பட்டது.

* இது இரு தரப்புக்கும் இடையே கசப்பாக மாறியது. மிஸ்திரி, தனது வெளியேற்றத்திற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என டாடா நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு இழுத்தார்.

* " சில மாதங்களுக்கு முன்பு தனது பணி பாராட்டப்பட்டதாகவும், தலைவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கான காரணங்களை அறிய விரும்புவதாகவும் அப்போது மிஸ்திரி கூறி இருந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் அதன் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் மிஸ்திரி குடும்பத்துக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில், தன் கைவசம் வைத்துள்ள அந்த பங்குகளை விற்றுவிட மிஸ்திரி குடும்பம் விரும்பிய போதிலும், அவர்கள் சொல்லும் பங்கின் மதிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும், அசல் மதிப்பு அவ்வளவு இல்லை என்றும் டாடா சன்ஸ் கூறி வந்தது.

சுப்பிரமணியன் சுவாமி

TATA மீது 'மாந்த்ரீக' குற்றச்சாட்டு

இந்த நிலையில்தான், டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவை Rattan Tata எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக Rotten Tata (அழுகிய டாடா ) எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

* "ராட்டன் டாடாவும் டாடா அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் உள்ள அவரது தமிழ் அடிவருடிகளும், தங்கள் நிறுவனத்தின் கற்பனை எதிரிகளை குறிவைக்க மலையாள தந்திரி பூஜாரிகளுக்கு பணம் கொடுத்து, மாந்திரீக பூஜைகளில் இறங்குவது அதிர்ச்சியளிக்கிறது" என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

அதாவது, பழைய பகை காரணமாக சைரஸ் மிஸ்திரிக்கு ரத்தன் டாடா மலையாள மாந்த்ரீகர்கள் மூலம் வைத்த செய்வினைதான் காரணம் என்ற அர்த்தம் வருவதுபோல அவரது கருத்து வெளிப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு அவரது பதவிலேயே பலரும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

" இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் ஏதேனும் சதி நடந்ததா என்ற சந்தேகம் உங்களுக்கு உண்டா? சுவாமி தீய சக்திகளிடம் தன் மனசாட்சியை சரணடைய வைத்துவிட்டார். இவர் ஏன் எப்போதும் மற்ற நிறுவனங்களையெல்லாம் விட்டுவிட்டு, டாடாவையே குறிவைக்கிறார்..?" என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சைரஸ் மிஸ்த்ரி விபத்துக்கு என்ன காரணம்... போலீஸ் சொல்வதென்ன என்பது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


2
புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா

மாணவிகளுக்கு ரூ.1,000: 'புதுமைப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், " 'புதுமைப்பெண்' திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டங்கள் நமது ஆட்சியின் அடையாளங்கள். அனைவருக்குமான வளர்ச்சி, எல்லாருக்கும் எல்லாம் என்பதை அரசின் நோக்கம்..."

முதல்வர் ஸ்டாலினின் முழுமையான பேச்சைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: பாஜக மகளிரணி நிர்வாகியின் ஆசை முதல் 'துர்கா' கோயிலில் குவியும் திமுக-வினர் வரை!

அமைச்சருக்கு உடம்பு சரியில்லை... காரணம் அமலாக்கத்துறை?!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடக்கவிழா உட்பட கடந்த சில நாள்களாக நடந்த அரசு விழாக்கள் எதிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லையாம். கட்சிக்காரர்கள் விசாரித்தால், "அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை" என்று காரணம் சொல்லப்படுகிறதாம். உண்மையில், அமலாக்கத்துறை ...

பா.ஜ.க மகளிரணி நிர்வாகியின் காய்நகர்த்தல், புதுச்சேரியில் புலம்பும் எம்.எல்.ஏ-க்கள், மிரட்டப்படும் பெண் மேயர்... துர்கா ஸ்டாலினின் குலதெய்வக் கோயிலில்

போட்டி போட்டுச் செலவு செய்யும் உ.பி-க்கள்... என கழுகார் தரும் மேலும் பல அப்டேட்ஸ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
இந்திய| பொருளாதார வளர்ச்சி

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிய இந்தியா... 75 ஆண்டுகளில் சாதித்தது என்ன?

பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ள போதிலும், பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்தியா வலுவடைந்தே உள்ளது.

2021-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இத்தகவலை சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் 'புளூம்பெர்க்' ஊடக நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.

இதற்கான காரணம், பொருளாதார ரீதியாக இந்தியாவின் கடந்த 75 ஆண்டுகள் சாதனை உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
சஞ்சய், விஷால்

கோலிவுட் ஸ்பைடர்: ரகசிய பயிற்சிகள்...மகனைத் தயார்படுத்தும் விஜய்! 

ஹங்கேரியிலிருந்து துபாய் வழியாகத் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார் இளையராஜா. அதேசமயம் துபாயிலிருந்து சென்னைக்குத் திரும்பினார் ரஹ்மான். இருவரும் விமானத்தில் ஏறும்போது நாலைந்து சீட் தள்ளித்தான் உட்கார்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இருவருமே செல்போனைப் பார்த்துக் கொண்டு வந்ததில் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளவில்லை...

'கோலிவுட் ஸ்பைடர்' தரும் இன்னும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ்

ரிஷி சுனக்கை தோற்கடித்து பிரிட்டனின் புதிய பிரதமரான லிஸ் ட்ரஸ்... யார் இவர்?!

பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான இறுதிச்சுற்றில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸும் மோதினர்.

முதல் ஐந்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முன்னிலை வகித்தாலும், அவருக்கு டஃப் கொடுத்தது லிஸ் ட்ரஸ்தான். யார் இவர்? பிரிட்டன் பிரதமர் தேர்தல் தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...