Published:Updated:

'எடப்பாடிக்கு என்னாச்சு?'-ராகுல் யாத்திரை -நிதிஷ் திட்டம் -பால் விஷமா... அமிர்தமா?|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 7
Listicle
Vikatan Highlights September 7

'திமுக எம்எல்ஏ-க்கள் 10 பேர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாக' எடப்பாடி பழனிசாமி இன்று கூறியுள்ளார் அது உண்மையா..? ஸ்டாலின் கொடுத்த கொடியுடன் ராகுல் காந்தி தொடங்கிய யாத்திரை, சமூக ஊடக குழுக்கள் பின்னணிக்கு அரசியல் காரணமா, அரசியல் கிசுகிசு, ராஜ்கிரண் மகளின் திடீர் திருமணம்...


1
எடப்பாடி பழனிசாமி

'எடப்பாடிக்கு என்னாச்சு?' - 10 திமுக எம்.எல்.ஏ-க்கள் பேசுவது உண்மையா?

திமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக எம்எல்ஏ-க்கள் 10 பேர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு பக்கம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது என்றாலும், ' எடப்பாடிக்கு என்ன ஆச்சு..?' என்ற ரீதியில்தான் ரியாக்சன்கள் வெளிப்பட்டுள்ளன.

தேர்ந்த அரசியல்வாதி

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக-வில் நடந்த குளறுபடிகள், குழப்பங்களைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கடைசி வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், அதிமுக-வை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதும் அரசியலின் நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொண்ட ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகவே அவரைப் பார்க்க வைத்தது.

மேலும் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுவது போன்றவற்றையும் அவர் அசால்டாகவே எதிர்கொண்டார்.

'எடப்பாடிக்கு என்ன ஆச்சு..?'

இந்த நிலையில், தற்போது

* திமுக எம்எல்ஏ-க்கள் 10 பேர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாக எடப்பாடி கூறியிருப்பதை திமுக ஆதரவாளர்கள் கேலியுடன் விமர்சித்து வருகின்றனர்.

* " ஆளும் கட்சியில் இருப்பவர்கள் ஏன் இவரிடம் பேசுகிறார்கள்... இவரது கட்சிக்குப் போகப்போகிறார்கள்... எடப்பாடி பேசுவதில் 'லாஜிக்' இருக்கா..?" என்ற ரீதியில் திமுக தரப்பில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

* அதிமுக-வினரும், "எடப்பாடிக்கு என்ன ஆச்சு..?" என்ற ரீதியில்தான் இந்த விஷயத்தைப் பார்க்கின்றனர்.

'அப்செட்'டுக்கு என்ன காரணம்?

இந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பன்னீர் செல்வத்துடன் மோதி, நீதிமன்றம் மூலம் தற்காலிக வெற்றி பெற்றுள்ள போதிலும்,

* பன்னீர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது, பன்னீருக்கு சசிகலா மற்றும் தினகரன் தரப்பிலிருந்து நீட்டப்படும் ஆதரவுக்கரம் போன்றவை எடப்பாடியை வெகுவாக அப்செட் ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அண்மையில் கோவை மாவட்டத்திலிருந்து

* முன்னாள் எம்.எல். ஏ ஆறுக்குட்டி உள்ளிட்ட கணிசமான அதிமுகவினர் திமுக-வில் சேர்ந்ததும், மேலும் பலரைத் தூக்க திமுக காய் நகர்த்தி வருவதாக வெளியான செய்திகளும் அதிமுக முகாமில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

* அதுமட்டுமல்லாமல், அடுத்த அதிர்ச்சியாக அதிமுக-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் திமுக-வில் சேர இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் இன்னொரு தகவலும் வெளியானது.

'உற்சாக' உத்தியா?

இவையெல்லாம் சேர்ந்துதான் எடப்பாடியைக் குழப்பத்தில் தள்ளி இருப்பதாக அவரது ஆதரவு வட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் மேற்கூறிய நிகழ்வுகளால் கட்சியினர் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதாலும், அவர்களை உற்சாகமாக வைத்திருக்கும் உத்தியாகவே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி, கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முழு விவரங்களையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
பாரத் ஜோடோ யாத்ரா

ஸ்டாலினிடமிருந்து தேசியக்கொடியை வாங்கிய ராகுல்... குமரியில் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்ரா!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியதையொட்டி, இன்று காலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், மதியம் கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர், கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

ராகுல் காந்தியின் யாத்திரை தொடர்பான செய்திகளின் தொகுப்பை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
சமூக ஊடகக் குழு - தமிழ்நாடு போலீஸ்

சமூக ஊடகக் குற்றங்களைத் தடுப்பதில் தமிழ்நாடு போலீஸ் தீவிரம் - அரசியல் காரணமும் உண்டா?!

சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும், 203 போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் `சமூக ஊடக குழுக்கள்' அமைக்கப்பட்டுள்ளன.

"சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுக்க இக்குழு உதவும்" என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார்.

ஆனால், அரசுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்பதற்காகவே புதிதாக ஒரு குழு போடப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ள நிலையில், அது உண்மையா, திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் சொல்லப்படுவது என்ன என்பதை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


4
லாலுவுடன் நிதிஷ் குமார்

நிதிஷ் குமாரின் 'மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?!

`மிஷன் ஆப்போசிஷன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் வேலைகளைச் செய்துவருகிறார் நிதிஷ்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக வேறு சில தலைவர்களையும் சந்திக்கவிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோரை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய அரசியலில் நிதிஷ் குமாரின் கணக்குகள் பலிக்குமா? இது குறித்த அலசலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
கிசுகிசு

கிசுகிசு: சிரிப்பாய் சிரிக்க வைத்த ஆளும் கட்சி 'மில்க் புள்ளி'யின் கோரிக்கை!

மிழ்த் திரைப்பட விருதுகள் பல வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருந்தது குறித்தும், கடந்த ஆட்சியிலேயே விருதுகளுக்கான தங்கம் வாங்கி பத்திரப்படுத்திவைக்கப்பட்டிருந்தது. செய்தி முதன்மையானவரின் கவனத்துக்குப் போக, துறைரீதியான அமைச்சரிடம் விசாரித்தாராம். 'இலைக் கட்சி ஆட்கள் அவர்களுக்கு ஆதரவான ஆட்களைத் தேர்வுசெய்து பட்டியல் ரெடி செய்திருக்கிறார்கள்' என்றாராம் அமைச்சர்.

ஆனாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களை மாற்றாமல், அவற்றையே அரசின் தேர்வாக அறிவிக்கச் சொன்னாராம் முதன்மையானவர். இலைக் கட்சி, காவிக் கட்சிக்கு ஆதரவான பல ஆட்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி இதுதானாம்.

இது தவிர, சிரிப்பாய் சிரிக்க வைத்த 'மில்க் புள்ளி'யின் கோரிக்கை, 'இனிஷியல்' புள்ளி மீது துணிவானவருக்கு வந்த திடீர் பயம், 'பணிவானவரின்' ஒரே நம்பிக்கை, காவிக் கட்சி குறித்து முதன்மையானவர் போட்ட உத்தரவு என கிசுகிசு பகுதியில் இடம்பெற்ற மேலும் பல அரசியல் சீக்ரெட்ஸ்-களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
பால்

பால் 'வெள்ளை விஷமா'... அமிர்தமா?

பால் பற்றி இங்கே நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. அதை 'வெள்ளை விஷம்' என்று ஒரு தரப்பினர் கூற, இன்னொரு தரப்பினர் அதை 'அமிர்தம்' என்கின்றனர்.

தவிர, பாலில் நிறைய கலப்படம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். A1, A2 என்றெல்லாம் ஏதேதோ கணக்கீடுகளைச் சொல்கிறார்கள். சிலர் 'நாட்டுப்பசுவின் பாலே நல்லது' என்கிறார்கள். சிலர் 'எருமைப் பாலில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன' என்கிறார்கள்.

இப்படி பால் குறித்து நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. அதனால் அதன் அடிப்படையிலிருந்து நாம் அலசவேண்டியுள்ளது. மனிதனுக்குப் பால் என்ற உணவு உண்மையிலேயே தேவைதானா? மனிதன் தோன்றிய காலத்திலிருந்து பாலை உணவாக உட்கொண்டானா?

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


7
முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா, ராஜ்கிரண்

ஃபேஸ்புக் மூலம் காதல்; நடிகர் ராஜ்கிரணின் மகளைக் கரம் பிடித்தார் சீரியல் நடிகர் முனீஸ்ராஜா!

டிகர் ராஜ்கிரணின் மகளுக்கும் நடிகர் சண்முகராஜனின் தம்பியும் சீரியல் நடிகருமான முனீஸ்ராஜாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

"ராஜ்கிரண் வீட்டில் ராஜ்கிரண் மகளின் முடிவுக்குச் சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஜீனத்தின் அம்மா மட்டும் இன்னும் சமாதானம் ஆகவில்லை" என்கிறார்கள்.

முனீஸ்ராஜா இது குறித்து என்ன சொல்கிறார்..? விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...